ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா?
பொதுவாக திருமண உறவில் பாலுறவு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெண்களின் இன்பம் என்பதற்கும் குழந்தை பெறுவதற்கும் எந்த தொடர்புமில்லை. பிள்ளை பெற்றவர்களுக்கு கூட உடலுறவில் முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கலாம். உடல்ரீதியான தொடர்பு என்பதை உறுதியாக கொள்பவர்களே, இன்பத்தில் கரைத்துக்கொள்பவர்களே இசைவான தம்பதிகள். ஆண், பெண் என இருபாலருக்கும் வயது, பக்குவம் என்பது பாலுறவில் மாறுபடலாம். ஆனால், பாலுறவு முக்கியமானது என்பதை உளவியலாளர்கள் ஏற்கிறார்கள். சுய இன்பம் என்பது ஒருவர் தான் மட்டுமே இன்பத்தை அனுபவிப்பது. பாலுறவு என்பதில் ஆண், பெண் இருவருமே இன்பத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். திருக்குறளின் காமத்துப்பால், காமசூத்திரம் ஆகிய நூல்களை தெளிவாக பொருளுணர்ந்து படித்து காமத்தில் ஈடுபடுவது நல்லது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு வேறுபாடுகள் என்ன?
ஆண்கள், ஆபாசபடங்களைப் பார்த்து ஊக்கம் பெறுகிறார்கள். அந்தவகையில் அவர்கள் புகைப்படங்கள், காணொளி பார்த்து எழுச்சி பெறுகிறார்கள். உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால், பெண்கள் இப்படி உடலுறவில் ஆர்வம் கொள்வதில்லை. அவர்களுக்கு உடல்ரீதியான தொடுதல் முக்கியமாக உள்ளது. ஆனால், காஸ்பிளே போன்ற உடைகளை பெண்கள் அணிந்துகொண்டு வருவதாக நிறைய ஆபாசபடங்கள் எடுக்கப்படுகின்றன. இதெல்லாம் ஆண்கள் பார்வையிலானவை. பெண்கள் பார்வையில் ஆபாச திரைப்பட்டங்கள் எடுக்கப்படுவதில்லை. ஆண்களுக்கு ஒருமுறை உச்சம் என்றால், பெண்களுக்கு இரண்டு மூன்று முறை உச்சம் கிடைக்கும் என்பதே உண்மை.
பெண்கள் எழுப்பும் பாலுறவு புகார்கள் என்னென்ன?
பாலியல் ஆர்வம் இன்மை, உச்சம் அடையாமை, பாலுறுப்பில் அந்த நேரத்தில் வரும் தீவிர வலி ஆகியவை எப்போதைக்குமான புகார்கள்.
உளவியல் ரீதியாக மன அழுத்தம், பதற்றம் ஆகியவையும் பெண்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது. ஆண்களுக்கு சட்டென உணர்வு தூண்டுதல் இல்லாமல் எழுச்சி குறைவு ஏற்படுகிறது. பொதுவாக ஆண்களுக்கு வயதானால் எரக்டைல் டிஸ்பங்ஷன் என்று பாதிப்பு ஏற்படுகிறது. மதுபானம் அருந்துவது, சிகரெட் புகைப்பது, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை காரணமாக பாலுறவு சார்ந்த பிரச்னைகள் உருவாகின்றன. மன அழுத்தம், பதற்றம், சிறுவயது உறவுகள் ஆகியவையும் ஆண்களின் பாலுறவு விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
பாலுறவில் ஹார்மோன்களின் பங்கு என்ன?
டெஸ்டோஸ்ட்ரோன், ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்களைப் பற்றி கேட்கிறீர்கள். பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டம் முடிந்தவுடன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடும். இதனால் பாலுறவு கொள்ளும்போது உறுப்பில் வலி ஏற்படும். ஒத்திசைவான தன்மை இருக்காது. இப்போது பெண்களுக்கு இதற்கென தனி சிகிச்சைகள் உள்ளன. அவற்றின் மூலம் பாலுறவை திருப்தியாக செய்யலாம். இதெல்லாம் திருமண வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச் செல்வதற்குத்தான்.
1998ஆம் ஆண்டு சில்டெனாபில் சிட்ரேட் என்ற மருந்தை கண்டறிந்தனர். புரியும்படி சொன்னால் வயாக்ரா. அதற்குப் பிறகு ஆண்களின் எழுச்சிப் பிரச்னை பெரிதாக எழும்பவில்லை. இந்த மருந்து பாலுறுப்புக்கு அதிகளவு ரத்தத்தை அனுப்பி வைக்கும். உறவில் திருப்தியை ஏற்படுத்தி மகத்தான வெற்றி கண்டது. பெண்களுக்கு இதுபோல பெரிய மருந்துகள் ஏதுமில்லை. ஹார்மோன் சிகிச்சை செய்தாலே நிறைய பயன்கள் கிடைத்தன.
மகிழ்ச்சி என்றால் என்ன?
நேர்மறையான எண்ணங்கள் ஏற்படுத்தும் மனநிலை எனலாம். ஆர்வம், மகிழ்ச்சி, ஈடுபாடு ஆகியவை இதன் வழியாக உருவாகிறது. சமூக வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதை திருமணம் செய்வது, அதன் வழியாக உறவுகள்,நண்பர்களைப் பெறுவது என கணக்கிடுகிறார்கள். வேலை என்பதைப் பொறுத்தவரையில் நல்ல வேலை, சூழ்ச்சி, அரசியல் இல்லாத அலுவலக சூழல், ஆண்டுதோறும் உயரும் சம்பளம் என வாழ்வது மகிழ்ச்சிதானே..


கருத்துகள்
கருத்துரையிடுக