இடுகைகள்

எல்ஃப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்க உலகிற்கு வரும் வாள் போராளி!

படம்
  கிரேட் மேக் ரிடர்ன் 4000 இயர்ஸ் எகோ காமிக்ஸ் ரீட்மங்காபேட்.காம்  தொன்மைக்கால வீரர்களின் தலைவன் லூகாஸ் ட்ராமன். இவர் தலைமையில் ஐந்து வீரர்கள் இணைந்து வேலை செய்து தீயசக்திகளை அழிக்க முயல்கிறார்கள். ஒரு சண்டையில், டெமிகாடின் தலைவரான லார்ட் மூலம் லூகாஸ் சிறைபிடிக்கப்படுகிறார். 4 ஆயிரம் ஆண்டுகள் சிறைவாசம் கழித்து விடுவிக்கப்படுகிறார். அவரது ஆன்மா, பிளாக் குடும்ப மூன்றாவது பிள்ளையான ஃபிரே பிளாக்கின் உடலில் புகுகிறது.  ஃபிரே பிளாக், மந்திரவாதம் கற்க முயன்று அதில் தோற்று, பள்ளி நண்பர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். அவனது குடும்பத்தாரால் ஊதாசீனம் செய்யப்படுகிறான். அவன் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தபிறகே, லூகாஸின் ஆன்மா அவனது உடலில் புகுகிறது. அதற்குப் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள்தான் கதை.  இந்த காமிக்ஸ் கதையில் சுவாரசியம் என்னவென்றால், ஃபிரே பிளாக் உடலில் லூகாஸ் புகுந்தபிறகு செய்யும் நகைச்சுவைதான். பள்ளி செல்லும் சம்பவங்களில் இந்த நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஃபிரே பிளாக் தனது பெண் ஆசிரியை மீது காதல் கொள்ளும் சம்பவம். ஃபிரே பிளாக், வகுப்பில் உள...