இடுகைகள்

தங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முட்டாளின் தங்கம்!

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி கியூபிக் ஸிர்கோனியம் என்றால் என்ன? 1937ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர்கள் எம் வி ஸ்டாக்ஹெல்பர்க், கே சுடோபா ஆகிய இருவரும் கியூபிக் ஸிர்கோனியத்தை கண்டுபிடித்தார்கள். 1970ஆம் ஆண்டு, சோவியத் யூனியனில் உள்ள லெபடேவ் இயற்பியல் ஆய்வகத்தில் கனிமங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதை மேற்பார்வை செய்தவர், விவி ஓசிகா என்ற அறிவியலாளர். அப்போது அந்த வட்டாரத்தில் ஸிர்கோனியம் புகழ்பெற்றதாக விளங்கியது. ஸிர்கோனியம் ஆக்சைடு, இட்ரியம் ஆக்சைடு என இரு வேதிப்பொருட்கள் கலந்து ஸிர்கோனியம் உருவாகிறது. மதிப்பு மிகுந்த உலோகம் என்னென்ன? தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களை மதிப்பு மிகுந்த உலோகங்களாக கூறலாம். மதிப்பிற்குரியது, அரியது என்ற வகையில் பிளாட்டினத்தைக் கூறலாம். இருபத்து நான்கு கேரட் என்பதற்கான அர்த்தம் என்ன? இருபத்து நான்கு கேரட் என்பது, நகையில் உள்ள தங்கத்தின் தூய்மை அளவைக் குறிப்பிடுகிறார்கள். பதினெட்டு கேரட் என்றால், தங்கத்தின் தூய்மை அளவு எழுபத்து ஐந்து சதவீதம் என புரிந்துகொள்ளலாம். வெள்ளை தங்கம் என்றால் ...

கடல்நீரில் தங்கம் உண்டா?

படம்
              அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கடல்நீரில் தங்கம் உண்டா? உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடல் நீரை அலசி ஆராய்ந்தால் நபர் ஒருவருக்கு நான்கு கி.கி. அளவுக்கு தங்கத்தை பெறமுடியும். கடல்நீர் சுழற்சி அடைகிறதா? வடதுருவம், தென்துருவம் ஆகிய இருமுனைகளிலும் உள்ள கடல்நீர் கடிகார சுழற்சி, அதற்கு எதிர்சுழற்சி எனுமாறு நீரோட்ட சுழற்சியைக் கொண்டுள்ளன. செங்குத்து, கிடைமட்டம் என இரு வேறுபட்ட அளவுகளில் கடல்நீரோட்டம் உலகமெங்கும் சென்று வருகிறது. கடல்நீரிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன? குளோரைடு, சோடியம், சல்பேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பைகார்பனேட், புரோமைடு, ஸ்ட்ரான்டியம், போரோன், புளுரைடு ஆகிய வேதிப்பொருட்கள் கடல்நீரில் உள்ளன. கடலில் அலையடிக்க என்ன காரணம்? பூமிக்கு கீழே நடக்கும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, காற்று ஆகியவை காரணமாக கடலில் அலைகள் உருவாகுகின்றன. பூமியின் ஈர்ப்புவிசை, நீரின் அழுத்தம் அலைகளை தொடர்ச்சியாக உருவாகி வரச்செய்கின்றன. கடலின் ஆழம் என்ன? கடலின் தோராய ஆழம் நான்காயிரம் மீட்டர்கள்.  

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது மிகப்பெரிய கௌரவம்!

