இடுகைகள்

பாதகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!

படம்
      பாயும் பொருளாதாரம் உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்! இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நிதி அறிக்கையில் வருமானம் இருந்தால் பனிரெண்டு லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேட்க நன்றாக இருப்பதெல்லாம் நடைமுறையில் பெரிய பயனைத் தருவதில்லை. உலகமயமாக்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் நூல்களை படித்து முழுமையாக புரிந்துகொள்ளலாம். நாம் இங்கு அதைப்பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறோம். உலகமயம் என்பது அனைத்து நாடுகளையும் இணைத்து செய்யும் பெரிய வணிக சங்கிலி என்றுகூறலாம். உலகமயத்திற்கு பெரிய பயன்பாடாக கன்டெய்னர் அமைந்தது. நிலம், நீர் என இரண்டிலும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். கப்பல் மூலம் கன்டெய்னர்களை கடலில் கொண்டு செல்கிறார்கள். நிலத்தில் வாகனங்கள், ரயில் மூலம் கன்டெய்னர்களைக் கொண்டு செல்லலாம். இந்த வகையில்தான் 1954ஆம் ஆண்டு 57 பில்லியன் டாலர்களாக இருந்த கன்டெய்னர் வணிகம், 2018ஆம் ஆண்டில் 18 டிரில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் வணிகம் சார்ந்த ஆதரவு தொழில்நுட்பமாக இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆப்கள்...

புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நல்லதா?

படம்
புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? சாதாரண ஐஸ்க்ரீமில் கொழுப்பு அதிகம் இருக்குமென்றால், இதில் புரோட்டீன் சார்ந்த பொருட்கள் அதிகமாக இருக்கும். மற்றபடி அனைத்தும் ஒன்றுதான். செயற்கை இனிப்பூட்டி ஸ்டெவியா என்பதை ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் சேர்ப்பாளர்கள். விலை குறைவு, சுவையோ சுவை என்பதால்தான் இந்த சுவையூட்டியை பயன்படுத்துகிறார்கள். 473 மில்லி ஐஸ்க்ரீமில் புரோட்டினின் சதவீதம் 20 ஆக இருக்கும். சர்க்கரையின் கலோரிகளை இதில் குறைத்திருப்பார்கள். வே புரோட்டின் இந்த ஐஸ்க்ரீம்களில் சேர்க்கப்படும் முக்கியமான பகுதிப்பொருள். உடற்பயிற்சியை தீவிரமாக செய்பவர்களுக்கு இந்த ஐஸ்க்ரீம் சுவாரசியமான நொறுக்குத்தீனியாக இருக்கும். புரதம் எளிதாக செரிமானம் ஆகாது. விற்பனைக்காக இதில் சர்க்கரை கூடுதலாக சேர்ப்பதும் உண்டு. பிற ஊட்டச்சத்துக்கள் இதில் கிடையாது. மேலும் அதிகம் சாப்பிடத் தூண்டும் ஆபத்தும் இதில் உண்டு. இதனை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி. நன்றி: ஹெல்த்லைன்