இடுகைகள்

நிறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா? ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன. அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா? முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லு...

வைரத்திற்கு அடுத்தபடியாக உள்ள கடினமான பொருள்!

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மோகா அளவுகோல் எதற்கு பயன்படுகிறது? கனிமங்களை அவற்றின் கடினத்தன்மை அடிப்படையில் வகைப்படுத்த மோகா அளவுகோல் உதவுகிறது. 1812ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் பிரடரிச் மோஹ்ஸ் மோகா அளவுகோலை கண்டுபிடித்தார். மென்மையான கனிமங்கள் தொடங்கி கடினமானவை வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கனிமங்களை நிறங்கள் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தியது யார்? இதைச்செய்ததும் கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆபிரகாம் காட்லோப் வெர்னர் என்பவர், நிறங்கள் அடிப்படையில் கனிமங்களை தரம் பிரித்து அவற்றை படங்களாக வரைந்து விளக்கியவர் இவரே. வைரத்திற்கு அடுத்து கடினமான பொருள் என எதைக் கூறலாம்? போரோன் நைட்ரைட் என்ற பொருளைக் கூறலாம். இது கடினமான செராமிக். வைரத்திற்கு அடுத்த நிலையில் இப்பொருள் இடம்பிடிக்கிறது. ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்றால் என்ன? ஒரு நாட்டின் பாதுகாப்பு தொழில்துறைக்கு அவசியம் தேவைப்படும் கனிமங்களை ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்று குறிப்பிடுவார்கள். தோராயமாக எண்பது கனிமங்களை ஒரு நாடு எப்போதுமே குறைவற வாங்கி சேமித்து வைத்திருக்கும். உதாரணமாக குரோமியம், பல்லாடிய...

கொடியை நகல் எடுக்க கூடாது!

படம்
          தனித்துவம் கொண்ட கொடி! வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும். கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்த...

கொடிகளை வடிவமைப்பதில் நிறம், இலச்சினைக்கு முக்கிய பங்குண்டு!

படம்
      கொடிகளை வடிவமைப்பதில் நிறங்களுக்கு முக்கியப் பங்குண்டு! சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை கொடிகளில் பயன்படுத்தும் முக்கியமான நிறங்கள். இவை தவிர, கருநீலம், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், நல்ல வடிவமைப்பு இருந்தால்தான் எடுபடும். மேற்சொன்ன நிறங்களை மென்மையான, அழுத்தமான இயல்பில் பயன்படுத்துவதும் உண்டு. சிறந்த கொடி கிரேஸ்கேல் முறையிலும் தெளிவாக தெரியவேண்டும். மூன்று நிறங்கள் போதுமானது. அதற்கு மேல் உள்ள நிறங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியான நிறங்களை பயன்படுத்தி கொடிகளை உருவாக்குவது நடைமுறையில் செலவையும் அதிகரிக்கும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் கொடியைப் பார்ப்போம். பின்னணியில் சிவப்புநிறம் உள்ளது. அதன்மேலே கருப்புநிறப்பட்டை. அதில் வெள்ளை நிற பெருக்கல் குறி. எளிதாக அடையாளம் காண முடிகிற இயல்பில் உள்ள கொடி. இதற்கு எதிர்மாறாக சைனீஸ் அட்மிரல் கொடி உள்ளது. ஐந்து நிறங்கள் கொண்டுள்ளதோடு இதில் இடதுபுறத்தில் இலச்சினை ஒன்று உள்ளது. நினைவுபடுத்திக்கொள்ள கடினமான கொடி. டொமினிய குடியரசு கொடி நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டு...

ஒரு நாட்டின் கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? அண்மையில் தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சியின் கொடி சார்ந்து இப்படியான கேள்விகள் வருகிறதென நினைக்கிறேன். அடிப்படையில் கொடி என்பது முடிந்தவரை எளிமையாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு குழந்தை அக்கொடியை நினைவில் வைத்து நோட்டில் எழுதிக்காட்டவேண்டும். குழந்தைக்கே கொடி நினைவு வரவில்லையெனில் அந்த கொடியால் எந்த பயனும் இல்லை. கொடியில் ஒற்றை அடையாளம் இருக்கவேண்டும். சில நிறங்கள் போதும். எழுத்துகள் இருக்க கூடாது. மேலாக, கீழாக எப்படிப் பார்த்தாலும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கவேண்டும். சொந்த நாட்டுக்காரர்களுக்கே தேசியக்கொடி அடையாளம் தெரியவில்லையென்றால், அதை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமாக இருந்தாலும் கைவிட வேண்டியதுதான். அதுவே நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது. வங்கதேசத்தின் கொடியைப் பாருங்கள். அதில் பின்னணியில் கரும்பச்சை நிறம் இருக்கும். நடுவில் சிவப்பு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் என்பது எழுச்சி பெறுகிற சூரியனாக புரிந்துகொண்டால் சிறப்பு. இந்தக்கொடியை எளித...

திரைப்படத்துறையில் உள்ள பாலின பாகுபாடு, நிறவெறியை எதிர்த்துப் போராடும் கருப்பின நடிகை!

படம்
  taraji p henson தாராஜி, ஒரு சினிமா நடிகை. இவர் சமூக வலைத்தளங்களில் தனது உடல் நளினத்தை காட்டும் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டு சொந்த வேலைகளைப் பார்க்க செல்பவரல்ல. ரசிகர்களை சொந்த சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்பவரும் அல்ல. கருப்பினத்தவரான தாராஜி, தன்னைச் சார்ந்த இனக்குழுவினர் ஊடகங்களில், திரைப்படங்களில் பாகுபாடுடன், பாலியல் பிரச்னைகளோடு இருப்பதை வெளிப்படையாக உலகிற்கு கூறியவர். ஒருமுறை நேர்காணலில், தனது அனுபவம், திறமைக்கு ஏற்ற ஊதியத்தை கருப்பின பெண் என்பதற்காக தயாரிப்பாளர்கள் தருவதில்லை என்று வெளிப்படையாக கூறினார். அவர் கூறியபோது அந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. டிவி சேனல், திரைப்படம் என இரண்டிலும் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் தாராஜி.  தி குயூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் பிராட் ஃபிட்டிற்கு போட்டி கொடுத்து நடித்தவர் தாராஜி. அதற்கு பிராட் பிட் பல மில்லியனில் சம்பளம் பெற்றபோது, தாராஜி பெற்றது 72 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. இன்றுமே கருப்பின பெண்கள், வெள்ளை இனத்தவர் பெறும் சம்பளத்தில் எழுபது சதவீதம்தான் பெறுகிறார்கள். இதற்கு பாலினம், நிறம...

சாதி, மதம், இனம், நிற ரீதியான வேறுபாடுகள் எப்படி குழந்தைகள் மனதில் உருவாக்கப்படுகின்றன? - கென்னத் கிளார்க், மாமியா

படம்
  கென்னத் கிளார்க்  அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர். பனாமாவில் பிறந்தவர் பின்னாளில், நியூயார்க்கின் ஹார்லேமிற்கு நகர்ந்தார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போது தனது வாழ்க்கைத்துணையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க தம்பதியினர் இவர்கள்தான். ஹார்லேமில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான மையங்களை தொடங்கி நடத்தினர்.  கென்னத் கிளார்க், நியூயார்க்கில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.  முக்கிய படைப்புகள் 1947 ரேஷியல் ஐடென்டிஃபிகேஷன் அண்ட் பிரிஃபெரன்ஸ் இன் நீக்ரோ சில்ட்ரன் 1955 ப்ரீஜூடிஸ் அண்ட் யுவர் சைல்ட் 1965 டார்க் கெட்டோ 1974 பாதோஸ் ஆஃப் பவர் சமூகத்தில் நிலவும் பாகுபாடு என்பது, குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்த மக்களை தாழ்ந்தவர்கள் என கூறுவது என கென்னத் கிளார்க் கூறினார். சாதி, மதம், இனம் சார்ந்த பாகுபாடுகளை ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் நே...

