இடுகைகள்

நேரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வதேசியவாதி நூலில் இருந்து

 நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது.  ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம்.  காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...

ஜவகர்லால் நேரு சொன்னவை....

படம்
  ஜவகர்லால் நேரு சொன்னவை.... 1.நான் மதவெறியை விரும்பாதவன். அது பலவீனமடைந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்புவாதம் எந்த வடிவில் அல்லது உருவத்தில் வந்தாலும் அதையும் நான் விரும்பாதவன்.  2.எந்தக் கொடியைச் சுற்றி நீங்கள் திரண்டு நிற்கிறீர்களோ, நீங்கள் வணக்கம் செலுத்துகிறீர்களோ, அந்தக் கொடி எந்த சமூகத்தையும் சேர்ந்ததல்ல. இது தாய்நாட்டின் திருக்கொடி.  3.நான் சோஷலிஸ்டு, ஒரு குடியரசுவாதி என்பதை மறைக்காமல் கூறவேண்டும். அரசர்கள், மன்னர்களைக் கொண்ட அமைப்பை அல்லது தொழில்துறை அரசர்களை உருவாக்குகின்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4.பண்டைக்கால அரசர்களைக் காட்டிலும் தொழில் அரசர்கள் மக்களின் வாழ்க்கையையும் விதிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் அதிகமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்கார முறைகளையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.  5.சிறுபான்மையினருடைய பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஆபத்து ஏற்படாது என்று நமது பேச்சு மற்றும் செயல்கள் மூலம் முழுமையாக உறுதியளிக்க வேண்டும் என்பதை மட்டும் நான் மீண்டும் வலியுறுத்துவேன். 6. யாருடைய நன்மைக்காக தொழில் நடைபெறவேண்டும், யாருடைய ந...

அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் அரசியல் களம் மாறும்! - ஜவகர்லால் நேரு உரை

படம்
இங்கு நான் வந்திருக்கிற சமயம், மனதளவில் சற்று வினோதமாக உணர்கிறேன். இதுபோன்ற உணவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த இடத்தில், அறிவியல் சார்ந்த கற்றுக்கொள்ளல் தொடர்பான அழுத்தம் திடமாக உள்ளது. டாக்டர் பாபா, எனக்கு கூறியபடி என்னுடைய பகுதியை, அறிவியல் ஆராய்ச்சிக்கு செய்ய வந்திருக்கிறேன். அறிவியல் நிறுவனத்திற்கான அடித்தள தூண்களை அமைத்துக்கொடுப்பதே நாட்டிற்கான எனது பணி. அடிப்படையான அம்சம் என்றளவில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்திய அரசு சார்பாக, டாக்டர் பாபா, மாநாட்டு விருந்தினர்களாகிய உங்களை வரவேற்றுள்ளார். நாட்டு அரசின் உறுப்பினராக, இங்கு வருகை தந்துள்ளோர் அனைவரையும் வரவேற்க விரும்புகிறேன். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் பணியாற்ற வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டால், உங்கள் ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம். நமது செயல்பாட்டை, எதிர்கால உலகிற்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்பவன். இதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க...

சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

படம்
        சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி? இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள். 1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோ...

கிராமம், பழங்குடிகள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவ மாணவர்கள் சிகிச்சையளிக்க முன்வரவேண்டும் - நேரு உரை

படம்
        மருத்துவத்தில் இந்தியா தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமக்கு முன்னும் பின்னும் ஏராளமான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தேவையும் சேவையும் இந்தியாவைக் கடந்தும் கூட இருந்துள்ளது. இன்று யோசிக்கும்போது தொன்மை மருத்துவர்கள், வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மக்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவர்கள் திறமையான மருத்துவர்களாக இருந்ததோடு, காலத்தால் மேம்பட்ட சிகிச்சை முறையைக் கையாண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதேசமயம், நாம் இன்னும் பழைமையான முறைகளை விட்டு நவீனமாக காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. மக்களுக்கு அதிகளவு உதவி தேவைப்படும் சமயத்தில் கூட அறிவை புத்துயிர்ப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது செயல்படவிருக்கும் மருத்துவ நிறுவனம், அறிவியலை அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். பழைமையான முறைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறவில்லை. அவை சரியானதாக இருந்து லாபம் கிடைக்க கூடியதாக இருந்தால் அதை பின்பற்றலாம். பழை...

மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் வேறுபடுவது எங்கு? - ஜவகர்லால் நேரு உரை

படம்
              எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராஜ்குமார் அம்ரித் கௌருக்கு அஞ்சலி செலுத்துவதில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன். என்னுடைய நினைவில் மருத்துவமனையையு்ம, தலைவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அந்தளவு அவரின் பணி, மருத்துவமனையோடு ஒன்றிவிட்ட ஒன்று. மருத்துவமனையின் உருவாக்கம் தொடர்பாக கௌர், பல்வேறு விஷயங்களை என்னோடு விவாதித்திருக்கிறார். செயல்பாடுகளில் பிரச்னைகள் வரும்போது என்னைத் தேடி வந்திருக்கிறார். இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மனதளவில் வேதனை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தபோது, சரி என இசைவு தெரிவித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனை அளவிலும் தரத்திலும் வாக்குறுதி அளித்த வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. செயல்பாடுகளும் பாராட்டு்ம தரத்தில் உள்ளது. முதுகலை படிப்பு படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியான சிறந்த இடமாக இம்மருத்துவமனை உள்ளது. சிகிச்சையின் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்க பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்து வருகிறார்கள். எண்ண...

சீனாவின் வெளியுறவுக்கொள்கை!

படம்
  சீனாவின் வெளியுறவுக்கொள்கை! அமைதியான நல்லுறவு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக்கொள்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1954ஆம்ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சீனாவும், இந்தியாவும் வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டன. அண்மையில், இதை நினைவுகூறும் வகையில், பெய்ஜிங் நகரில் விழா நடத்தப்பட்டது. இதில், சீனாவின் பிரதமர் லீ குவாங், அதிபர் ஷி ச்சின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான அமைதியான ஒத்திசைவு கொண்ட வாழ்வை உருவாக்குவது என கொள்கைகள் பற்றி கூறப்பட்டது. உண்மையில் சீனா, இந்த கொள்கைகள் வழியாக என்ன நினைக்கிறது, உலகம் பற்றிய அதன் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் சீனாவின் வெளியுறவு கொள்கையை பஞ்ச சீல கொள்கை என்று அழைப்பார்கள். இக்கொள்கையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, நடைமுறைப்படுத்தி இயங்கினார். அண்டை நாடுகள் மற்றும் மேற்கு நாடுகள் தொடர்பான உறவுகளை தீர்மானித்த கொள்கை இது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இ்ந்தியா போராடி மீண்ட  ஆண்டு, 1947. இதற்கு காந்தி தல...

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

படம்
  குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார்.  இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது.  இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங...

விளம்பர இடைவேளை - ஆராபிரஸ் வெளியீடுகள்

படம்
 

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்க...

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் த...

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இர...