இடுகைகள்

சனாதனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வருத்தமோ குற்ற உணர்ச்சியோ கொள்ளாத இந்துஸ்தானத்தின் புதிய விதிகள்!

படம்
  இந்தியா, இந்துஸ்தானாக மாறத் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன விஷயங்களை நாம் நாளிதழ்களில் பார்ப்போம். அல்லது பார்க்க கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதைப் பற்றிய கற்பனை இது. அதேசமயம் சில விஷயங்கள் நடந்துகொண்டும் இருக்கலாம்.  வானொலிகளில் ஆன்மிக பாடல்கள் முழுக்க இந்து கடவுள்களைப் பற்றியதாகவே இருக்கும். சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படாது. மக்களிடம் வரிகளை வாங்கித்தானே அரசு ஒலிபரப்பு நிறுவனம் இயங்குகிறது என்று கூறினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்.  அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தேசத்தை முன்னேற்ற விரும்புவது மக்களின் தோளில்தான் உள்ளது. எனவே, அதிக விலை கொண்ட தரமற்ற உள்நாட்டு பொருட்களை மட்டுமேதான் வாங்கவேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ இனிமேல் அப்படித்தான். இதை சரிபார்க்க உறுதிப்படுத்த மதவாத கட்சியின் துணை அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வருவார்கள். சோதனையிடுவார்கள்.  கூடுதலாக குளிர்பதனப்பெட்டி சோதனை தனி. சமையல் அறையில், இந்...

தீண்டத்தகாத இனத்தவரின் பெண்களை விபச்சாரிகளாக்கிய மராட்டிய பேஷ்வாக்கள்!

  மராட்டியத்தில் புகழ்பெற்ற கலைகளாக தமாஷா, லாவணி ஆகிய கலைகள் உள்ளன. இந்த இரண்டு கலைகளும் பொழுதுபோக்கு கலைகளாக உள்ளன. ஆனால், சமூக கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலித்துகள், அதாவது தீண்டத்தகாவர்கள் தமாஷா, லாவணியை நடத்தி வருகிறார்கள். இதில் பாலுறவு, சாதி என இரண்டுமே நீக்கமற உண்டு. இதை தொடர்ச்சியாக நடத்தி வருவதில் மராட்டிய அரசியலுக்கும் முக்கியப் பங்குண்டு. மராட்டியத்தில் வாழும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தமாஷா, லாவணி ஆகிய கலைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஈடுபடும் தலித் மக்கள்,  சாதி ரீதியான ஒடுக்குமுறை, பாலியல் வக்கிரம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமாஷாவில் பாடல், இசை, மைம், கவிதை ஆகியவை இடம்பெறுகிறது. அடிப்படையில் இதில் நாடகம், நகைச்சுவை என இரண்டுதான் இருக்கும். ஏறத்தாழ மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கூத்து போன்ற இயல்பைக் கொண்டது. இதில் பார்வையாளர்களாக மேல்சாதிக்காரர்கள், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். தமாஷா ஆண் பார்வையாளர்களுக்கானது. எனவே, இதில் பங்கேற்கும் பெண்கள் அதற்கேற்ப, காமத்தை...

இந்திரா நகர் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆதி திராவிடர் தெரு - அனுசுயாவின் சுயமரியாதை முயற்சி

படம்
  பெயர் மாற்றம் ஏற்படுத்தும் சமூக மாற்றம்! ஹரிஜன், ஆதி திராவிடர் என்ற சொற்கள் நாளிதழ்களில் படிக்க எப்படி இருந்தாலும்   அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? சமூக அந்தஸ்து சார்ந்து பார்க்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை வகுப்பறையில் அல்லது பொது இடங்களில், அரசு அலுவலகங்களில் கூறப்படும்போது தர்மசங்கடமாக உணர்வு எழக்கூடும். அதனால்தான் தலித்துகள் தங்கள் பெயர்களை நாகரிகமாக வைத்துக்கொள்வதோடு சாதியையும் வெளியே தெரிவிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். கல்வி கற்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்தபிறகு தங்கள் சமூகம் சார்ந்து பாடுபடுவது குறைவு. பெரும்பாலும் சாய்பாபா, ஐயப்பன் கோவில், மூகாம்பிகை கோவில் என சம்பாதித்த பணத்தைக் கொடுத்து தனது   அந்தஸ்தை மேல்சாதிக்கு இணையாக வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அப்படியல்லாமல் தான் சார்ந்த சமூகம், இனக்குழு சார்ந்து கவலைப்படுபவர்கள் தங்களால் முயன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அப்படி செயல்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அனுசுயா. நாகர்கோவில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர், ஹைதராபாத்திலுள்ள   தகவல் தொழில்நுட்...