இடுகைகள்

தியாகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வடஇந்திய பிரதமரைக் காக்க உயிரை தியாகம் செய்ய முனையும் கமாண்டோ படை தலைவர்!

படம்
             அசோகா தமிழ் பிரேம்,அனுஶ்ரீ, ரகுவரன், ஆனந்தராஜ் படத்தை தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்திருப்பார்களோ என சந்தேகத்தை உருவாக்குகிறது. பிரதமரை காரில் அழைத்துச் செல்லும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில், அவர் சுடப்படுகிறார். பாதுகாப்பு அதிகாரி அசோகா, அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று பாதுகாக்கிறார். பிரதமரை கொல்ல இரு கூலி கொலைகாரர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். நாயகன் அசோகா, பிரதமரை பாதுகாத்து எதிரிகளை அழித்தாரா என்பதே கதை. ஆங்கில திரைப்படங்களை மனதில் கொண்டு உருவாக்கியிருக்கிற படம். நோக்கமே ஒரு நல்ல படத்தை உருவாக்கிவிட முடியாது என்பதற்கு இப்படமும் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் பிரதமர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறையிலுள்ள ஐஜி, சதித்திட்டத்தில் தொடர்புள்ளவராக இருக்கிறார். அதனால், கமாண்டோ படையினர் மட்டுமே பிரதமரை பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள். காவல்துறையினர், தரைதளத்தில் மட்டுமே நின்று பணியாற்றுகிறார்கள். அசோகா, தமிழ்நாடு காவல்துறையை நம்புவதில்லை. சரிதான் அதற்கான காரணங்களும் இருக்...

சிறுமிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ராணுவ வீரனின் கதை! - சீதாராமம்- ஹனு ராகவப்புடி

படம்
  சீதாராமம் - தமிழ்  துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா, தருண் பாஸ்கர்  இயக்குநர் ஹனுமந்த் ராகவப்புடி இசை - விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு - பிஎஸ் வினோத் தேசப்பற்று ஊற்றியெழுதிய காதல் கதை.  இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறார்கள். தேசப்பற்று என்பதோடு மனிதநேயம் என்பது எல்லைகளைக் கடந்தது. அதை நாம் இரும்புவேலிகளால் அடைக்க முடியாது என்பதையும், பலரின் தியாகங்களால்தான் நமக்கு உயிர்வாழும் வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது.  இதை தொடர்புடையவர்களே மறந்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.  கதை 1964 - 1985 என்ற காலகட்டத்திற்குள் நடைபெறுகிறது. அஃப்ரின் என்ற பெண்ணுக்கு அவரது தாத்தாவின் சார்பாக ஒரு கடிதம் கிடைக்கிறது. அதை அவள் கொண்டுபோய் சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு தாத்தாவின் சொத்து கிடைக்கும். அதை அவள் தான் மன்னிப்பு கேட்காமல் இருக்க பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்காகவும் மன்னிப்புக் கேட்க கூடாது. தான் செய்வதெல்லாம் சரி என நினைப்பு கொண்டவள் அஃப்ரின்.  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்....

வளர்ப்பு தந்தைக்காக தன்னை தியாகம் செய்யும் மகனின் தியாக கதை!

படம்
  சின்னோடு  சுமந்த், சார்மி கௌர் இயக்குநர் கண்மணி  சிறைக்கைதியாக இருக்கும் பெண்ணின் குழந்தையை சிறை வார்டன் தனி கவனமெடுத்து பார்த்துக்கொள்கிறார். கைதி திடீரென நோய்மையால் இறந்தபிறகு, குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்து தானே வளர்க்கிறார். வார்டனின் அப்பா, அவரது தம்பிக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் வார்டனின் தம்பி தலையில் அடிபட்டு இறந்துகிடக்கிறார். அப்போது, அருகில் ரத்தக்கறை படிந்த பூச்சாடியோடு வளர்ப்பு மகன் சின்னா நிற்கிறான். இதனால் அவனை வளர்த்த வார்டன் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அவனை வெறுக்கத் தொடங்குகிறார். சிறைக்கு சென்ற சின்னா திரும்பி வரும்போது அவனை குடும்பம் ஏற்றுக் கொண்டதா என்பதே படக்கதை.  படத்தில் முக்கியமான விஷயமே, காட்சியை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும். ஆனால் அந்த உண்மையை காட்சியில் உள்ள மற்றவர்கள் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். இதனால் காட்சிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். படத்தில் இப்படி சென்றுகொண்டிருப்பதில் சற்றே மாறுதல் ஏற்படுத்துவது வேணு, அலி காமெடி காட்சிகள் தான்.  மற்றபடி, படம் சற்று சீரி...

கிடைத்த அன்பை பற்றிக்கொள்ள காதலன் எடுக்கும் முடிவு! - நீ கோசம் - ரவிதேஜா, மகேஸ்வரி

படம்
                நீ கோசம் ஓவியங்களை வரைந்துகொடுக்கும் கலைஞர் , கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்ணை காதலிக்கிறார் . அவரது அப்பா தீவிரமான சாதி வெறியர் . தனது தம்பி பெண்ணை அவரே கைப்பட கொன்றிருக்கிறார் . இந்த காதல் ஜோடியின் திருமணத்தை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . ரவிதேஜா முடிந்தவரை எளிமையான கதைக்கு நியாயம் சேர்க்க நடித்திருக்கிறார் . மகேஸ்வரியும் அப்படியே . ரவிதேஜாவின் மீது காதல் வந்துவிட்டபோதும் , அதை எப்படி சொல்வது , வீட்டில் ஏற்கமாட்டார்களே என தடுமாறுவது , இறுதியில் ரவியின் நிர்பந்தத்தால் அதனை ஏற்பது என கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார் .    படம் வணிகப்படமாக இருக்கவேண்டுமா , உணர்ச்சிகளைக் கொட்டும் இயல்பான படமாக வரவேண்டுமா என்பதில் இயக்குநருக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன . குத்துப்பாட்டு இல்லாத குறையை இறுதிப் பாடலில் கவர்ச்சிகர ஆடையை நாயகிக்கு கொடுத்து பீச்சில் ஆடப்பாடச்சொல்லி நிவர்த்தி செய்திருக்கிறார்கள் .    மகேஸ்வரியின் அப்பாவை சமாதானம் செய்து க...