இடுகைகள்

பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையின் அறிகுறிகள்

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பாலியல் ரீதியான வன்முறை என்றால் என்ன? சிறுவன், சிறுமியை ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை பாலியல் வன்முறை, சுரண்டல் என்று கூறலாம். முறையாக திருமணம் செய்யும் அல்லது வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள். இவர்களை இளையோர் என்று கூறலாம். பாலியல் ரீதியான வன்முறையை சிறுவன், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தொடங்கி அறிமுகமில்லாத வழிப்போக்கர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் செய்கிறார்கள். பொதுவாக பலவீனமானவர்களைக்  கண்டால் அவர்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவது மனிதர்களுக்கு பிடித்தமானது. உடல் ரீதியாக, உள்ள ரீதியாகவும் ஒருவரை பாலியல் வன்முறை பாதிக்கிறது.  பாலியல் சுரண்டல் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டதா? அப்படி இருக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஆபாச வலைத்தளங்களில் பெண்ணை உறவு கொள்வதாக காட்டும்போது கூட அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொள்கிறார்கள். அது படப்பிடிப்பு, நடிகர்களை வைத்து ஆபாச படம் எடுக்கப்படுகிறது ஆனால் உண்மையில் ஒருவர் இதை முயன்றால் என்னாகும்? சம்பவ இடத்திலேயே ஒருவர் மூச்சு திணறி இறந்துவிடுவார். பாலியல் ரீதியான சுரண்டல் பல்வேறு திசை ...

புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் !

படம்
      கல்வி அறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை தரும் புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் பாரதம், பாரதீய என்று கூறுவது காவி இயக்கம், கட்சிகளை நினைவுபடுத்துகிறது. எனவே கல்வியறிவுத்திட்டம், புதிய இந்தியா என்ற பெயரில் கட்டுரையில் பயன்படுத்தப்புகிறது. தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு வசதி இல்லாமல் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டவர்கள், பலர் இன்றும் பேருந்து பார்த்து ஏறவும், எண்களைப் பார்த்து படிக்கவும் சிரமப்படுகின்றனர். சிறுவயதில் அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, அதைத் தடுக்க உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் முயற்சி செய்து வெற்றி கண்டிருப்பார்கள். அதன் விளைவாக, அவர்களின் கல்வியறிவு அஸ்தமனமாகி இருக்கும். பிற்காலத்தில், கையெழுத்து கூட போட முடியாமல், கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருவார்கள். இதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு இணைந்து நிதியுதவி அளித்து கல்வியறிவுத் திட்டம் ஒன்றை நடத்துகிறது. அந்த வகையில் கற்றல் மையங்கள் முப்பதாயிரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ளன. இதன் வழியாக சேலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்திலுள்ள நாற்பது வயதுக்கும் மேற்பட்ட மக்கள் பய...

சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல்

படம்
    சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல் சினா சங் இயக்குநர், காகாவோ தென்கொரியா தென்கொரியாவில் இயங்கி வரும் காகாவோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம், இசை, போக்குவரத்து, வெப் காமிக்ஸ், பணம் செலுத்தும் வசதி, குறுஞ்செய்தி என பலவற்றையும் ஒன்றாக இணைத்து காகாவோ டாக் என்ற ஆப் வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக சினா பதவியேற்றது நடப்பாண்டு மார்ச் மாதம்தான். ஆப்பிற்கு பயனர்களாக 44 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இவருக்கு முன்னிருந்த தலைவரால் ஏற்பட்ட பங்கு சந்தை முறைகேடு பிரச்னையை சமாளித்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். டாபனி டெகாஜாரேன்விகுல் தலைவர், இயக்குநர், பெர்லி ஜக்கர் தாய்லாந்து தினசரி பயன்பாட்டுப்பொருட்கள், உடல்நலம், பேக்கேஜிங் சார்ந்த துறைகளில் பெர்லி செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் டாபனி இயக்குநராக பொறுப்பேற்றார். டாபனியின் தந்தை சாரியோன் சிரிவதனபக்தி. பெரும் பணக்காரர். டாபனியின் கணவர் அஸ்வின், பெர்லியின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்தப்பதவி இப்போது அவரது மனைவிக்கு வந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பிக் சி எனும் பேரங்காடி கடைகளை பெர்...

