இடுகைகள்

சில்லறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைப் பயணம்!

     சென்னைப் பயணம் - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... மாணவர் நாளிதழில் வேலை செய்து அதைவிட்டு விலகிய பிறகு, நேர்காணல் ஒன்றுக்கு ஒருமுறை சென்னைக்கு சென்றதோடு சரி. அதற்குப்பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருமுறை, பாத்திரங்களை எடுக்கச் சென்றபோது மெட்ரோ ரயில் காரணமாக மயிலாப்பூர் குதறப்பட்டிருந்தது. அப்போது, பேருந்துகள் எங்கே சென்று எங்கே திரும்புகின்றன, எது பேருந்து நிறுத்தம் என்றே தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் மயிலாப்பூர் அன்றைக்கு இருந்தது.அன்று அறையில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் முழுக்க எடுக்கமுடியவில்லை. பாதி பாத்திரங்களை அய்யங்கார் எங்கே உள்ளது என மறந்துவிட்டார். பிறகு, நாங்கள் ஊருக்கு வந்தபிறகு பாத்திரங்கள் தன்னுடைய அறையில்தான் உள்ளன என்று பொறுப்போடு தெரிவித்தார். அந்த முறை பயணத்தில் அம்மாவும் உடன் பயணித்தார். இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியது. ஓரியண்ட் ஃபேனை எல்லாம் ஒருவழியாக சரக்கு கட்டணம் கொடுத்து கொண்டு வந்துவிட்டோம். ஆனால் சென்னையில் மிச்சமுள்ள பாத்திரங்களை போய் எடுத்துவா என்று அம்மா, சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில பாத்திரங...

திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?

படம்
    ரியலா ? ரீலா ? 1. திகில் , திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும் . ரியல் : திகில் , திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள் . அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும் . வியர்க்கும் . ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது , நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது . இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை . பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் . ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது . வேறொன்றுமில்லை . 2 . உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி , மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் . ரியல் : முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவ...