இடுகைகள்

வழிபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள்!

படம்
       வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள் அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு டிவி சேனலின் தமிழ்ப்பிரிவு, ஒரு வீடியோவில் மருத்துவமுறை பற்றி விவாதித்திருந்தது. ஹோமியோபதி, பற்றிய வீடியோதான் அது. அதில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்திற்கானவை. அவற்றை முற்றாக நம்ப அல்லது மறுக்க முடியாது. அந்த செய்தி வீடியோவில், ஹோமியோபதி அறிவியல் நிரூபணம் கொண்ட மருத்துவமுறை அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாரடைப்பு என்பது போன்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான கமெண்டுகளில், செய்தியை ஏற்கிறோம், மறுக்கிறோம், விவாதிப்போம் என்றெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை. அலோபதியைப் பற்றி வீடியோ போடுங்கள்.ஏன் இந்த மருத்துவமுறையைப் பற்றி போடவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னும் சிலர், ஹோமியோபதி எங்களுக்கு பலன் கொடுத்து நோய் தீர்ந்தது. அதைப் பற்றி இப்படியொரு வீடியோ போட்டால் எப்படி என வம்புக்கு வந்தார்கள். மேற்கு நாடுகளில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தாலும் கூட பிரதமரை அமைச்சர்களை அரசு ஊடகம் கேள...

கேரளத்தில் பிரார்த்தனை மூலம் மக்களுக்கு உதவுகிற நாடகம் நடத்தும் கிறித்தவ கோவில்!

படம்
          இந்துக்களின் வாழ்வில் அதிசயத்தை நடத்தும் கிருபசனம் கோவில்! சாமியார் விவகாரங்களில் முதலில் காஷ்மீருக்கு போனோம். இப்போது கேரளத்திற்கு செல்வோம். இன்றைக்கு மத அடிப்படைவாதிகள், தம் சித்தாந்த எதிரிகளான கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்து மிரட்டி வருகிறார்கள். மதச்சார்பற்ற, கல்வி அறிவு கொண்ட மாநிலத்தை தரைமட்டமாக்க வலதுசாரி மதவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில்தான் நாம் கிருபசனம் கிறித்தவ கோவிலைப் பார்க்கப்போகிறோம். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்மிக அருள் தரும் எண்ணெய், உப்பு, ஒரு பண்டல் கிருபசனம் செய்தித்தாள் ஆகியவற்றை வாங்கியே ஆகவேண்டும். ஒரு பண்டல் நாளிதழ் கட்டின் விலை ரூ.100. இந்த நாளிதழ் பதினைந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படியொன்றும் செய்திகள் ஏதும் இருக்காது. எல்லாம் அதிசய நிவாரண செய்திகள்தான். கடனைத் தீர்த்தார். நோயைத் தீர்த்தார், கல்யாணம் கைகூடியது, மகன் செத்த துக்கம் நீங்கியது, வேலை கிடைத்தது என ஏராளமான அதிசயங்களைப் பற்றி கோவில் நி...

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வது...