ஆசியாவில் வலிமையான தொழிலதிபர் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

படம்
             powerful womens asia fortune asia 2024(not included india) siyun chen bristol myers squibb பிரிஸ்டல் நிறுவனத்தின் துணைத்தலைவர், பொது மேலாளராக இருக்கிறார் சென். இவர். 2011ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோவில் உள்ள மலைத்தொடரில் கணவருடன் மலையேற்றம் செய்ய முடிவெடுத்தார்.  அந்த செயல்பாடு இலக்கு, அதன் முக்கியத்துவம், கூட்டாளிகள் மீது வைக்கும் நம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை பற்றி புரியவைத்ததாக கூறுகிறார். அமெரிக்க நிறுவனமான பிரிஸ்டலின் ஆசிய வணிகம், சீனா ஆகியவற்றை சியுன் கவனித்து வருகிறார். இந்த பணிக்கு முன்னர் ஜிஎஸ்கே, நோவர்டிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். sung suk suh cosmax தலைவர், துணை நிறுவனர் சங்கின் கணவர் கியுங்தான் காஸ்மேக்ஸ் நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. காஸ்மேக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் உண்டு. கடந்த ஆண்டு நிறுவனம், 1.3 பில்லியன் டாலர்களை லாபம் பார்த்துள்ளது. கலீஜா...

உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்கள் பட்டியல் - ஆசியா

          மை கியு லின் இயக்குநர், வினாமில்க் வியட்நாம் mai kieu lien vinamilk பிரான்சில் பிறந்து சோவியத் யூனியனில் கல்வி கற்ற பெண்மணி. 1992ஆம் ஆண்டு தொடங்கி வினாமில்க் நிறுவனத்தை லின் நடத்தி வருகிறார். நாட்டின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனம், வினாமில்க். பால் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக செயல்பட்டவர், பட்டம் பெற்றபிறகு வினாமில்கின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அரசு நிறுவனமான வினாமில்க், 2003ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அன்னா மா மார்கரிட்டா பாட்டிஸ்டா டை இயக்குநர் அயலா லேண்ட் பிலிப்பைன்ஸ் anna ma margarita bautista dy ayala land 2008ஆம் ஆண்டு, நிலத்தை வாங்கி விற்கும் அயலா நிறுவனத்தின் கமிட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த ஆண்டுதான் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார். வீட்டு விற்பனை, வணிக மால் ஆகிய வணிக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செய்து வருகிறார். அயலா நிறுவனம் ஹோட்டல், ரிசார்டுகள், வணிக மால்கள் வீடுகள், அலுவலகங்களை கட்டி விற்று வருகிறது. கடந்த ஆண்டு வருமானம் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிலிப்பைன...

பார்ச்சூன் ஆசியா 2024 - சாதனை படைத்த பெண் தொழிலதிபர்கள்

படம்
          சக்திவாய்ந்த பெண்கள் - தொழிலதிபர்கள், அதிகாரிகள் 2024 ஐரின் லீ தலைவர், ஹைசன் டெவலப்மென்ட் ஹாங்காங் irene lee hysan development ஹைசன் நிறுவனம், ஹாங்காங் நாட்டில் இயங்கும் நூற்றாண்டைக் கடந்த கட்டுமான நிறுவனம். ஐரின் லீ, ஹைசனுக்கு வருவதற்கு முன்னர், 91 ஆண்டுகளைக் கடந்த ஹாங்செங் வங்கியின் போர்டில் தலைவராக இருந்தார். அதன் வரலாற்றில் முதல் பெண் தலைவர ஐரின் லீதான். இது அந்த சமூகத்தில் நிலவும் ஆண் மேலாதிக்க தன்மையை வெளிக்காட்டுகிறது. ஹைசன் சந்தையில் லாபத்தின் திசையில் பயணிக்கவில்லை. நஷ்டமாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 111 மில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. அந்த இழப்பை ஐரின் லீ தனது திறமையால் ஈடுகட்டக்கூடும். மிச்செல் சியோ ஹியூநிங் துணைத்தலைவர், இயக்குநர், மேவா இன்டர்நேஷனல் சிங்கப்பூர் michelle cheo huining mewah international நிறுவனத்தை உருவாக்கிய சியோபெங் ஹாங்கின் பேத்தி, மிச்செல். இவர், நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடவைத்து முதலீடுகளை திரட்டுவதோடு, இந்தோனேஷியாவில் காலூன்றவும் திட்டங்களை தீட்டி வருகிறார். நூறு நாடுகளுக்கு சமையல் எண்ணெய், ச...

