இடுகைகள்

அந்தஸ்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் கல்விச் சீர்திருத்தங்கள்- பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்கள்!

படம்
சீனாவில் தொடக்கப்பள்ளி முடித்ததும் உயர்கல்விக்காக தேசிய தேர்வை எழுத வேண்டும். அதை வைத்துத்தான் மாணவர்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். தேசிய தேர்வில் சீனமொழி, கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், அரசியல் அறிவியல், உடற்பயிற்சி ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். சீனாவில், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகள் சிறப்பானவை. வெளிநாட்டிலுள்ள பள்ளிகளைப் போல வசதிகளைக் கொண்டவை. இவற்றுக்கு அடுத்த நிலையில் வூகான், செங்டு, ஷியான் ஆகிய நகரிலுள்ள பள்ளிகள் இருக்கும். அனைத்து நாடுகளைப் போலவே கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளன. இந்த வேறுபாடுகளும், இப்போது மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளியில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படும் என்று பார்ப்போம். சீனமொழி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, அரசியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள், உடற்பயிற்சி, ஆரோக்கிய கல்வி, ஓவியம், இசை, இனக்குழு செயல்பாடுகள், அறக்கல்வி. உயர்கல்வியைப் பொறுத்தவரை மாகாணங்களில் நடைபெறும் தேசிய தேர்வுகள் முக்கியமானவை. இதைப் பொறுத்தே மாணவர்கள் பல்...

மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!

படம்
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி. ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது. சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்து...