குற்றவாளிகளுக்கு வலைவீசும் அமேஸான்!
போலீசுக்கு உதவும்
அமேஸான்!
அமேஸான் இணையத்தில்
நூல்கள்,
பொருட்கள் விற்பதோடு மென்பொருட்களையும் விற்கத்தொடங்கியுள்ளது.
அதில் ஒன்றுதான் Rekognition எனும் செயற்கை அறிவு
தொழில்நுட்பம் கொண்ட முகமறியும் மென்பொருள். விரைவில் இதனை காவல்துறைக்கு
அமேஸான் வழங்கவிருக்கிறது.
அமெரிக்க சிவில்
லிபர்டிஸ் யூனியன்(ACLU)
வெளியிட்ட அறிக்கை மூலம் இத்தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அமெரிக்க மாநிலங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில்
அமேஸான் கைகோர்க்கவிருக்கிறது. தற்போது அமேஸானின் மென்பொருள்
வாஷிங்டனில் பயன்பாட்டிலிலுள்ளது. பாதுகாப்பு மற்றும் போலீசாரின்
சீருடையிலுள்ள கேமராக்களையும் அமேஸான் மென்பொருள் கட்டுப்படுத்தும் என்பதால் போலீசாரின்
சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் குறையக்கூடும். இங்கிலாந்தில்
நடைபெற்ற இளவரசர் ஹாரி திருமணத்தில் அமேஸான் மென்பொருளின் வீடியோவில் நூறுபேரின் முகங்களை
அடையாளமறியும் திறன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அமேஸானில்
பல லட்சம் குற்றவாளிகள் கொண்ட தகவல்தளம் மூலம் குற்றவாளிகள் இனி பிடிபடுவது உறுதி.