நெப்போலியன் வாட்டர்லூ போரில் வென்றிருந்தால் மாறியிருக்குமா வரலாறு? - மிஸ்டர் ரோனி பதில்கள்








நெப்போலியன் போனபார்ட் 10 ...
கிகா


மிஸ்டர் ரோனி

சில விலங்குகளுக்கு மூன்று கண் இமைகள் இருப்பது ஏன்?

தூசி, வறட்சி ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்குத்தான். பறவைகளுக்கு இந்த வகை இமை அதிக உயரத்தில் பறக்கும்போது கூர்மையாக தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்கவும் உதவுகிறது.

இங்கிலாந்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹியர் ஹியர் என்று கூறுவது ஏன்?

பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இந்த வழக்கம் அங்கு உள்ளது. அதிமுக அமைச்சரவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை பாராட்ட மேசையைத் தட்டி பாராட்டுவார்களே, அதைப்போன்றதுதான் இதுவும். நாம் தட்டி பாராட்டுகளை சொல்லுகிறோம். அவர்கள் வார்த்தை வழியாக தங்களது தலைவரைப் பாராட்டுகிறார்கள.

டைனோசர்கள் என்ன மாதிரியான ஒலிகளை எழுப்பி வாழ்ந்திருக்கும்?

அவை வாழ்ந்த காலம் 65 மில்லியன் ஆண்டுகாலம் என மதிப்பிட்டுள்ளனர். நாம் அப்போது வாழ்ந்திருந்தால் ரசூல் பூக்குட்டி அல்லது தபஸ் நாயக்கை வைத்து ஒலியை பதிவு செய்திருக்கலாம். நாம்தான் அப்போது இல்லையே! நாம் டைனோசர்களின் பல்வேறு படிமங்களை ஆராய்ந்ததில் அவற்றுக்கு கேட்கும் திறன் சிறப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. அடுத்து அவற்றின் குரல்வளையும் நன்றாகவே இருந்துள்ளது. எனவே, யூகமாக வாத்துக்களைப் போல அவை சக விலங்குகளுடன் சத்தமிட்டு உரையாடியிருக்கலாம்.

மேசையில் வைத்துள்ள, மூலையில் வைத்துள்ள பொருட்களை பூனைகள் எப்போதும் தள்ளி விடுவது ஏன்?

பூனைகளின் வேட்டையாடும் குணம்தான் இதற்கு காரணம். அவை பூச்சாடிகளை தள்ளிவிட்டு அவை உயிரில்லை என்பதை உறுதி செய்துகொள்ளும். விலங்குகளின் மனதில் ஆழமாக உள்ள குணங்களை மாற்றுவது கடினம். எனவே மேசையில் பூச்சாடிகளை வைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு அவை உடைந்தால் அள்ளிப்போடும் வேலையைக் குறைக்கும்.

வாட்டர்லூ போரில் நெப்போலியன் வென்றிருந்தால் என்னவாகும்?

பேரரசர் நெப்போலியன் என்று நாம் அழைக்க வேண்டியதிருக்கும். மேலும் ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட படையை நெப்போலியன் சந்திக்கும் படி இருக்கும். அவர்களையும் வென்றால் கூட அலெக்ஸாண்டரிடம் நெப்போலியன் தோற்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.

உலகில் இதுவரை ஏவியதில் சக்திவாய்ந்த ராக்கெட் எது?

நாசா, சாடர்ன் 5 என்று ஏவிய ராக்கெட்தான். இந்த ராக்கெட்தான் அப்போலோ விண்கலத்திலுள்ள வீரர்களைத் தூக்கியபடி விண்ணுக்குச் சென்றது.


கருத்துகள்