கிம் கதர்ஷியன் - உடலையே பிராண்டாக்கி ஸ்கிம்ஸ் ஆடை நிறுவனத்தை தொடங்கிய துணிச்சல்காரி

படம்
  ஸ்கிம்ஸ் - ஆடைகள் கிம் கதர்ஷியன் கிம் கதர்ஷியன் - ஸ்கிம்ஸ் கிம் கதர்ஷியன் உங்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருக்காது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என பல்வேறு இடங்களில் கிம்மைப் பார்த்திருப்பீர்கள். கிம், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது உடல் அமைப்பு மூலம் பிறருக்கு அறிமுகமானவர். மார்பகங்கள், புட்டங்கள் என தன்னை அலங்காரப்படுத்திக்கொண்டு கூடுதல் பெண் தன்மையோடு இருப்பவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான மக்கள் பின்தொடர்கிறார்கள். கிம், தனது பிரபலம் அப்படியே காலத்திற்கும் இருக்கும் என நம்புகிற முட்டாள் அல்ல. எனவே, அந்த பிரபலத்தை வணிகத்திற்கு திருப்பிவிட முடிவெடுத்தார். அதன்படி தோழி, தோழியின் கணவர் ஆகியோருடன் சேர்ந்து ஸ்கிம்ஸ் என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். தொந்தி இருக்கும் பெண்கள் அணியும் ஷேப் வேர் எனும் உடைகளை இந்த   நிறுவனம் தயாரித்து விற்கிறது. பெரும்பாலும் இணையத்தில் உள்ள வலைத்தளம் மூலமாக அதிக ஆர்டர்கள் வருகின்றன. கிம், ஏற்கெனவே நகைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். இதற்கென தனி நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், வெற்றிகரமானவை என்று கூற முடியாது. ஸ்கிம்ஸ் நி...

சர்க்கரையால் குழந்தைகளை அடிமையாக்கி லாபம் பார்க்கும் ஊட்டச்சத்து நிறுவனங்கள்!

படம்
  குழந்தைகளுக்கான உணவுகளை கெலாக்ஸ், குவாக்கர், சஃபோலா ஆகிய   பிராண்டுகள் தயாரித்து வருகின்றன. மேற்சொன்னவை, இந்தியாவில் ஓரளவு விளம்பரம் மூலம் அறியப்பட்டவை. இவையன்றி, உள்நாட்டில் ஏராளமான சிறு நிறுவனங்கள் குழ்ந்தைகளுக்கான உணவைத் தயாரித்து வருகின்றன. மேற்சொன்ன நிறுவனங்களின் உணவுகளில் சர்க்கரை, உப்பு என இரண்டு விஷயங்கள்தான் அதிகமாக உள்ளன. ஆனால், அதை மறைத்து இயற்கையான கோதுமை, நார்ச்சத்து, உண்மையான பழத்துண்டுகள் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். விளம்பரங்களை அழகாக வடிவமைத்து உடனே வாங்கிச் சாப்பிடும் ஆசையை உருவாக்குகிறார்கள். இதெல்லாம் உண்மைதான். நான் மறுக்கவில்லை. குழந்தை சாப்பிடவில்லை. எனவே, ஊட்டச்சத்து பானத்திற்கு நகர்ந்தேன் என தாய்மார்கள் கூறலாம். ஆனால் அப்படி ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே நம்புவது ஆபத்தானது. உணவுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் துணை உணவு பிரிவில் ஊட்டச்சத்து பானங்களை சேர்க்கலாம். அது உணவுக்கு மாற்று அல்ல. பல்வேறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் பதப்படுத்தப்பட்ட பழத்துண்டுகளை போட்டு சூடான பால் ஊற்றி சாப்பிட்டால் குழந்தைக்கு அற்புதமான காலை உணவு என ரீல் ஓட்டுவார்கள். பள்...

