பாலினத்தை கணிக்கும் தொழில்நுட்பம்!
பாலினத்தை கணிக்கும் தொழில்நுட்பம்!
பாலம் ஒன்றில் பைக்கில் செல்கிறீர்கள். அருகிலுள்ள பர்கர் விளம்பரத்தில் நீங்கள் பார்க்கும்போது அசைவ ஐட்டங்களும்,
பெண்கள் பார்க்கும்போது விளம்பரம் மாறி சாலட் ஐட்டங்களும் வந்தால் எப்படியிருக்கும்?
எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது.
பாலினத்தை
மைக்ரோ கேமராக்கள் மூலம் கணித்து அதற்கேற்ப டிஜிட்டலாக விளம்பரங்களை ஒளிபரப்பும் கலாசாரம்
தொடங்கிவிட்டது. நார்வேயைச் சேர்ந்த பீட்ஸா இதற்கான முயற்சியைத்
தொடங்கியுள்ளது.
தானியங்கியாக ஒருவரை ஆணா, பெண்ணா என கண்டறிந்து விளம்பரங்களை ஒளிபரப்பும் இத்தொழில்நுட்பம் சோதனைமுறையில்
உள்ளது. மாற்றுப்பாலினத்தவர்கள், கருப்பினத்தவர்
ஆகியோரை தொழில்நுட்பம் மூலம் விலக்குவது நடந்துவரும் நிலையில் இந்த ஆராய்ச்சி அதனை
இன்னும் வேகமாக்கும். கேமராக்கள், மைக்ரோபோன்கள்
மற்றும் கணினிகள் மூலம் ஒருவரின் நடை,உடை, உடல்மொழி ஆகியவற்றை இன்று எளிதாக கணிக்க முடியும். மேலும்
வீடுகளில் கடைகளில் வைக்கப்படும் பாதுகாப்பு கேமராக்களில் ஒருவர் பதிவாகாமல் நகரில்
ஒருவரின் தினம் முடிவடைவதில்லை. ஆசியர்கள் பலரது முகங்களையும்
பாலினம், முகம் அறியும் தொழில்நுட்பம் அடையாளம் கண்டறிவதில் தடுமாறியுள்ளன.