இணையத்தை மையமாக கொண்டு தொடங்கும் வணிகத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்!

 


40 ரூல்ஸ் ஃபார் இன்டர்நெட் பிசினஸ்
மேத்யூ பால்சன் 
கட்டுரை நூல் 
ஆங்கிலம்

இன்று பெரும்பாலான வணிகம், ஸ்டார்ட்அப்பாக இணையத்தில் தொடங்கப்படுகிறது. முதலீடு பெற்று வளர்ந்தால் அதை பாரம்பரிய வணிகம் போல இடம் பிடித்து அலுவலகம் திறந்து பெரிதாக்குகிறார்கள். ஆனால், இணைய நிறுவனங்கள் வளர்வது முழுக்க வேறுவிதமாக உள்ளது. அலிபாபாவை எடுத்துக்கொள்ளுங்கள். அமேசானின் வணிகத்தைப் போன்று இயங்கும் நிறுவனம். சீனாவில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் உருவாக்கிய மாற்றங்களும் அசாதாரணமானவை. தனது வணிகத்திற்கான அடிப்படை நிதி கட்டமைப்பையே ஒரு நிறுவனம் உருவாக்கி சந்தையைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. 
இன்று இணையத்தில் மட்டுமே  ஸ்மார்ட்போன்கள் முதலில் விற்கப்பட்டு பிறகு கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் மக்கள் ஆன்லைனில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு 9 டு 5 வேலை பிடிக்காமல் போய் ஆன்லைன் வணிகம் தொடங்கினால் அதை எப்படி நடத்துவது, வெற்றி பெறுவது, புகார் கொடுப்பவர்களை சமாளிப்பது, நல்ல வாடிக்கையாளர்களை காப்பாற்றிக்கொள்வது ஆகியவற்றை எப்படி செய்வது என நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். நூலின் அளவு இருநூறு பக்கங்களுக்குள்தான் உள்ளது. எனவே, நூலை படிக்க அதிக நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. ஆனால், வாசிக்கும்போது கவனமாக இருப்பது முக்கியம். 

மொத்தம் நாற்பது விதிகள்தான். அதைக் கடைபிடித்தாலே ஒருவர் ஆன்லைன் சார்ந்த வணிகத்தில் வெற்றி பெற முடியும் என கூறுகிறார். 
நூலாசிரியர் பால்சன் இந்த விதிகளை நூல்களை படித்தும் சொந்த ஆன்லைன் வணிகத்தில் அடிபட்டும் உதைபட்டும் இழப்புகளை சந்தித்துமே கண்டுபிடித்திருக்கிறார். பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதை முறையாக சந்தைப்படுத்தாமல் இழப்புகளை சந்தித்து தொழில்களை மூடிவிட்டு பிறகு வேறு தொழில்களை தொடங்கி நடத்தி வெற்றி கண்டு என மேலே வந்திருக்கிறார். 

நாற்பது விதிகளுக்குள்ளாக ஆன்லைன் வணிகத்திற்கான நெறிமுறை, எப்படி தொடங்குவது, நடத்துவது, பணத்தை பெறும் வசதி, திருப்பி அளிப்பது என அனைத்தையும் விளக்கமாக கூறிவிடுகிறார் நூலாசிரியர். இதில் குறிப்பிடவேண்டிய பகுதியாக நண்பர்களின் ஐடியாக்களை, அவர்களின் ஊழியர்களை திருடுவது பற்றி எழுதப்படும் பகுதி முக்கியம். ஒன்றைப் போலவே இன்னொன்றை செய்தல் என்பது அடிப்படையில் எளிமையானது. புதிதாக ஒன்றை உருவாக்க யோசிக்கவேண்டும். ஆப்பிள் போனுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் உழைத்த அளவுக்கு சீனாவின் ஷாவ் மி உழைக்க வேண்டியதில்லை. அதுதான் கண்ணெதிரே இருக்கிறதே? ஆனால், ஸ்மார்ட்போன் தொழிலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கவே அதிகம் மெனக்கெட வேண்டும். இன்னொருவரின் சாயலில் நிறுவனத்தை உருவாக்கினால் அதற்கு கொடுக்கும் விலை பற்றி சூப்பர் மார்க்கெட்டை வைத்து சொல்லும் உதாரணம் சிறப்பாக உள்ளது. தொழில் பற்றி விளம்பரம் செய்வது பற்றிய பகுதியும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே சாராமல் தன்னை உருவாக்கிக் கொள்வது பற்றிய விதியும் முக்கியமானது. 

ஆன்லைன் வணிகத்திற்கான விதிகள் என்பதால், சிறு, குறு தொழிலதிபர்கள் படிக்ககூடாது என்பதல்ல. அவர்களும் படித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த அடியை வலுவாக எடுத்து வைக்கலாம். 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!