கொடுக்கு இல்லாத தேளின் ஆயுள், தேன்கரடியின் இயல்பு - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கொடுக்கு இல்லாமல் தேளால் வாழ முடியுமா? தென் ஆப்பிரிக்காவில் தாக்குதால் கொடுக்குகளை இழந்த தேள்கள்  8 மாதங்கள் தாக்குப்பிடிக்கின்றன. தேளின் பின்பகுதியில் கொடுக்கு மட்டுமல்லாது செரிமானப்பகுதி, ஆசனவாய் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. தனது வால்பகுதியை இழந்துவிடும்போது தேளின் வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. உணவு சாப்பிடும் அளவு குறைந்து மெல்ல இறக்கிறது.  தேன் கரடிகள் உண்மையில் தேனை உண்கிறதா? சிலசமயங்களில் மட்டும். தேன் கரடிகளுக்கு முதன்மையான உணவு பழங்கள்தான். 90 சதவீதம் பழங்கள், இலைகள், பூக்கள், பூச்சிகளின் லார்வாக்களை உண்ணுகிறது. தேன் என்பது அதன் உணவு பட்டியலில் முக்கியமானது கிடையாது. தேன்கரடிக்குப் பிடித்தமான உணவு அத்திப்பழங்கள்தான்.  பறவைகளால் மனிதர்களைப் போலவே நிறங்களைக் காண முடியுமா? பறவைகளின் பார்வைத்திறன்களைப் பற்றி நாம் முழுமையாக இன்னும் ஆராய்ச்சி செய்து அறியவில்லை. பறவைகளின் பார்வை அமைப்பு மனிதர்களைப் போலவே நிறங்களை அறியும் கோன் செல்களைக் கொண்டது. கூடுதலாக புற ஊதாக்கதிர்களை கண்டறியும் திறனும் பறவைக்கு ண்டு. இந்த திறன் மூலம், பழுத்த பழங்களையும், ஆண், பெண் பறவைகளுக்கு உள்ள...

வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா

படம்
  ஆண்ட்ரியா கெவிசூசா இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம் ஆண்ட்ரியா கெவிசூசா உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.  நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா? எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்ட...

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம...

நீரில் நனைந்தால் உடையின் நிறம் அடர்த்தியாக தெரிவது ஏன்?

படம்
மிஸ்டர். ரோனி துணி துவைக்கும்போது அல்லது மழை பொழியும்போது உடை எப்படி மிகவும் அடர்த்தியான நிறமாக மாறுகிறது? மழையை ரசித்து நனைந்துகொண்டு சாலையில் சென்று இருப்பீர்கள் போல. மழைநீரில் நனையாமல் நின்றிருந்தால் இதுபோல கேள்விகள் பிறந்திருக்காது அல்லவா? நீர், உடை இழைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது. அதில் ஒளி பட்டு எதிரொளிப்பதால், உடையின் நிறம் அடர்த்தியானதாக தெரிகிறது. இதுபற்றி வெலிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் லெக்னர், மைக்கேல் டோர்ஃப் ஆகியோர் ஆராய்ச்சி செய்து இந்த அரிய உண்மையை கண்டுபிடித்துள்ளனர். நன்றி - பிபிசி

ஜெர்ஸிக்களின் வரலாறு!

படம்
கிரிக்கெட் அணிகளின் நிறம்! இந்தியா 1992 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஜெர்சி மாற்றம் கண்டது. உலகக் கோப்பையில் புதிய நீலநிற ஜெர்சியை அணிந்து விளையாடியது. பின் ஸ்பான்சராக இடம்பெற்ற நைக், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டரை ஜெர்சி உடைக்குப் பயன்படுத்தியது. இரு நிறங்களை இதில் நைக் பயன்படுத்தியது. அதை பின்னர் அணியின் உலக கோப்பை வெற்றி வரைக்கும் சொல்லிக்காட்டி சந்தோஷப்பட்டது நமது ஸ்டைல். ஆஸ்திரேலியா 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸி. அணி, 2019-20 ஆண்டும் அதே உடையின் நிறத்தை உடையாக்கி பயன்படுத்த உள்ளது. மஞ்சள்தான் பிரைமரி நிறம். இதில் எலுமிச்சைப் பச்சையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து கொடுத்தது, ரசிகர்கள் என்பதே முக்கியம். வங்கதேசம் பாம்பு நடனம் ஆடும் வங்கதேசத்தினர், விளையாட்டில் தங்களை நிரூபித்தஅணி. ஆனால் பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் வேறுபாடு காட்டத் தடுமாறுகின்றனர். பச்சை நிற ஜெர்சி பாகிஸ்தான் போல இருப்பதால், ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அணியின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பேக்கிரவுண்டில் அமைக்க முயற்சித்து ஜெர்ஸியை உருவாக்கினர். மேற்கி...