இடுகைகள்

சிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விரைவில் - மின்னூல் வெளியீடு - உபசாந்தம் - உளவியல் நூல் - இராம பாரதி

படம்
 

ஆடுகளின் வலியை அறிந்து சிகிச்சையை பரிந்துரைக்கும் ஏஐ மாடல்!

படம்
 ஆடுகளின் வலியை அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கும் ஏஐ உடனே அந்த ஏஐ பெயரைக் கேட்காதீர்கள். ஆங்கில கட்டுரையை எழுதிய லூசி டு கூட கடைசிவரைக்கும் ஏஐ மாடலின் பெயரை கூறவே இல்லை. பொதுவாக மனிதர்களே மருத்துவரிடம் தன் உடல்நிலை பற்றிய அறிகுறிகளை நோயை முழுமையாக கூற மாட்டார்கள். அதற்கென சிறப்புக்காரணம் ஏதுமில்லை. சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் பேசினால் மட்டுமே சில அறிகுறிகளையாவது சொல்வார்கள். தோல் நோய் என்றால் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், பிற நோய்களை பற்றி நோயாளி சொன்னால்தானே தெரியும். ஆடுமாடுகளின் நோய்களை புகைப்படம் அல்லது காணொலி மூலமே மருத்துவர்கள் அடையாளம் கண்டு சிகிச்சை செய்து வந்தனர். இப்போது ஏஐ காலம் அல்லவா? விலங்குகளின் வலியை மனிதர்கள் முன்முடிவுகளோடு அணுகி சிகிச்சை செய்ய முற்படுகிறார்கள் என புளோரிடா கால்நடை அறிவியலாளர் லுடோவிகா சியாவேக்சினி கருத்து கூறுகிறார். இவர்தான் மேற்சொன்ன ஆய்வை செய்தவர். நாற்பது ஆடுகளை தேர்ந்தெடுத்து, அதை படம்பிடித்தனர். தங்களுடைய மருத்துவ அறிவை கணினிக்கு புகட்டி படங்களில் உள்ள ஆடுகளுக்கு நோய் உள்ளது, அல்லாதது என பிரித்திருக்கிறார்கள். இப்படித்தான் ஏஐ மாடல் உருவ...

உடல் பருமன் ஆபத்து, ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் விளைவுகள் - மிஸ்டர் ரோனி

படம்
            அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உடல் பருமன் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்துகிறது? பொதுவாக, குழந்தைகள் கொழு கொழுவெ இருப்பதை ரசிக்கிறார்கள். ஆனால் வயதுக்கு மீறிய உடலின் செழுமை எப்போதுமே ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தம், டைசிலிபிடெபியா, இரண்டாம் நிலை நீரிழிவுநோய், இதயநோய்கள், வாதம், ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், மூச்சு விடுவது தொடர்பான நோய்கள், புற்றுநோய் ஆகியவை உடல்பருமனால் உண்டாகின்றன. ஒருவரின் ரத்தத்தில் அதிகரிக்கு்ம ஆல்கஹால் அவரின் உடல், இயல்பில் மாற்றம் ஏற்படுத்துமா? ரத்தத்தில் அதிகரிக்கும் ஆல்ஹால் என்பது ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக கொண்டது. மதுபானம், மதுபானம் சார்ந்த பல்வேறு பானங்களும் இந்தளவில்தான் உடலைப் பாதிக்கிறது. ஆல்கஹால் என்பது எத்தில் ஆல்கஹால் என்று புரிந்துகொள்ளவேண்டும். இதன் தூய்மையான தன்மையைப் பொறுத்து ஒருவரின் இயல்பு மாறும். இப்போது அதன் அளவு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். 0.02-03 சதவீதம் அதிகரித்தால் ஒருவரால் சரியாக யோசிக்க முடியாது, உடலின் ஒத்திசைவு மாறும். 0.05 சதவீதம் அதிகரித்தால், மயக்கம் உருவாகும் 0.08-0.10 என்ற அளவை அமெரிக்க மா...

டைம் 100 - சிக்கில் செல் நோயைத் தீர்க்கும் சிகிச்சையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

படம்
            ஸ்டூவர்ட் ஆர்கின் stuart orkin மரபணு தொடர்பான நோய்களை தீர்ப்பது, குணப்படுத்துவது, குறைந்தபட்சமான வலி, வேதனையை குறைப்பது கடினமான ஒன்று. உலகமெங்கும் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்கள் விடாமுயற்சியோடு செயல்பட்டு, சிகிச்சையை மேம்படுத்த, தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகிறார்கள். அவர்களில் முக்கியமான ஆராய்ச்சியாளர், ஸ்டூவர்ட் ஆர்கின். இவர் சிக்கில் எனும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஹீமோகுளோபின் மரபணுவில் உள்ள டிஎன்ஏவில் ஏற்படும் மாறுதலால் சிக்கில் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்த செல்களின் வடிவம் மாறி, உடலில் ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான நிலை. ஆர்கின், கிரிஸ்பிஆர் நுட்பத்தை சிக்கில் நோயைத் தீர்க்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார். கிரிஸ்பிஆர் சிகிச்சையாளர்கள், வெர்டெக்ஸ் பார்மசூட்டிகல் நிறுவனம் ஆகியோர் இணைந்து ஆர்கினின் கண்டுபிடிப்பை சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்ற அனுமதி மூலம், சிக்கில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் கிரிஸ்பிஆர் ...

ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!

படம்
  எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம்.  மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்? அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம்...

வயதாவதை தடுக்கும் உடற்பயிற்சி!

படம்
  வயதாக கூடாது என நினைப்பது தவறு கிடையாது. அதற்கு என்ன செய்யலாம் என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதிக ஆயுள் கொண்டவர்களை ஆய்வு செய்து உணவு, வாழ்க்கைமுறையைக் கூட பதிவு செய்து வருகிறார்கள். உண்மையில் உணவு, லோஷன், காய்கறி, பழம் என ஏதுமே உதவாது என்பதே உண்மை. காரணம், வயதாவதை, உடல் பலவீனமாவதை தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தை உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். குறிப்பாக இதயநோய்கள், வாதத்தை உடற்பயிற்சிகள் செய்வது குறைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.  செல்களில் உள்ள நச்சை நீக்கினால்தான் ஒருவர் வயதாவதைத் தீர்க்க முடியும். அந்த வகையில் உடற்பயிற்சியே உதவுகிற கருவியாக உள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் சுரக்கிறது. சோர்வை போக்குவதோடு, மூட்டுகளை இலகுவாக்குகிறது. உடல் முழுக்க ஆக்சிஜன் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. செல்களின் வயதை டிஎன்ஏவே தீர்மானிக்கிறது. இந்த செயல்பாட்டில் உடற்பயிற்சி தாக்கம் ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை.  இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரே நாளில் மாரத்தான் ஓடவேண்டியதில்லை. மெதுவாக பயிற்சிகளை ச...

மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!

படம்
  ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம் இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.  ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும்.  மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்ப...

ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை மீது சந்தேகப்பட்ட உளவியலாளர்!

படம்
  உளவியல் உலகில் இரண்டு ஆளுமைகள் முக்கியமானவர்கள் ஒருவர் இவான் பாவ்லோவ், அடுத்து, சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர்களின் உளவியல் சிகிச்சை முறைகள் வேறுபட்டவை. சிக்மண்ட் ஃப்ராய்டின் முறைகள் நோயாளியை அடிப்படையாக கொண்டவை. இந்த முறையில் முறையாக ஆய்வுப்பூர்வ கருத்து சிந்தனை ஒன்றை உள்ளதாக கூறமுடியாது. நிரூபிக்கவும் முடியாது. இவான் பாவ்லோவின் முறைகளில் ஆய்வு நிரூபணம் உண்டு. தொடக்க கால உளவியலாளர்கள் கூறிய தத்துவம் சார்ந்த விளக்கங்களை பின்னாளில் வந்த உளவியலாளர்கள் ஏற்கவில்லை. காரணம், அவர்களுக்கு ஆய்வுப்பூர்வ காரணங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டன.  உளவியல் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதில்  உளப்பகுப்பாய்வு, தன்னுணர்வற்ற நிலையை ஆராய்வது என்பது பொதுவான அம்சமாக இடம்பெற்றது. இதை கேள்வி கேட்டவர்களில் ஆரோன் பெக்கும் ஒருவர். 1953ஆம் ஆண்டு உளவியலாளராக படித்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது சோதனை உளவியல், மனதின் நிலைகளை ஆராயத் தொடங்கியது. இதை அறிவாற்றல் புரட்சி என உளவியல் வட்டாரத்தில் கூறினர். உளவியல் பகுப்பாய்வு படித்துவிட்டு பணிக்கு வந்தாலும் பின்னாளில் அதன் உண்மைத்தன்மை பற்றிய சந்த...

தோல்வி அடைந்தாலும் வெற்றியை பெற சிம்பன்சிகள் செய்த முயற்சி!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர்கள் பழைய உளவியல் கோட்பாடுகள் பற்றி சந்தேகத்தை எழுப்பினார்கள். இவர்கள் புனித தன்மை கொண்ட அறிவியல் முறையிலான நிரூபணம் செய்யப்பட்ட சோதனை முறைகளை மட்டுமே நம்பினார். இதை கெஸ்சால்ட் என்று அழைத்தனர். இந்த முறையை வோல்ஃப்கேங் கோஹ்லர், மேக்ஸ் வெர்தீமர், கர்ட் காஃப்கா ஆகியோர் உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கும் கெஸ்சால்ட் தெரபிக்கும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதை கெஸ்சால்ட் சைக்காலஜி என்று குறிப்பிட்டனர். இதில் பார்வைக்கோணம், கற்றல், அறிவாற்றல் ஆகிய அம்சங்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.  உளவியலில் குண இயல்புகள் பற்றிய பிரிவை மிகவும் எளிமையானதாக இயற்கையின் கோணத்தில் மாறும் இயல்புடையதாக கருதுகின்றனர் என கோஹ்லர் கருத்து கொண்டிருந்தார். இவர், ஆந்த்ரோபாய்ட் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிறகு, தான் நம்பிய கொள்கைகளை அங்கு சிம்பன்சிகளை வைத்துசோதித்தார். சிம்பன்சிகளை கூண்டில் அடைத்து அதன் முன்னர் உணவை வைத்து அதை அடையும் வழிகளை சிக்கலாக்கிவிட்டார். முதலில் உணவை எளிதாக பெற முடியாமல் சிம்பன்சிகள் திணறின என்பது உண்மைதான். ஆனால் பிறகு ...

தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளிடம் உருவாகும் அதீத வெறுப்பு - என்ன காரணம்? எப்படி தீர்ப்பது?

படம்
  ஒரு குழந்தை கைவிடப்பட்டு ஆதரவின்றி தெருவில் நிற்கிறது. அல்லது காப்பகத்தில் வளர்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, வழிகாட்டுதல் கிடைத்தால் பெரிய சாதனைகளை படைப்பார்கள் என சிலருக்கு தெரிகிறது. இப்படித்தான் பிள்ளைகளை  தத்தெடுப்பது தொடங்குகிறது. இப்படி தத்து வழங்கப்பட்ட பிள்ளைகள், புதிய வீட்டில் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படுவார்களா, இல்லையா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலும் குழந்தைகளை வெறுக்காமல் இருக்க வளர்ப்பு பெற்றோர் முயல்கிறார்கள். சகித்துக்க்கொள்ள பார்க்கிறார்கள். குழந்தைகளோ வெறுக்கப்பட்டால்தான் அன்பு கிடைக்கும் என புரிந்துகொள்கிறார்கள். இதைபற்றி டொனால்ட் வின்னிகாட் என்ற உளவியலாளர் ஆராய்ச்சி செய்தார். தாய், பிள்ளை என இருவருக்குமான உறவு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை  முக்கிய அம்சங்களாக கருதி ஆய்வு செய்தார்.  இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், மெலானியா கிளெய்ன் ஆகியோரின் கொள்கை,ஆய்வு மீது பெரும் பற்றுதல் கொண்டவர். தன்னுணர்வற்ற மனநிலையில் ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்தார். இரண்டாம் உலகப்போரில் வீடுகளை இழந்த உறவுகளை இழந்த சிறுவர்கள் பற்றி ஆராய...

வாழ்க்கையில் வலி, வேதனை, இன்பம், துன்பம் என அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சை முறை!

படம்
  பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி இமானுவேல் கான்ட், மனிதர்கள் சிந்திக்கும் திறன் பற்றிய கருத்தொன்றைக் கூறினார். மனிதர்கள் தம்மைக் கடந்து வெளி உலகம் என்ற ஒன்றை முழுமையாக அறியவில்லை. நாம் அறிந்த அனைத்துமே அனுபவங்களாக அமைந்தவற்றை மட்டுமே என்றார். இது அன்றைய காலத்தில் பெரும் விமர்சனங்களைப் பெற்ற கருத்தாக அமைந்தது. இதுதான் கெஸ்சால்ட் தெரபியின் அடிப்படை கருத்து.  மனிதர்களின் வாழ்கையில் உள்ள மோசமான அனுபவங்கள், சிக்கல்கள், கஷ்ட நஷ்டங்கள், லட்சியம், ஆசை என அனைத்துமே முக்கியம்தான் என்ற கருத்தை கெஸ்சால்ட் தெரபி ஏற்றது. உலகில் பார்க்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் என அனைத்தையும் நாம் உணர்ந்து பார்க்க முடியாது. அதில் நாம் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யவேண்டும்.  எதார்த்த நிகழ்ச்சியை ஒரு மனிதர் எப்படி உள்வாங்குகிறார் என்பதே அவரின் பார்வைக்கோணம் உருவாகுவதில் முக்கியமான அம்சமாக இருக்கும். இதைத்தான் கெஸ்சால்ட் தெரபி முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான ஃப்ரிட்ஸ் பெரிஸ் என்பவரின் கருத்தாக இருந்தது. உண்மை என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து, கோணம் அதை எப...

ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

படம்
  உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார்.  சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு ...

சிக்மண்ட் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகள் மங்கத்தொடங்கிய காலகட்டம்!

படம்
  காலக்கோடு 1895 சிக்மண்ட் ஃபிராய்ட், ஜோசப் ப்ரூயர் ஆகியோர் இணைந்து ஸ்டடிஸ் ஆன் ஹிஸ்டீரியா என ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.  1900 சிக்மண்ட, இன்டர்பிரிடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற நூலில் சைக்கோ அனாலிசிஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார்.  1921 கார்ல் ஜங்க், தனது சைக்காலஜிகல் டைப்ஸ் என்ற நூலில் இன்ட்ரோவர்ட் எக்ஸ்ட்ரோவர்ட் என்ற கருத்துகளை வெளியிட்டார்.  1927 ஆல்ஃபிரட் அட்லர் என்பவரே தனிநபர் உளவியலுக்கான அடித்தளமிட்டவர். இவர் தி பிராக்டிஸ் அண்ட் தியரி ஆஃப் இண்டிவிஜூவல் சைக்காலஜி என்ற நூலை எழுதினார்.  1936 தி ஈகோ அண்ட் தி மெக்கானிச் ஆஃப் டிபென்ஸ் என்ற நூலை அன்னா ஃபிராய்ட் எழுதினார். 1937 பதினான்காவது சைக்கோ அனாலடிகல் மாநாட்டில் ஜாக்குயிஸ் லாகன், தி மிரர் ஸ்டேஜ் என்ற அறிக்கையை வெளியிட்டார்.  1941 சிக்மண்டின் கருத்துகளில் கரன் கார்னி வேறுபாடு கொண்டு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் சைக்கோஅனாலிசிஸ்  என்ற அமைப்பைத் தொடங்கினார்.  1941 எரிக் ஃப்ரோம், தி ஃபியர் ஆஃப் ஃப்ரீடம் என்ற சமூக அரசியல் உளவியல் நூலை எழுதினார்.  இருபதாம் நூற்றாண்டில் குணநலன் சார்ந்த ஆராய்ச்ச...

அவதாரம் 1 - உள் ஆழத்தில் ஒரு எதிரொலி மின்னூல் வெளியீடு!

படம்
உளவியல் குறைபாடுகள், அதற்கான சிகிச்சை, மருந்துகள் பற்றி விவரிக்கிற நூல் இது. இந்த நூல் மூலம் ஒருவர் உளவியல் குறைபாடுகள், அதன் அறிகுறிகள், மருந்துகள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். மற்றபடி மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை நேரடியாக ஒருவர் பயன்படுத்தக்கூடாது. இந்த நூல் உளவியல் குறைபாடுகளை, அறிகுறிகளை அறிந்துகொள்ள உதவும் வழிகாட்டி நூல் மட்டுமே.  https://kdp.amazon.com/en_US/bookshelf?publishedId=ARXS766BBPQT0

அவதாரம் மின்னூல் அட்டைப்படம் வெளியீடு!

