விளக்கு ஒளியைப் பார்த்தால் தும்மல் வருகிறதா? - மிஸ்டர் ரோனி
கிகா |
உடல் நீலம் அல்லது சாம்பல்
பூத்தது போல தெரிகிறதா? இதனை ஆர்க்கியா என்று அழைப்பார்கள். வெள்ளி உடலுக்குள் செல்லும்போது
உடலிலுள்ள தோலின் நிறம் மாறுகிறது. வெள்ளி ரத்தவோட்டத்தில் உப்பாக கலக்கும்போது தோலின்
வழியாக நீலம் அல்லது பழுப்பு நிறத்தில் தெரிகிறது. பாதிப்புக்கு நீங்கள் சரியான சிகிச்சையை
செய்தால் குணமடையலாம்.
தேனுக்கு காலாவதி தேதி கிடையாது
தேன் காலாகாலத்திற்கும்
அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. அதன் சுவை மாறுபாடு அடையும். இதில் ஈரப்பதம்
குறைவு என்பதால் பாக்டீரியாக்கள் இதனை தாக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் தேனில்
பாக்டீரியாக்களை தடுக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு வேதிப்பொருள் உள்ளது. இதனால்தான் தேன்
பெரிதாக பிற உணவுப்பொருட்கள் போல கெட்டுப்போவதில்லை.
நமது உடலில் தங்கம் இருக்கிறது.
நமது உடலில் சிறிதளவு தங்கம்
இருப்பது உண்மைதான். இதன் அளவு அதிகரிக்கும்போது நச்சாக மாறும் வாய்ப்புள்ளது. சோடியம்
ஆரோத்திரமலேட் என்ற வேதிப்பொருளில் தங்கம் உள்ளது. ஆர்த்தரைட்டிஸ் நோயாளிகளுக்கு தங்கம்
எரிச்சலை ஏற்படுத்துகிறது. உடலில் தங்கத்தின் பயன்பாடு பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
செய்து வருகின்றனர். இதனை புற்றுநோயை எளிதாக கண்டறியும் ஆய்வில் பயன்படுத்த முடியுமா
என்று சோதித்து வருகின்றனர்.
நமது உடலில் இரண்டு டஜன் டிஎன்ஏ மாதிரிகள் உள்ளன.
தாயின் உடலில் இரு கருமுட்டைகள்
உருவாகி வளருவதை சிமெரிசம் என்கிறார்கள். இம்முறையில் ஒரு கரு முட்டை இன்னொன்றின் மீது
ஆதிக்கம் செலுத்தினால் என்னாகும்? இருவரும் இரட்டையர்களாக ஒரே மரபணு கொண்டு பிறப்பார்கள்.
மிகவும் அரிதாக சிலர் மட்டும் ரத்தவகை, மரபணு ஆகியவை மாறி பிறப்பதும் உண்டு.
அதிக வெளிச்சத்தைப் பார்த்தால் தும்மல் ஏற்படுமா?
சிலருக்கு எல்இடி பல்பை
ஒளிரவிடும்போது அதைப் பார்த்தவுடனே தும்முவார்கள். கண்ணில் உள்ள நுண்ணிய நரம்புகள்
தும்மலுக்கான சிக்கனலை மூளைக்கு அனுப்புகின்றன. பொதுவாக தும்மல் என்பது மூக்கிலுள்ள
தூசிகளை வெளியேற்றுவதற்காக உருவாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக