சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!

 சீனா டிஸ்ட்ரப்டர்ஸ் 
சீன டெக் நிறுவனங்களின் கதை
கட்டுரை நூல்

இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. 

வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே போட்டியாளர் ஸ்வீடனின் எரிக்சன் நிறுவனம் மட்டுமே. ஏறத்தாழ அனைத்து ஒப்பந்தங்களிலும் 5-15 சதவீதம் குறைவான தொகையை ஹூவெய் தேர்ந்தெடுத்து ஒப்பந்தங்களை வென்று வருகிறது. இன்று உலகளவில் 5 ஜி சேவையை விலை மலிவாக வழங்கும், அதற்கான பொருட்களை விற்கும் நம்பர் 1 நிறுவனம் ஹூவெய்தான். 

ஹெயர் நிறுவனத்தை ஸான் ருய்மின் வளர்த்த கதையும் வாசிக்க ஆர்வமூட்டுகிற ஒன்றுதான். குளிர்பதனப்பெட்டி வணிகம்தான் ஹெயரின் அடையாளம். அன்றும் இன்றும் கூட. இன்று குளிர்பதனப்பெட்டி, சலவை சாதனம், குளிர்சாதன எந்திரம், சமையல் அடுப்பு, சிம்னி, வீட்டிலுள்ள ஸ்மார்ட் பொருட்கள் என தன்னை மேம்படுத்திக்கொண்டு உலகளவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை தொடங்கியது, மாற்றங்களை கொண்டு வந்தது என ருய்மின் செய்த செயல்பாடுகளை ஒருவர் யோசிக்கவே முடியாது. ஆனால், சவால்களை சந்தித்து சாதித்திருக்கிறார். 

குறைவான கூலியுடைய நாடு என்பதால்தான் சீனாவில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலை அமைத்து பாகங்களை தயாரித்து வருகிறது. அதை இ்ந்தியாவில் அசெம்பிள் செய்து கொள்ளை விலைக்கு விற்று வருகிறது. இந்தியாவிலுள்ள ஊடகவியலாளர்கள், நாட்டை சீனாவுடன் ஒப்பிட்டுவருகிறார்கள். ஆனால் அப்படி ஒப்பிடுவதற்கான எந்த தகுதியும் இந்தியாவுக்கு கிடையாது. உலகளவில் ஒப்பந்தங்களில் ஈடுபடும் பல்துறை நிறுவனங்கள் என்றால் நிறைய நிறுவனங்களை சீனாவில் பட்டியலிடமுடியும். அரசு, தனியார் என்று பிரித்தாலும் சரிதான். இந்தியாவில் அப்படிகூற ஏதேனும் நிறுவனம் இருக்கிறதா? 
ஒற்றைக்கட்சி சர்வாதிகாரம் என்று கூறி சீனாவை வணிகத்தில் இருந்து பிரிக்க முடியாது புறக்கணிக்கவும் முடியாது. ஆன்லைன் வணிகத்தில் சீன நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகின்றன. டெக் நிறுவனங்கள் என எடுத்துக்கொண்டாலும் கணினி, உட்பாகங்கள் என அனைத்தும் சீனாவில் உற்பத்தியாகியே வெளிவருகின்றன. தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினியை தயாரிக்கும் நிறுவனம் லெனோவோ, சீனாவை பூர்விகமாக கொண்டது தற்செயலானது அல்ல. 

ஒரு டெக் நிறுவனம் லாபம் சம்பாதிக்கவே தொடங்கப்படுகிறது. அதேசமயம். அந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டிலேயே பல்வேறு மாற்றங்களை உருவாக்க முடிகிறது என்றால் ஆச்சரியம் இருக்காதா, அந்த வகையில் அலிபே பணம் செலுத்தும் முறை முக்கியமானது. அதைப்பின்பற்றி டென்பே, பைடு என பிற நிறுவனங்களும் பணம் செலுத்தும் முறையை உருவாக்கியுள்ளன. இன்று டிஜிட்டல் வழியாக பணம் செலுத்த சீனாவில் வீசாட் எனும் டென்சென்டின் ஆப்பை மக்கள் பயன்படுத்துகிறார்கள். 

சீனாவில் டெக் நிறுவனங்கள் எப்படி உருவாயின, அதன் வளர்ச்சி, சந்தித்த சவால்களை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றிக்கான காரணங்களும் நூலில் பட்டியலிடப்பட்டு உள்ளன. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக போட்டியுடைய சீன சந்தையில் எப்படி தடுமாறி இழப்பை சந்திக்கின்றன என்று கூறும் பகுதி முக்கியமானது. இப்படி சந்தை இழந்த நிறுவனங்கள் என டெஸ்கோ, இபே ஹோம் டிபோட் ஆகியவற்றைக் கூறலாம். 
கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!