படம்
 

பிஆர்சிஏ 2 மரபணு ஏற்படுத்தும் புற்றுநோய்! - தலைமுறைகளைத் தாண்டி தொடரும் வேதனை

படம்
  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு, மரபணு வழியாக எளிதாக புற்றுநோய் ஒருவரை தாக்கி அழிக்கிறது. கூடவே, அவரது குடும்பத்தையும் பாதிக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைக்க பலரும் மருத்துவ சிகிச்சையை நாடி வருகிறார்கள். இதில் பொருளாதார சிக்கல்களும் உள்ளன. அமெரிக்க மருத்துவர் சூசனா உங்கர்லெய்டர், அவரது அப்பாவிற்கு சோதனை மூலம் கண்டறிந்த கணைய புற்றுநோயால் ஆடிப்போயிருந்தார். அப்பாவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய் மூலம் தனக்கு எதிர்க்காலத்தில் வரும் ஆபத்தை அவர் முதலில் உணரவில்லை. 2022ஆம் ஆண்டு சூசனாவின் அப்பா ஸ்டீவனை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த பிஆர் சிஏ 2 எனும் மரபணு, மார்பு, கருப்பை, கணையத்தில் புற்றுநோய்   உண்டாக்குவதோடு அவரது பிள்ளைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் கண்டனர். அவர்களின் பரிந்துரை பெயரில் சூசனாவும் அவரது சகோதரியும் மரபணு சோதனையை செய்து புற்றுநோய் அபாயத்தை அடையாளம் கண்டுகொண்டனர். நாற்பத்து மூன்று வயதாகும் சூசனா, மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக செயல்பட்டுவருகி...

மனநலன் குறைபாடுகளை எதிர்கொள்வது எப்படி? - முதியோர் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள்

படம்
  பெருகும் மனநலன் பாதிப்பு   1.இந்திய மக்கள் தொகையில் உளவியல் சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு 150 மில்லியன் 2.30 மில்லியன் அளவு மக்கள் மட்டுமே உளவியல் குறைபாடு சார்ந்த சிகிச்சைகளை நாடி அதைப் பெறுகின்றனர். 3.15-29 வயது கொண்ட பிரிவினர் இறப்பில் தற்கொலை முக்கியமான பங்கு வகிக்கிறது. இவர்களின் இறப்பில் நான்காவது முக்கியமான காரணமாக உளவியல் பிரச்னைகள் உள்ளன. 4.2022ஆம் ஆண்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,526 ஆக இருந்தது என தேசிய குற்ற ஆவண அமைப்பு கூறியுள்ளது. 5.மனம், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் முதியோர்களின் அளவு 6.6 சதவீதமாக உள்ளது. 6.அறுபது வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் உளவியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 7.மனச்சோர்வு, பதற்றம் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு 1 ட்ரில்லியனாக உள்ளது என உலகம் முழுமைக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். மனிதர்கள் உடலைப் பெற்று வந்ததே அவதிப்படத்...

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மனநிலை குறைபாட்டு சிகிச்சை கட்டணம்- சமாளிக்க முடியாத கட்டண உயர்வு!

படம்
  மனநிலை குறைபாடுகளுக்கான சிகிச்சைக் கட்டணம் உயர்வு – அதிகரிக்கும் பொருளாதார சுமை உடல்ரீதியான நோய்களுக்கு ஏற்படும் செலவுகள், குடும்பத்திற்கு பொருளாதாரச் சுமை களை ஏறபடுத்திய காலம் என்று செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது, மனநிலை குறைபாடுள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி, ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.   அண்மையில் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறுதியாக அதை சிகிச்சை மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்.   ஆனால் வாரம் ரூ.3 ஆயிரம் செலவு என கட்டணம் உறுதியானது. நல்ல செழிப்பான ஆள் என்றாலும் குடும்பஸ்தரான அவரால் செலவுகளை சமாளித்து செய்ய முடியவில்லை.   சிகிச்சைக்கான செலவுகள் கூடுவதோடு, குடும்பத்திற்கும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவதாக மென்பொருள் பொறியியலாளர் நினைக்கத் தொடங்கிவிட்டார். மேலே கூறியுள்ளது   ஆயிரக்கணக்கான மனநிலை குறைபாடுகளை கொண்டவர்களில் ஒருவரின் கதைதான். ஏராளமானவர்கள் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். அத...

ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவும் ஃபெமா! - மோகன் முத்துசாமி, உதயகுமாரின் புதிய முயற்சி

படம்
  சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்தவர் மோகன் முத்துசாமி. இவர், தனது வீட்டருகே வாழ்ந்து வந்த சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தார். அச்சிறுமியை மருத்துவம் செய்து காப்பாற்றும் அளவுக்கு அவளது தந்தையிடம் பணமில்லை. இது மோகனை யோசிக்க வைத்தது. பின்னாளில் ஃபெமா எனும் அமைப்பை தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து தொடங்க வைத்தது. ஃபெமா என்ற தன்னார்வ அமைப்பு, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகளை, நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நடத்தி வருகிறது. இங்கு 30 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால் போதும். ஆலோசனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஃபெமா செயல்படுகிறது.   ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ சேவைகளை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கு தெரு நாடகங்களை நடத்துகிறார்கள். கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் தவிர, படுக்கையில் படுத்துவிட்ட நீண்டகால நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறார்க...

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆத...