மார்க்சியம் எழுத்தாளர்களை, படைப்புகளை எப்படி பார்க்கிறது?

 மார்க்சியமும் இலக்கியமும்
ஈஎம்எஸ் நம்பூதிரிபாட்
கட்டுரைகள்

இடதுசாரி அரசியல் தலைவரான ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், எழுதியுள்ள நூல். இந்த நூலில் அவர் மார்க்சியத்தில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் தத்துவப்பின்புலம், படைப்பு, கலை சமுதாயத்திற்காகவே, சுயமான உணர்வு பிரதிபலிப்புக்காகவா என விரிவாக ஆராய்கிறார். 

மலையாளத்தில் தோழர் ஈஎம்எஸ் புகழ்பெற்ற எழுத்தாளர். மாற்று கருத்தியல் கொண்ட பத்திரிகளாக இருந்தாலும் கூட அவரிடம் கட்டுரைகளை வாங்கி பதிப்பிக்க தவறுவதில்லை என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். அப்படியான பாங்கு தமிழில் கிடையாது. இங்கு பார்ப்பன ஊடகங்கள் அவர்களுக்கு வசதியான ஆட்களை வைத்து கட்டுரை எழுத வைக்கின்றன. திஜானகிராமனை படித்து தனிப்பட்ட ரீதியில் ஊக்கம் பெற்றவர்களும் திரைப்பட நடிகர்கள் காலையில் இட்லிக்கு என்ன தொட்டுக்கொள்கிறார் என கிசுகிசு எழுதி பிழைக்கும் நிலை... என்ன சொல்வது?

மொத்தம் ஐந்து கட்டுரைகளில் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பார்ப்பன அரசியல் சக்திகள் கலைத்து, தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுத்தாளர்களின் படைப்புகள் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போனது என்று குறிப்பிடும் கட்டுரை முக்கியமானது. நூலில் லெனின், மார்க்சிம் கார்க்கிக்கு எழுதிய கடிதங்கள், படைப்பு, புரட்சி போராட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்களை விளக்குகிறது. ரஷ்யாவில் நடைபெற்ற சோசலிச போராட்டத்திற்கு மாக்சிம் கார்க்கி எழுதிய படைப்புகள் ஊக்கம் தந்தன என்பதை அனைவரும் அறிவோம். தொழிலாளர்கள் புரட்சிக்கு தயாராவதை தாய் என்ற இலக்கியபடைப்பு தெளிவாக காட்டும். 

மாக்சிம் கார்க்கி, லெனின் அவசியமில்லாத சண்டைகளில் ஈடுபட்டதை கண்டிக்கிறார். லெனின், அப்படியான விவாதங்கள், சண்டைகள் ஏன் உருவாகின்றன என விளக்கி எழுதுகிறார். இந்த இருவருமே நண்பர்கள். அதேசமயம் கருத்து முரண்பாடுகள் இல்லாமலில்லை. அதை இருவருமே வெளிப்படுத்தி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். இது இன்றைய சர்வாதிகார, மத அடிப்படைவாத நாடான இந்தியாவில் நிச்சயம் ஆச்சரியமளிக்கும் போக்காகவே தெரிகிறது. 

மார்க்சியர்கள், சமூகத்தை அடிப்படையாக கொண்டிராத படைப்புகளை புறக்கணிப்பது பற்றிய தவறை ஏற்று்க்கொள்கிறார். இதற்கு ஆதாரமாக ஏங்கல்ஸ் பல்வேறு எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்களை சுருக்கி சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட கருத்து நிலையை, தத்துவத்தை பின்தொடர்ந்தால் கலைத்தன்மை படைப்பில் இருக்காது என்பதையும் தவறான கருத்து என கட்டுரையில் நிரூபித்து எழுதியிருக்கிறார். இன்றைய காலத்தில் இதுவொரு முக்கியமான கருத்தும் கூடத்தான். 

அதுவா, இதுவா என கருத்துகளில், தத்துவங்களில் தடுமாறுபவர்களுக்கு தோழர் ஈஎம்எஸ் தனது கட்டுரைகள் வழியாக தெளிவான வழியைக் காட்டியிருக்கிறார் என்றே கூறவேண்டும். படைப்பு, சுதந்திரம், தத்துவம், உழைக்கும் மக்களை படைப்பாளிகள் அணுகுவது, அவர்களது வாழ்வை படைப்பாக்குவது என பல்வேறு தெளிவை நூல் வழங்குகிறது.   

நன்றி எழுத்தாளர் ஜெயமோகன்
கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!