தொழில்துறையில் சாதனை செய்யும் பெண் தொழிலதிபர்கள், அதிகாரிகள் - பார்ச்சூன் 2024

படம்
      ஆற்றல் வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் - பார்ச்சூன் 2024 கிரேஸ் சுவா இயக்குநர், ஃபேர்பிரைஸ் குழுமம் சிங்கப்பூர் grace chua fairprice group சுவா, குழுமத்தின் ஓன் பிராண்ட்ஸ் பிரிவின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம், சிங்கப்பூரின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் அமைப்பைக் கொண்டுள்ளது. ஓன் பிராண்ட்ஸ் என்பது, குறைந்த விலையிலான பொருட்களை விற்று வருகிறது. சுவா, குழுமத்தில் 2017ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திலும், கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்பிலும் வேலை செய்திருக்கிறார். ஃபேர்பிரைஸ் குழுமம் தனது பொருட்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்க திட்டமிட்டு வருகிறது. ஜெனிபர் வாங் சுயி ஃபென் நிதி தலைவர், மேக்சிஸ் மலேசியா jenifer wong chui fen maxix மலேசியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதில் வணிக திட்டமிடல், நிதி மேலாண்மை ஆகிய பொறுப்புகளை வகிக்கிறார். தொலைத்தொடர்புத் துறையில் பதினேழு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நிதி நிர்வாகத்தில் இருபத்தெட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஜெனிபரின் வழிகாட்டுதலில் நிறுவனம் முந்தைய ஆண்டை விட அதிக...

அதிகாரச் செல்வாக்கு பெற்ற தொழிலதிபர்கள் - பெண்கள்

      பிட்டாயா வோரபன்யாசாகுல் அதிபர், இயக்குநர், குருங்தாய் கார்ட் தாய்லாந்து pittaya vorapanyasakul krungthai card தாய்லாந்து நாட்டில் நிதிச்சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் குருங்தாய். இந்த நிறுவனம் கடன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி அதன் வழியாக நிதிச்சேவைகளை செய்து வருகிறது. பிட்டாயா, கடந்த ஜனவரி மாதம், குருங்தாயின் அதிபர், இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர், குருங்தாய் சொத்து நிர்வாக நிறுவனத்தின் கணக்கு தணிக்கை கமிட்டியின் தலைவர், உறுப்பினாக செயல்பட்டு வந்தார். ரோடா ஏ ஹூவாங் அதிபர், இயக்குநர், ஃபில்இன்வெஸ்ட் டெவலப்மென்ட் நிறுவனம் பிலிப்பைன்ஸ் rhoda a huang fillinvest development 2023ஆம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர், அதிபராக பொறுப்பேற்ற ரோடா, கோடியானுன் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. முதல் வெளிநபராக நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு முன்னர், ஜேபி மோர்கன் சேஸ், கிரடிட்சூஸ் பிலிப்பைன்ஸ், பிபிஐ கேபிடல் முதலீட்டு வங்கி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஃபில் இன்வெஸ்ட் நிறுவனம், வங்கி, நிலம், மின்சாரத்துறையில் இயங்கி வருகிறது. ரோடா, சூரிய ...