படம்
    பதக்கம் பெறுவது மிகப்பெரிய கௌரவம்! கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி சீன டைவிங் வீரர்கள் லியான் ஜூன்ஜி,யாங் ஹாவோ ஆகியோர் பத்து மீட்டர் உயரத்தில் இருந்து அவ்வளவு அழகாக துல்லியமாக டைவ் அடித்து நீரில் பாய்ந்தனர். இதை அவர்கள் ஒலிம்பிக் நடுவர்கள் முன்னர் செய்தனர். அவர்கள் அதை பாராட்டுவதற்கு முன்னர், சீன ரசிகர்கள் வீரர்களை பாராட்டி குரல் எழுப்பத் தொடங்கினர். சீன இணை, பிரிட்டனை தோற்கடித்து தங்கம் வென்றது. மற்ற எந்த நாடுகளை விட டைவிங்கில் சீனா, ஐம்பது தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. இது வேறெந்த நாட்டையும் விட அதிகம். சீனாவைப் பொறுத்தவரை ஒலிம்பிக் பதக்கங்கள் என்பது மிகப்பெரிய கௌரவம். தைவானை அபகரிக்க செய்த முயற்சிகளால், சீனா விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்து 1980ஆம் ஆண்டு முதல் விளையாட்டு போட்டிகளில் சீனா பங்கேற்கத் தொடங்கியது. தொடக்கத்தில் மக்கள்தொகைக்கு ஏற்பவெல்லாம் நிறைய பதக்கங்கள் கிடைக்கவில்லை. அடிப்படைக் கட்டமைப்பு குறைவாக போதாமல் இருந்ததே பதக்கப் பற்றாக்குறைக்கு காரணம், சீன அரசு, அடிப்படை கட்டமைப்பு, பயிற்சிகளுக்கு ஏராளமான யு...

தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

படம்
  கல்யாண சௌகாந்திகம் மலையாளம்  திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார் முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் ...

தங்க கடத்தல்காரர் எப்படி இறந்தார் என்று கண்டறியும் காவல்துறை! தங்கம் - வினீத் சீனிவாசன், அபர்ணா

படம்
  தங்கம் மலையாளம்  தங்கம்  தங்கம் மலையாளம் வினீத் சீனிவாசன், அபர்ணா, கலையரசன் கேரளத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து மும்பையில் விற்று சம்பாதிக்கிறார்கள் என்பதே கதை. ஒன்லைனாக கதை நன்றாக இருந்தாலும் சொன்ன விதம் முழுக்க விசாரணை சமாச்சாரமாக இருப்பதால் ஒருகட்டத்தில் படம் எப்போது முடியும் என்று எண்ணம் தோன்றுகிறது. தவிர்க்கமுடியவில்லை. தங்கத்தை நில மார்க்கமாக மும்பைக்கு கடத்தி சென்று விற்று வருவதுதான் வினீத் சீனிவாசன் குழுவின் திட்டம். ஆனால் ஒருமுறை இப்படி செல்லும்போது தமிழகத்தில் முத்துப்பேட்டை அருகே மாட்டிக்கொள்கிறார் சீனிவாசன். அதிலிருந்து மீண்டவர் மும்பைக்கு செல்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவரிடமிருந்து எந்த தகவலும் வருவதில்லை. என்ன ஆனது என விசாரிக்கும் வினீத் சீனிவாசனின் நண்பர் குழு மும்பைக்கு செல்கிறது. பார்த்தால் வினீத் அறையில் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார். ஆனால் அறையில் போராட்டம் நடந்திருப்பது போல தெரிகிறது. எனவே, மகாராஷ்டிரா போலீசார், வினீத்தின் நண்பரிடம், நீங்கள் உண்மையை அறிய நினைத்தால் நாங்கள் உதவுகிறோம். ஆனால் நாங்கள் கேரளத்திற்கு வந்தால் அந்த செலவ...

