மூச்சுக்காற்றை நம்மால் பார்க்க முடிவது எப்படி? மிஸ்டர் ரோனி பதில்கள்












Psycho, Respiratory Protection, Mask, Goggles, Filter










மிஸ்டர் ரோனி

வானவில் வானில் எத்தனை மணி நேரம் நீடித்திருக்கும்?

இதற்கு காலவரையறை ஏதுமில்லை. மழை, நீர்த்திவலைகள் மீது ஒளி எவ்வளவு நேரம் பிரதிபலிக்கிறதோ அதைப்பொறுத்து வானவில் வானில் நீடிக்கும். சூரிய ஒளி திவலைகளின் மீது படும் கோணத்தைப் பொறுத்து வானவில்லின் வளைவு அமைகிறது.

மண்வாசனைக்கு காரணம் என்ன?

மண்ணில் வாழும் ஆக்டினோமைசீட்ஸ் என்ற பாக்டீரியாக்கள் மழை நீர் பட்டு காற்றில் மேலெழுவதே இதற்கு காரணம்.

புயல் நிலப்பரப்பிற்கு தோராயமாக எவ்வளவு மழையைக் கொண்டுவருகிறது?

புயல் உருவாகும்போது, 1330 பரப்பளவிற்கு மழையைக் கொடுக்கிறது. 22 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களிலுள்ள நீரின் அளவுக்கு  சமமான

மழை இது.

அனல் காற்று, பஞ்சம் என்ற இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

மழைபொழிவு குறைந்தால் பஞ்சம் ஏற்படுகிறது. அரசு தானியங்களை ஏற்றுமதி செய்து உள்நாட்டு மக்களுக்கு உணவின்றி உருவாக்கப்பட்ட பஞ்சங்களே வரலாற்றில் அதிகம். இயற்கையின் சுழற்சியில் பயிர்களுக்கு பாய்ச்ச நீரின்றி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அனல் காற்று ஏற்படுவது, சூரியவெப்பம் சில மாதங்களில் நினைத்துப் பார்க்க முடியாதபடி திடீரென அதிகரிப்பதால் உருவாகும் விளைவு. அனல் காற்று என்பது சில நாட்களுக்கு நீடிக்கும் தன்மை கொண்டது. பஞ்சம், பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் தன்மை கொண்டது.

உலக வரலாற்றில் அதிக வெப்பம் எங்கு பதிவாகியுள்ளது தெரியுமா? 58 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. நாடு – லிபியா நகரம் – அல் அசிசியா மிக குறைந்த வெப்பநிலை பதிவானது 1983ஆம் ஆண்டு அண்டார்டிகாவில். வெப்பநிலை அளவு -89 டிகிரி செல்சியஸ்.

சூரியன் தகதகவென ஜொலித்துக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?

சூரியனில் இடையறாது நடைபெறும் வேதிவினைகள்தான் காரணம். ஹைட்ரஜன் வாயு இடையறாமல் எரிந்து ஹீலியமாக மாறும் வினை நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக அங்கு 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சூரியனில் வெப்பமும் வெளிச்சமும் கிடைக்கிறது. இதன் மூலம் தீவிரமான கதிர்வீச்சும் உருவாகி வெளியேறுகிறது.

குளிர்ந்த சூழலில் நமது மூச்சுக்காற்றை எப்படி நம்மால் பார்க்க முடிகிறது?

உங்களது நுரையீரலில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அந்த ஈரப்பதம் வெளியிலுள்ள காற்றை ஆவியாக்குகிறது. இதன் காரணமாக, மூச்சுக்காற்று ஆவியாவதை நம் கண்களால் பார்க்க முடிகிறது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்