பெண்கள் வாசிப்பது என்பது முக்கியமான அரசியல் செயல்பாடு! - ஆகிருதி மந்த்வாணி

படம்
                நேர்காணல் எழுத்தாளர், ஆய்வாளர் ஆகிருதி மந்த்வாணி இலக்கியம் அல்லது க்ரைம் சார்ந்த நூல்கள் அல்லாமல் நடுநிலை இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பியது ஏன்? இந்தி கிரைம் எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதக் நூல்களைப் பற்றித்தான் முதலில் ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படித்தான்ஆராய்ச்சியும் தொடங்கியது. அவரது நூல்கள் வாசிக்க நன்றாக இருக்கும். விலையும் கூட அதிகம். ஆனால், அவரது நூல்களை வாசிக்கிறேன் என்று யாரும் தைரியமாக கூற மாட்டார்கள். மறைத்து வைத்து படிப்பார்கள். இப்போது அதை வெளியில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தி மொழி இதழ்களை பற்றி பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேசியமொழி இந்தி என்ற அடிப்படையில் உருவானது. தேசியவாத கண்ணோட்டம் கடந்த நடுநிலை இதழ்களை, பொதுஅறிவு தகவல்களை வழங்கும் வார, மாத இதழ்களை மக்கள் வாசித்துள்ளனர். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வாசிப்பார்கள். எனவே, நான் இடைநிலை இதழ்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது சரியென தோன்றியது. இடைநிலை இதழ்களின் வெளியீடு, அவற்றை வாசித்த பெண் வாசகர்களைப் ...

பெண்கள் தங்கள் உரிமைக்காக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை - ஏஞ்செலிகா அரிபம்

படம்
        எழுத்தாளர் ஏஞ்செலிகா அரிபம் இவர், அண்மையில் பிஃப்டீன் என்ற நூலை ஆகாஈ் சத்தியவாலியோடு இணைந்துஎழுதி வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். பெண்கள் அரசியலில் பங்கு பெற்று பாலின பாகுபாடு, இனவெறி ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன? சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்த பெண் என்ற வகையில், அன்னி மஸ்கரின், பேகம் அய்ஸாஸ் ரசூல், தக்சாயணி வேலாயுதன் ஆகியோரின் போராட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். ஆனால் இன்று அவர்களைப் போல தேசிய அரசியலில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. இன்றைய சூழலில் பாலின பாகுபாடு, இனவெறி தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. சின்கி, சோமெயின், மோமோஸ் என பட்டப்பெயரிட்டு என்னை இழிவுபடுத்திவருகின்றனர். எதற்கு நீ அரசியலுக்கு வந்தாய், உன்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் கடைகளில் விற்பனை பெண்களாக, பரிசாரகர்களாக சிறப்பாக பணியாற்றுகிறார்களே என்ற பாகுபாடான கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன்.   இங்கு ஆண்களே பெண்களுக்கான வேலைகளை உருவாக்குகிறார்கள். அதை செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பெண்கள், தங்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என குரலுயர்த்தி உரிம...

பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியத்தேவை ஏன்?

படம்
 திருமணமான பெண்கள், ஆண்கள் என இரு பாலினத்தவருமே உடற்பயிற்சி செய்வது குறைந்துபோய்விட்டது. அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக நாற்பது வயதிலேயே அறுபது,எழுபது வயது ஆனவர்கள் போல தளர்ந்து தசைகள் தொங்கிப்போய் கண்களுக்கு கீழே கறைபடிந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், எலும்பு பலவீனமாகிறது. இதை சரிசெய்ய எடைப் பயிற்சிகளை செய்யவேண்டும். அதாவது, ஜிம்மில் எடைகளை தூக்கிப் பயிற்சி செய்யவேண்டும்.  எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் பெரிதாக மாறிவிடும். அழகு குறைந்துவிடும் என நினைப்பது மூடநம்பிக்கை. உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியவர், தினசரி செய்யும் வேலையை ஊக்கமாக செய்யமுடியும். காயம்படாது. எலும்பு முறிவு, சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கமுடியும்.  ஏரோபிக், டாய்ச்சி, எடைப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் உண்டு. ஒருவரின் உடலைப் பொறுத்து எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து செய்யலாம். அனைத்து உடற்பயிற்சியிலும் பயன்கள் உண்டு. சிலருக்கு ஜிம்மில் சென்று பயிற்சிகளை செய்வதற்கு கூச்சம் இருந்தால், வீட்டில் செய்வதற்கான முயற்சிகளை செய்யலாம். கருவிகளை...

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்பள பாகுபாடு

படம்
  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பொருளாதார பாகுபாடு ஆண் ஒரு டாலர் சம்பாதிக்கிறான் என்றால் பெண் எழுபத்தேழு சென்டுகள் சம்பாதிக்கிறாள் என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம், சம்பளத்தில் உள்ள பாகுபாடு என்பதே, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என கூறியுள்ளது.  மாதம், வாரம், நாள் என பல்வேறுவிதமாக ஒருவர வேலை செய்து சம்பளம் வாங்கலாம். ஆனால், ஒருவரின் பாலினம் சார்ந்து ஆண் என்பதற்காகவே பாரபட்சமாக பார்த்து பெண்ணுக்கு சம்பளவெட்டு செய்வது நேர்மையான செயல் அல்ல. ஆணும், பெண்ணும் ஒரே விதமாக வேலை செய்தாலும் கூட பெண்களை சற்று இளப்பமாக பார்த்து சம்பளக்குறைவு செய்வது உலகநாடுகளில் இயல்பாக உள்ளது.  ஒரே கல்வித்தகுதி, அனுபவம் இருக்கும் ஆண், பெண்ணுக்கு ஒரேவிதமாக சம்பளத்தை வழங்குவதே நேர்மையான செயல்பாடு. அப்படியில்லாமல் பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு புறம்பானது. 2022ஆம் ஆண்டு ப்யூ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலரில் எண்பது சென்டுகள் பெண்களுக்கு செல்கிறது என அளவிட்டு கூறியுள்ளனர். அதாவது, ஆண்களுக்கு ஒரு டாலர...

கட்டுமானத்துறையில் பெண்களை நிலைநிறுத்தும் கேர்ள்ஸ் காரேஜ்!

படம்
  பெண்கள் உருவாக்கும் கட்டிடங்கள் - கேர்ள்ஸ் காரேஜ் கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை பெண்கள் அதில் அலுவலகத்தில் வடிவமைப்பு சார்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். நேரடியாக கட்டுமான உருவாக்கத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பது இல்லை. இதற்கு பாலின பாகுபாடு, பெண் கட்டுமான கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. கூட காரணமாக இருக்கலாம். இதை கேர்ள்ஸ் காரேஜ் என்ற தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் தலைவரான எமிலி பில்லோடன் லாம் மாற்றிவருகிறார்.  யசி பெர்க்லியில் கட்டுமான கலை படிப்பை முடித்தவர், சிகாகோவில் உள்ள கலைப்பள்ளியில் பட்டம்பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹெச் டிசைன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, 2008ஆம் ஆண்டு ஆண்டு. பிறகு, 2013ஆம்ஆண்டு அதன் பெயரை கேர்ள்ஸ் காரேஜ் என பெயர் மாற்றி, கட்டுமான பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு குறைந்த தொகை அல்லது இலவசம் என்ற வகையில் வேலை கொடுத்து கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டுமானத்துறையில் 3.4 சதவீத பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் எமிலி, தனது நிறுவனம் முழுக்க பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயங்குகிறார். ''...

சிறையில் கிடைக்கும் கைதிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் தொழில் நிறுவனங்கள்!

படம்
              உலகமெங்கும் உள்ள ஏஐ நிறுவனங்கள், தங்கள் எல்எல்எம் மென்பொருளுக்கு பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்ய, தகவல்களை அளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இதை செய்வதற்கு ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிகவும் குறைவு. பொதுவாக பெரிய நிறுவனங்களை வைத்து தகவல் பயிற்சிகளை செய்தால் அதற்கு ஏராளமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதே பணிக்கு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினால் எப்படி? சிறைக் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு என அரசுக்கு உதவியது போலவும், சம்பளத்தை குறைவாக கொடுத்து எளிதாக வேலையை முடிக்கலாமே? இப்படித்தான் ஃபின்லாந்து கம்பெனி மெட்ராக் நினைத்தது. தனது யோசனையை சிறைத்துறை மறுவாழ்வு திட்ட தலைவரிடம் கூறியது. அவருக்கு பெரிய சந்தோஷம். கைதிகளுக்கு ஏஐ தொடர்பாக வேலை என நினைத்து மகிழ்ந்திருக்கிறார். மெட்ராக்கின் லட்சியம், குறைந்த கூலி. அதேசமயம் ஃபின்னிஷ் மொழியில் எந்திரவழி கற்றலை அமைப்பது. இதற்காகவே கைதிகளைப் பயன்படுத்துகிறது குறைவான கூலியை வழங்குகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.54 யூரோக்களை கூலியாக கைதிகளுக்கு வழங்குகிறது. இப்படி இருபது கைதிகளை தனது வேலைக்கு பயன...

கோடைக்கால வாசிப்புக்கான ஆங்கில கட்டுரை நூல்கள்!

படம்
  அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை நூல்கள் 2023 கோடைக்கால ஸ்பெஷல் யாரி ஆந்தாலஜி ஆன் ஃபிரண்ட்ஷிப் பை வுமன் அண்ட் குயிர் ஃபோல்ஸ் தொகுப்பு ஷில்பா பட்கே, நிதிலா கனகசபை தெற்காசியாவைச் சேர்ந்த 95 பங்கேற்பாளர்கள் பெண்கள், பால்புதுமையினர் பற்றி எழுதியிருக்கிறார்கள். நூலில் கதை, கட்டுரை, கவிதை, காமிக்ஸ் என பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. இவற்றின் வழியாக நட்பு, அது எப்படி உருவாகிறது, அதை நல்ல முறையில் எப்படி பராமரிப்பது என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஷாடோஸ் அட் நூன் – தி சவுத் ஆசியன் ட்வென்டித் சென்சுரி ஜோயா சட்டர்ஜி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று நாடுகளின் வரலாறு, அதன் அரசியல், உணவு என பல்வேறு விஷயங்களை விரிவாக பேசுகிறார். மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டன என்பதை நூல் விளக்குகிறது. எம்பயர் இன்கார்பரேட்டட் பிலிப் ஜே ஸ்டெர்ன் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நாடுகளில் பெரு நிறுவனங்களை உருவாக்கி வணிகம் செய்தனர். வரலாற்று ஆய்வாளர், பிரிட்டிஷ் அரச வம்சமே காலனி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி திட்டம் தீட்...

டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - சீஃப், மெர்காடோ லிப்ரே, ஸ்பேஸ்எக்ஸ்

படம்
  நிதிசேவை நிறுவனம் - மெர்காடோ லிப்ரே சீஃப் - பெண்கள் முன்னேற்றம் ரீகுரோ வேளாண்மை சேவைகள் ஜேடி.காம் - இ வணிக சேவை நிறுவனம் டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 சீஃப் பெண்களுக்கான   உயர்வே நாட்டின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி, ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பாலியல் பன்மைத்தன்மை கொண்ட லட்சியங்களை உருவாக்க உதவி வருகிறது. பொதுவாக பெண் தலைவர்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதற்கான பல்வேறு பயிற்சிகளை சீஃப் வழங்குகிறது. இனவெறி   சார்ந்த சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட நிறுவனத்தின் மதிப்பு 700 மில்லியனாக உள்ளது. குழுக்களை அமைப்பது, முக்கியமான பெண் தலைவர்களை கூட்டி வந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பேச செய்வது என ஊக்கமுடன் இயங்குகிறது. #chief       மெர்காடோ லிப்ரே லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிதியுதவி இலவசம் கிடையாது. கட்டண சேவைதான். நிதி உதவிகளை அள்ளித்தரும் லத்தீன் அமெரிக்க சேவை நிறுவனம். 2022ஆம் ஆண்டு பத்து பில்லியன் வருமானம் காட்டிய நிறுவனம், இதன் வளர்ச்சி 134 சதவீதமாக உள்ளது. செயல்பாட்டு நிதியாக ஒரு பில்லியன் டாலர்களைக் கொண்ட...