மஞ்சள் நிற தங்கமா, தங்க குணம் கொண்ட மனம் முக்கியமா? கோல்ட் - அல்போன்ஸ் புத்திரன்

படம்
    கோல்ட் மலையாளம் கதை, திரைக்கதை, அனிமேஷன், படத்தொகுப்பு, கிராபிக்ஸ், சண்டைப் பயிற்சி, இயக்கம் – அல்போன்ஸ் புத்திரன் இசை – ராஜேஷ் முருகேசன் தமிழ் டப் படத்தை மலையாள மொழியில் பார்ப்பதே நல்லது. ஆங்கில சப் டைட்டில் போட்டுக்கொள்ளலாம். மஞ்சள் நிற தங்கத்திற்கு மதிப்பு அதிகமா, தங்கத்தைப்   போன்ற மனசுடைய மனிதனுக்கு மதிப்பு அதிகமா என நிறுத்துப் பார்க்கிற படம். அல்போன்ஸ் புத்திரன் படத்தில் என்ன இருக்கும்? நான் லீனியர் படத்தொகுப்பு, அதிரடிக்கும் இசை, வித்தியாசமான சண்டைகள் என அத்தனையுமே இருக்கிறது. ஆனால் முக்கியமான விஷயம், படத்தில் எதுவுமே மனதைக் கவரும்படி இல்லை. படம் பார்த்தால் அதில் வரும் பாத்திரங்கள், நகைச்சுவை என ஏதேனும் பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள் அல்லவா? ஆனால் கோல்ட் படத்தில் உள்ள எதையும் அப்படி சொல்லமுடியாது. அனைத்துமே அரைகுறையாக இருப்பது போலவே இருக்கிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது. எனவே, ஏதோ ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது போல இருக்கிறது. உருப்படியான விஷயங்களைப் பார்ப்போம். பிரிதிவிராஜ்தான் தயாரிப்பு, நடிப்பு எல்லாமே. நடிப்பை...

ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

படம்
  இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.  படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான்.  அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோ...

பூமியில் கிடைக்கும் தங்கம் உருவான கதை!

படம்
விண்வெளியிலிருந்து உருவான உலோகம்!  இன்று ஒருவரின் செல்வ வளம், நிலம், சேர்த்து வைத்துள்ள பல்வேறு நகைகளோடும் சேர்த்தே  அளவிடப்படுகிறது. அதிலும் அவர் தங்கத்தை சேர்த்து வைத்தால், அதன் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும்.   உண்மையில் இந்த தங்கம் எப்படி உருவானது? தங்கம் அரிதான உலோகம் என்பதோடு, அதன் உருவாக்கத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  நட்சத்திரங்களின்  இணைதலின்  விளைவாகவே, தங்கம் உருவாகியிருக்கும் என  அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திரங்களில் உள்ள சிறு பகுதிகள் ஒன்றாக இணைவதன் வழியாக, அதிலிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நட்சத்திரங்களில் பெருமளவு உள்ள ஹைட்ரஜன் இதில் அதிக பங்களிப்பைத் தருகிறது.   சிறு பகுதிகளின் இணைவு அல்லது மோதலின்போது வெப்பமும், அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாகவே, நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஹீலியம் உருவாகிறது.  இந்த செயல்பாடு சுழற்சியாக நடைபெறுகிறது. இச்செயல்பாடு, இரும்பு உருவாகும் வரை தொடர்கிறது. இரும்பு, வினையில் உருவாகும் ஆற்றலை பெருமளவு உறிஞ்சுகிறது. இதன் ...

நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி 126 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  நவீன ஒலிம்பிக் போட்டிகள்  தொன்மையான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது கி மு 7766 ஆம் ஆண்டு தொடங்கியது பிறகு கி பி 393 வரை அப்படியே தொடர்ந்தது.  கிரீஸின் ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெற்றன.  நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ஆம் ஆண்டு தொடங்கின. இந்த போட்டிகள் நடைபெற 1503 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான ஐடியாவின் சூத்திரதாரி பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பாரோன் பியர் டி கூபெர்டின். இவர்தான் நவீன ஒலிம்பிக் போட்டிக்கான ஐடியாவை எடுத்து வந்தார். அந்த ஆண்டு, 1894. 1896ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 6 முதல் 15 வரை கிரீசின் ஏதேன்ஸில் நடைபெற்றது.  14 நாடுகளைச் சேர்ந்த வீர ர்கள் இதில் பங்கேற்றனர். பெரும்பாலான வீர ர்கள் கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,  பிரிட்டிஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் கலந்துகொண்டனர்.  43 போட்டிகளில் பெரும்பாலான வீர ர்களாக கலந்துகொண்டது ஆண்கள்தான். நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், எடை தூக்குவது, மல்யுத்தம், டென்னிஸ், துப்பாக்கிச்சூடு ஆகிய போட்டிகள் இதில் உள்ளடங்கும். வெளிநாட்டு வீரர்களை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஏறத்தாழ 6...

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ள...

பதக்கம் வென்றவர் மட்டும்தான் முக்கியமா? - பணப்பரிசுகளை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள்?

படம்
                வெற்றி பெற்றவருக்கே அனைத்தும் சொந்தம் !     இந்தியாவில் விருது வென்றவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமும் பணப்பரிசுகளும் விளையாட்டுத்துறைத்துறையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை . பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் , நோபல்லெஸ் ஆப்லிஜ் என்ற வார்த்தையை 1835 ஆம் ஆண்டு பயன்படுத்தினார் . இதன்பொருள் , சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பணக்காரர்கள் , உழைக்கும் மக்கள் மீது கருணை காட்டுவதில்லை என்பதுதான் . இந்த வார்த்தை அப்படியே இந்திய அரசுக்கும் விளையாட்டுத்துறைக்கும் பொருந்துவது நகை முரணாக உள்ளது . ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா கடினமாக உழைத்து வென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அவருக்கு மத்திய அரசு , பல்வேறு மாநில அரசுகள் , தனியார் அமைப்புகள் , விளையாட்டு அமைப்புகள் என பறந்து வந்து ஏராளமான பரிசுகளையும் , ரொக்கப்பரிசுகளையும் வழங்கிவருகின்றன . இந்த வகையில் நீரஜூக்கு 4.85 கோடியும் . மீராபாய் சானுவுக்கு 2.50 கோடியும் நிதியுதவியாக கிடைத்துள்ளது . இந்திய மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது . இதி...

ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறதா?

படம்
                  ஹால்மார்க் சட்டங்களால் பாதிப்பு உண்டா ? ஜூன் 16 முதல் தங்க நகைகள் , அதில் செய்யப்படும் கலை பொருட்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரம் அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது . இதுதொடர்பாக ஹால்மார்க் சட்டத்தையும் கடந்த ஆண்டே உருவாக்கியுள்ளது . இதுபற்றி பார்ப்போம் . ப்ரியூ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் அங்கீகரித்த மையங்கள் மூலம் ஹால்மார்க் சா்ன்றிதழ்களை நகை தயாரிப்பாளர்கள் பெறலாம் . தங்க நகையின் தரம் இவ்வளவுதான் என்று மக்களிடம் கூறும் தரத்திற்கான சான்றிதழ்தான் ஹால்மார்க் ்என்பது . 22 கே 915 என்று முக்கோண வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதுதான் ஹால்மார்க் அங்கீகாரம் . இதில் நான்கு வகை உண்டு . தங்கம் எந்தளவு தூய்மையாக உள்ளது என்பதையு்ம் ஹால்மார்க் மூலம் அறியலாம் . 14, 18, 20,22 என பல்வேறு கேரட் தங்கங்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன . குறிப்பிட்ட நகை ஒன்றுக்கு ஹால்மார்க் சான்றிதழ் வழங்க அரசுக்கு ரூ . 35 பிளஸ் ஜிஎஸ்டி வரியோடு வழங்கவேண்டும் ஒருவரிடம் ஹால்மார்க் அங்கீகாரம் இல்லாத தங்கம் இருந்தாலும் கூட அதனை தங்...

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை ...