இடுகைகள்

வணிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவம்பரில் வெளியீடு....

படம்
புதிய மின்னூல் வெளியீடு....

தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...

நான்கு இட்லி ஒரு உளுந்துவடை - பேக்கேஜ் உணவுக்கடைகளின் வணிக உத்திகள்

 நான்கு இட்லி ஒரு உளுந்துவடை திருவண்ணாமலை செல்வது என்பது அங்கு குடிகொண்டுள்ள தெய்வத்தை பார்க்க அல்ல. அப்படி நிறையப் பேர் நினைப்பார்கள். அந்த தெய்வத்தை வழிபடும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. எனவே, அந்தப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. பதிலாக மதுரை காரியாப்பட்டியிலிருந்து புலம் பெயர்ந்து திருவண்ணாமலையில் வாழும் நண்பரை பார்க்க சென்றேன். பெரிதாக ஒன்றும் இருக்காது. அவருடன் பேசுவது, நான்கைந்து கடைகளில் இட்லி, புரோட்டா தின்பது, சில நூல்களை வாசிப்பது அவ்வளவுதான் திருவண்ணாமலைக்கான பயணம் என்பது. பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது.  சிலசமயங்களில் ஆன்மிக நண்பர், வெளிநாட்டு பக்தர்களுக்கு புகைப்படம், வீடியோ எடுத்து தருவது என ஒப்புக்கொண்டு வேலை செய்வதுண்டு. அப்போது தன்னைப் பார்க்க வரும் என்னைப்போல ஆசாமிகளை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டுவிடுவார். அப்புறம் என்ன ஏற முடியாத மலைகளில் பேண்டும் சட்டையுமாக தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இப்படி ஒருமுறை கந்தாஸ்ரமம் செல்ல முயன்றபோது நேரிட்ட இடர்ப்பாடு சொல்ல முடியாத கஷ்டத்தை உடலுக்கும் மனதுக்கும் கொடுத்தது.  முஸ்லீம்கள் தாங்கள் வாழும் நாடு எதுவாக இருந...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல் பட்டியல்

  ஆரா பிரஸ் நூல்கள்  - அமேசான் வலைத்தளம் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(6 தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை அசுரகுலம் 2 குற்றங்களின் முன்கதை அசுரகுலம் 3 ரத்தசாட்சி அசுரகுலம் 4 மனமெனும் இருட்குகை அசுரகுலம் 5 ரகசிய நரகம் அசுரகுலம் 6 உயிர்வேட்டை வின்சென்ட் காபோ  6. மயிலாப்பூர் டைம்ஸ்  அனுபவக் கட்டுரைகள்  லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள்  அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் 1,2 அரசியல் பகடி  விக்டர் காமெஸி - ரோனி அஜித் - ஆசாத்  10. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 11. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூ...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...

சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

படம்
 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா? அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது.  தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந...

இணையத்தை மையமாக கொண்டு தொடங்கும் வணிகத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்!

படம்
  40 ரூல்ஸ் ஃபார் இன்டர்நெட் பிசினஸ் மேத்யூ பால்சன்  கட்டுரை நூல்  ஆங்கிலம் இன்று பெரும்பாலான வணிகம், ஸ்டார்ட்அப்பாக இணையத்தில் தொடங்கப்படுகிறது. முதலீடு பெற்று வளர்ந்தால் அதை பாரம்பரிய வணிகம் போல இடம் பிடித்து அலுவலகம் திறந்து பெரிதாக்குகிறார்கள். ஆனால், இணைய நிறுவனங்கள் வளர்வது முழுக்க வேறுவிதமாக உள்ளது. அலிபாபாவை எடுத்துக்கொள்ளுங்கள். அமேசானின் வணிகத்தைப் போன்று இயங்கும் நிறுவனம். சீனாவில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் உருவாக்கிய மாற்றங்களும் அசாதாரணமானவை. தனது வணிகத்திற்கான அடிப்படை நிதி கட்டமைப்பையே ஒரு நிறுவனம் உருவாக்கி சந்தையைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.  இன்று இணையத்தில் மட்டுமே  ஸ்மார்ட்போன்கள் முதலில் விற்கப்பட்டு பிறகு கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் மக்கள் ஆன்லைனில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு 9 டு 5 வேலை பிடிக்காமல் போய் ஆன்லைன் வணிகம் தொடங்கினால் அதை எப்படி நடத்துவது, வெற்றி பெறுவது, புகார் கொடுப்பவர்களை சமாளிப்பது, நல்ல வாடிக்கையாளர்களை காப்பாற்றிக்கொள்வது ஆகியவற்றை எப்படி செய்வது என நூலாசிரியர் விரிவாக விளக...

ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்!

  ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்! சீனா ஒரு காலத்தில் வெளிநாட்டு பொருட்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து தனக்கான பொருட்களை உருவாக்கி்க்கொண்டது. அங்கு கண்டுபிடிப்புகளே கிடையாது. காப்பி பேஸ்ட் மட்டுமே என்ற நிறைய கருத்துகள் கூறப்பட்டன. தொடக்க காலத்தில் இதில் உண்மை இருந்தாலும் ஒரு நாடு அப்படியே இருப்பதில்லை. இன்று சீனாவில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அவை வேறுபட்ட பல்வேறு வசதிகளை வழங்கி மக்களின் தினசரி வாழ்க்கையில் பங்களித்து வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தை இப்போது பார்க்கலாம். அதன் பெயர் சினா வெய்போ. 50 மில்லியன் பயனர்கள் இந்த சமூக வலைதளத்தில் உள்ளனர்.  இதை உருவாக்கியவர் தைவான் நாட்டைச் சேர்ந்த கை பு லீ. 1961ஆம் ஆண்டு பிறந்த லீ, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு கணினி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். ஆப்பிள், சிலிகான் கிராபிக்ஸ், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. சீனாவின் பெய்ஜிங்கில் கூகுள் நிறுவனத்திற்காக வேலை செய்தார். அப்போது சீனாவில் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவி செய்ய...

ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி

படம்
  ஆன்லைன் வணிகத்தில் முதலை சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம்.  இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது.  அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்...

ஹெயர் வெற்றிக்கதை!

படம்
  ஹெயர் வெற்றிக்கதை 1949ஆம் ஆண்டு பிறந்தவர் ஸான் ருய்மின். இவர் பிறந்த ஆண்டில்தான் சீனாவில் மக்கள் சீன குடியரசு உருவானது. இவர் வளர்ந்து வந்த காலத்தில்தான் சீனாவில் கலாசார புரட்சி, மிகப்பெரிய முன்னேற்ற பாய்ச்சல் நடவடிக்கைகள் நடைபெற்றன. இவை அவரின் கல்வி, சமூகத்தைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை பாதித்திருக்கலாம்.  ருய்மினுக்கு நிறுவனத்தை நடத்தும் மேலாண்மை திறன் எப்படி வந்தது என ஒருவர் சந்தேகம் கொள்ளலாம். அவருக்கு இந்த வகையில் ஆதர்சம், ஜப்பானிய நூல்கள். ஜப்பானிய மேலாண்மை நூல்களை படித்தே தனது நிர்வாக அறிவை பெருமளவு வளர்த்துக்கொண்டார். அவையெல்லாம் குயிங்டாவோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலைக்கு அரசு அனுப்பி பணியாற்றச் சொன்னபோது பயன்பட்டது. தொடக்கத்தில் அங்கு ருய்மின் சென்றபோது, குளிர்பதனப்பெட்டிகளை தயாரித்தாலும் அதில் நிறைய தவறுகள் இருந்தன. மோசமான வடிவமைப்பு காரணமாக அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்றனர். மக்களுக்கு அதை வாங்கினாலும், குளிர்பதனப்பெட்டி அடிக்கடி பழுதானதால், விரக்தி அடைந்தனர்.  ருய்மின், தொழிலாளர்களிடம் குளிர்பதனப்பெட்டி பற்றி கேட்டார். செய்யும் போது பிழை ஏற்பட்டாலும...

வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!

படம்
  1 ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி? இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும்.  கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்ப...

பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!

படம்
  பட்டுச்சாலை நோக்கம் நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம்  என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம்.  பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.  பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும்...

ஷி ச்சின்பிங் உரைகள், கட்டுரைகள் மூலமாக நடக்கும் பிரசாரம்!

படம்
 ஷி ச்சின் பிங்கின் உரைகள் பாடமாக.... ஷி ச்சின் பிங் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், உலக நாடுகளிலுள்ள 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் ஷி என்ன நினைக்கிறாரோ அதிலிருந்து துளியும் விலகாமல் கட்சியினர், உறுப்பினர்கள், வணிகர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறர் அப்படியே வழிமொழிய வேண்டும். இப்படித்தான் சீன கனவுக்கான அடிக்கல் உருவாக்கப்பட்டு வருகிறது. வலிமையான தேசியவாதம், நாடுபற்றிய பெருமை, வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிராத தன்னிறைவு கொண்ட நாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி்ல ஷி, முன்னாள் அதிபரான மாவோவைப் பின்பற்றுகிறார். அடுத்து கன்பூசியசின் பல்வேறு கருத்துகளை விரும்புகிறார். ஐந்து வகை உறவுகளை சமூகம் பின்பற்றவேண்டுமென கன்பூசியஸ் கூறியுள்ளார். அரசர் - மக்கள், தந்தை - மகன், அண்ணன்-தம்பி, கணவர்-மனைவி, இரு நண்பர்களின் உறவு ஆகியவைதான் அவை.  அடிப்படை தலைவர், மக்கள் தலைவர் என பல பட்டங்கள் அதிபர் ஷிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சியின் பொதுசெயலாளார்,தே...

சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

  பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன.  எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது.  கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற...

நாளிதழ் விநியோகம் செய்யும் சிறுவன் கற்றுக்கொள்ளும் தொழில்பாடங்கள்!

படம்
   ரெயின் ஜெப்ரி ஜே ஃபாக்ஸ் சுயமுன்னேற்ற நூல் கதைநூல் போல அமைந்துள்ள கட்டுரை நூல். நூலில், ரெயின் என்ற சிறுவன் தி கெசட் பத்திரிக்கையை வீடுகளுக்கு போடும் வேலையை செய்கிறான். அதில் என்னென்ன நுட்பங்களை செய்கிறான். அது பத்திரிக்கைக்கும் அவனுக்கும் என்னவிதமான பலன்களைக் கொடுத்தது என கதை விவரிக்கிறது. நூல் இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று, ரெயின் என்ற சிறுவனின் பனிரெண்டு ஆண்டு கால பத்திரிக்கை விநியோகம் பற்றியது. அடுத்து, அவனது அனுபவங்களிலிருந்து நாம் என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை இரண்டாவது பகுதியாக கூறியிருக்கிறார்கள். பத்திரிக்கை விநியோகம் செய்வது மேற்கு நாடுகளில் அந்தளவு இழிவாக பார்க்கப்படுவதில்லை. அத்தொழிலை செய்து சாதித்து தொழிலதிபர்களாக பெரும் ஆளுமைகளாக வளர்ந்தவர்கள் பலருண்டு என நூலை வாசித்தால் அறிந்துகொள்ளலாம். எந்த தொழிலை செய்தாலும் அதில் முன்னேற புதுமைத்திறன்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், ரெயின் தனது தொழிலை மேம்படுத்த சில யோசனைகளை செயல்படுத்துகிறான். அதற்கு டக்ளஸ், வெர்ன் ஆகிய நாளிதழ் நிர்வாகத்தினர் உதவுகிறார்கள். நூலில் ரெயினுக்கு எதிரியாக வருபவர்கள் இரண்ட...

பேய்ப்பாலை நூலை வாசிக்க...

படம்
      பேய்ப்பாலை, சீனாவில் உருவாக்கப்படும் பயனற்ற கட்டுமானங்கள், தொழிற்துறை கழிவுகள் காரணமாக ஏறபடும் மாசுபாடு எப்படி ஏழை விவசாய மக்களை பாதிக்கிறது. கிராமத்தில் உள்ள மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்து பொதுவுடைமைக் கட்சி உள்நாட்டு உற்பத்தியை எப்படி போலியாக வளர்த்துக்காட்டுகிறது என இந்நூல் விரிவாக விளக்குகிறது. உலக நாடுகள் பலவும் தூய ஆற்றல் சாதனங்களை சீனாவின் தயாரிப்பில்தான் வாங்கி செயல்படுத்தி வருகின்றன. ஆனால், அப்படி பெறும் சாதனங்களை உருவாக்க சீனா, என்ன மாதிரியான விலையைக் கொடுக்கிறது, அங்கு ஏற்படும் சூழல் பிரச்னைகள், நோய்கள், மக்கள் போராட்டம், ஊழல், மக்கள் போராட்டங்களை நசுக்கும் காவல்துறை, ராணுவம் ஆகியவை பற்றியும் நூல் விளக்குகிறது.                 https://www.amazon.in/dp/B0DX7FY6QG

உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!

படம்
      பாயும் பொருளாதாரம் உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்! இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நிதி அறிக்கையில் வருமானம் இருந்தால் பனிரெண்டு லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேட்க நன்றாக இருப்பதெல்லாம் நடைமுறையில் பெரிய பயனைத் தருவதில்லை. உலகமயமாக்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் நூல்களை படித்து முழுமையாக புரிந்துகொள்ளலாம். நாம் இங்கு அதைப்பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறோம். உலகமயம் என்பது அனைத்து நாடுகளையும் இணைத்து செய்யும் பெரிய வணிக சங்கிலி என்றுகூறலாம். உலகமயத்திற்கு பெரிய பயன்பாடாக கன்டெய்னர் அமைந்தது. நிலம், நீர் என இரண்டிலும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். கப்பல் மூலம் கன்டெய்னர்களை கடலில் கொண்டு செல்கிறார்கள். நிலத்தில் வாகனங்கள், ரயில் மூலம் கன்டெய்னர்களைக் கொண்டு செல்லலாம். இந்த வகையில்தான் 1954ஆம் ஆண்டு 57 பில்லியன் டாலர்களாக இருந்த கன்டெய்னர் வணிகம், 2018ஆம் ஆண்டில் 18 டிரில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் வணிகம் சார்ந்த ஆதரவு தொழில்நுட்பமாக இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆப்கள்...

அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்

படம்
      பாயும் பொருளாதாரம் 7 அறிவால் பகை வெல்வோம் கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும். பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்...

பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்

படம்
      6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...