வரவேற்பு கிடைக்குமிடத்தில் வணிகத்தை நடத்தி வெற்றி பெறும் சீனா! சீனாவுக்கு அமெரிக்காவை அசைத்துப் பார்த்து முதலிடத்தை பெறும் லட்சியம் உண்டு. தென்சீனக்கடலை அதன் ராணுவக்கப்பல்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இதெல்லாம் கடந்து, உள்நாட்டில் வணிகம் வளர்ச்சியில் சுணக்கம் கண்டவுடன், இரண்டாயிரத்திலேயே அயல்நாடுகளை நோக்கி சீன நிறுவனங்களை செல்லுமாறு அந்த நாட்டு அரசு கூறிவிட்டது. அரசு கூறியதை அரசு, தனியார் நிறுவனங்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு சவுதி அரேபியா, மலேசியா, வியட்நாம், எகிப்து, மொராகோ, கஜகஸ்தான், இந்தோனேசியா, அர்ஜென்டினா, செர்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் வணிகம் செய்யத் தொடங்கியுள்ளது. டிக்டாக்கை அமெரிக்கா தடை செய்தாலும் கூட அதைப்பயன்படுத்தி சீனா பல்வேறு நாடுகளில் தனது வணிகத்தை கொண்டு சென்றுள்ளது. அந்த நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உலக நாடுகளில் வறுமையாக உள்ள நாடுகளில் தொழிற்சாலைகளை திறந்து வருகின்றன. இப்படி செய்வதால் சீனாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளா...