இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரையாடல் - தோல் - அறிவியல் அறிவோம்

கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது. பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை மொழியைக் கற்றவர்கள...

அல்சீமர் நோயின் அறிகுறிகள்!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன? ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பது, ஒரே கதையை திரும்ப கூறுவது, கூறிக்கொண்டே இருப்பது, சமைப்பது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை மறந்துபோவது, திசை, முகவரி தெரியாமல் தடுமாறுவது, கட்டணம் செலுத்துவதை மறப்பது, குளிப்பதை மறப்பது, ஒரே உடையை அப்படியே அணிந்திருப்பது, இன்னொருவரின் முடிவுக்காக காத்திருப்பது, இன்னொருவரை சார்ந்திருப்பது. புற்றுநோயின் வகைகள் என்னென்ன? கார்சினோமா, சர்கோமா, லுக்குமியா, லிம்போமா பாய்சன் ஐவி செடியை தொட்டவுடன் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? 85 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தோலில், உடையில் பாய்சன் ஐவி இலைகள் பட்டால், அந்த இடத்தை மென்மையான சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வாமை காரணமாக தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்படலாம். இந்த பாதிப்பு ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். நன்றி சயின்ஸ் ஹேண்டி புக்

சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!

படம்
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...

விலங்குகளின் வயதை மனிதர்களோடு எப்படி ஒப்பிடுவது?

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆபத்தான நாய் இனங்கள் எவை? பிட்புல், ராட்வெய்லர், ஜெர்மன் ஷெப்பர்ட் என்பவை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. இந்த வகை நாய்களை வளர்க்கும் முன்னர் அவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். நாய்களுக்கு பயிற்சியும் முக்கியம். உங்கள் மாநிலம், நாட்டில் எந்த நாய் இனங்கள் வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என அரசு விதிகளை உருவாக்கியிருக்கும். அதை பின்பற்றினால் எப்பிரச்னையும் எழாது. நாய்கள் ஊளையிடுவது எதற்காக? அதனுடைய இடத்தைப் பிற நாய்களுக்கு தெரிவிப்பதற்காக. ஊளையிடுதலை நன்றாக கவனித்தால் ஆம்புலன்சின் சைரன் போலவே ஒலிக்கும். மர்ஜோரி என்ற நாயின் பங்களிப்பு என்ன? மாங்கெரல் இன நாயான மர்ஜோரிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு இன்சுலின் செலுத்தி உயிரைக் காத்தனர். மருத்துவத்துறையில் இதுபற்றி மருத்துவர்கள் ஆராய மர்ஜோரி உதவியது. குரைக்காத நாய் இனம் எது? பசென்ஜி என்ற நாய் இனம் குரைப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழமையான நாய் இனம். விலங்குகளின் வயது, மனிதர்களின் வயது எப்படி ஓப்பீடு செய்வது? நாய்களுக்கு ஒரு வயது என்றால் அது மனிதர்களின் பதினை...

விலங்கியலின் தந்தை யார்?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் என்ன? மண்ணில் செடிகள் நடப்படுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செடிகள், மண் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம். நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை திரவ வடிவில் செடிக்கு வழங்குகிறார்கள். நவீன ஹைட்ரோபோனிக் முறையை உருவாக்கியவர், ஜூலியஸ் வான் சாக்ச்ஸ். இவர் தாவரங்களின் ஊட்டச்சத்து பற்றி ஆய்வுகள் செய்து வந்தவர். விதைகளை எத்தனை ஆண்டுகள் கெடாமல் காக்க முடியும்? காற்று படாத பெட்டியில் விதைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் அவற்றைக் காக்கலாம். பெரும்பாலும் காய்கறி விதைகளை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பத்திரப்படுத்தலாம். இகிபெனா என்றால் என்ன? பாறைகளில் கற்களில் பூக்களை செதுக்கும் கலை, இதை தொடக்கத்தில் வீரர்கள், புகழ்பெற்ற குடும்பத்தினர் பழகினர். ஆனால், இன்று காலப்போக்கில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த கலையை பெண்களும் செய்து வருகிறார்கள். பூக்களை அலங்காரம் செய்வது என்பதுதான் இகிபெனாவின் மூலம். ஒத்திசைவு, அழகு, சமநிலை என்பதை அடிப்படை சூத்திரமாக கொண்டது. 1400 ஆண்டுகளாக இக்கலை ஜப்பானில் புகழ்பெற்ற...

தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அமெரிக்காவின் தேசிய மலர் எது? 1986ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ரோஜா, அமெரிக்காவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது? ஜோசப் காட்லெப் கோல்ராய்டர் என்ற ஆராய்ச்சியாளர், தேனீ மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையை 1761ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவர்தான், செடிகள் பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை செய்வதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தவர். லில்லி விக்டோரியா அமேசானிகா என்ற தாவரத்தின் சிறப்பு அம்சம் என்ன? பிரமாண்டமானது. அமேசான் ஆற்றில் வளரக்கூடியது. இதன் இலைகள் ஆறு அடி நீளம் கொண்டவை. இலைகளில் சிறிய குழந்தையைக் கூட வைத்துக்கொள்ளலாம். வளர்ச்சி அடைந்த இலைகள் நாற்பத்தைந்து கிலோ எடையைத் தாங்கும். பூக்கள், முப்பது செ.மீ. அளவு கொண்டவை. இரண்டு இரவுகள் மட்டும்தான் மலர்ந்து பூக்கள் இருக்கும். முதலில் வெள்ளையாக இருந்து இரண்டாவது இரவில் ரோஸ் நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காட்சியளிக்கும். ஒரு தாவரத்தில் ஒரே நேரத்தில் ஒரு பூ மட்டுமே பூக்கும். இரண்டு இரவுகளுக்கு பிறகு பூக்கள், நீரில் மூழ்கிவிடும். ஆரஞ்சு மரத்தின் ...

தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது? கானியம் மெக்குலாடம் என்ற தாவரமே நஞ்சு என்ற வகையில் ஆபத்தானது. தென் அமெரிக்காவில் உள்ள லானா மரம், நஞ்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழங்குடிகள் இதன் நஞ்சை, தங்களின் அம்புகளில் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள், மரம், செடிகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன? காகிதம், ஜவுளி, கட்டுமானம், உணவு ஆகியவற்றுக்கு மூலப்பொருட்களை மரங்களே தருகின்றன. சாக்லெட்டுகளை உருவாக்க கோக்கோ விதைகள் தேவை. குறிப்பாக தியாபுரோமா காகோவ் என்ற மர இனம் தேவைப்படுகிறது. ஃபாக்ஸ் குளோவ் என்ற தாவரத்தில் இருந்து இதய செயலிழப்புக்கான மருந்து பெறப்படுகிறது. காமெலியா சினென்சிஸ் என்பதை அறிவீர்களா, அதுதான் தினந்தோறும் பருகும் தேநீரில் பயன்படுத்தும் தேயிலை. மரக்கன்று இனப்பெருக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியவர் யார்? லூதர் பர்பேங்க் என்பவர், மரக்கன்றுகளை வீரியம் மிக்கதாக கலப்பு முறையில் உருவாக்கினார். பல்வேறு காய்கறி செடிகளை பார்த்து அடையாளம் கண்டு அதை கலப்பு முறைக்கு ஏற்றதாக மாற்றினார். இந்த வகையில் உருளைக்கிழங்கு, பிளம் ஆகிய செடிகள் உள்ளடங்கும்....

உலகின் முதல் வெற்றிகரமான குளோனிங் விலங்கு எது?

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பி53 என்ற மரபணுவின் பயன் என்ன? இந்த மரபணு, டிஎன்ஏ சேதமாகும்போது செல்கள் புதிதாக உருவாவதை தடுத்து புற்றுநோய் அபாயத்தை முற்றாக தடுக்கிறது. அதேசமயம் இந்த பி53 மரபணு ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகும்போது, புற்றுநோய் ஆபத்து ஏற்படும். இந்த மரபணு பற்றி அறிந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க இதை பயன்படுத்திகொள்ள முடியுமா என யோசித்து வருகிறார்கள். பி53 மரபணு, 1979ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மரபணுவியலின் தந்தை என கிரிகோர் மென்டல் கருதப்பட காரணம் என்ன? அவர் பதினொரு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தாவரங்களை ஆராய்ந்து அதன் இனப்பெருக்கம் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைத்தார். மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் துறவி. தனது தோட்டத்தில் உள்ள பட்டாணியை ஆராய்ந்து மரபணு பற்றிய உண்மைகளை உலகிற்கு சொன்னார். வில்லியம் பேட்சன் என்ற ஆராய்ச்சியாளர், மெண்டலின் ஆய்வை அறிவியல் உலகிற்கு கொண்டு வந்தார். மரபணுவியல் என்ற பதத்தையும் வில்லியம் அறிமுகப்படுத்தி வைத்தார். டார்வின், மெண்டல் என இரு புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் அறிவார...

மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி டைனோசர்களின் வாழ்நாள் பற்றி கூறுங்களேன். டைனோசர்கள் குறைந்தது எழுபத்தைந்து தொடங்கி முந்நூறு ஆண்டுகள் வரை வாழும். நீண்ட ஆயுள் காலம் என்பதால் அதன் முதிர்ச்சி பெறும் நிலையும் மிக மெதுவாக நடைபெறும். மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட, தென் அமெரிக்காவில் வாழ்ந்த விலங்கு. மூன்று மீட்டர் நீள உயரத்தில் கம்பளி போன்ற அடர்த்தியான முடிகளைக் கொண்டது. முப்பத்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருந்தது. இதற்கு நேராக வளர்ந்த தந்தங்களும் உண்டு. டைனோசர்கள் அழிந்துபோனதற்கு காரணம் என்ன? அவை அழிந்து அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. காலநிலை மாற்றம், பிற உயிரினங்களோடு போட்டியிட முடியாத நிலை, முட்டைகளை பிற உயிரினங்கள் அழித்தது, இயற்கை பேரிடர் என நிறைய காரணங்கள் உள்ளன. இவை எல்லாமே ஊகங்கள்தான். எவையும் உறுதியானவை அல்ல. அழிவின் விளிம்பில் , அச்சுறுத்தல் நிலையில் என்று கூறப்படுவதற்கு என்ன பொருள்? அழிவின் விளிம்பில் உள்ளதை கவனிக்கவேண்டும். அந்த பட்டியலில் உள்ளதை ...

டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி காற்று மாசுபாடு என்றால் என்ன? விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன? ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும். பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன? மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்...

நீரில் மூழ்கும் மரக்கட்டை!

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தது யார்? அமெரிக்காவைச் சேர்ந்த எல்வுட் ஹைனஸ் என்பவர், 1911ஆம்ஆண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தார். இவர், பல்வேறு உலோகங்களை ஒன்றாக கலந்து ஆராய்ச்சி செய்யும்போது இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது. ஐக்கிய ராஜ்யத்தைச் சேர்ந்த ஹாரி பிரர்லி, ஸ்டீலை மேம்படுத்தினார். அதற்காக புகழும் பெற்றார். 1913ஆம் ஆண்டு, ஸ்டீலில் குரோமியம் சேர்த்தால், அதில் அரிப்பு ஏற்படாது என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். இவர்கள் இல்லாமல் பிரடெரிக் பெக்கெட், பிலிப் மொன்னார்ஸ், டபிள்யூ போர்ச்சர்ஸ் ஆகியோர் ஸ்டீலை மேம்படுத்திய பெருமைக்கு உரியவர்கள். டெக்னெட்டியம் என்றால் என்ன? யுரேனியத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளே டெக்னெட்டியம். இதை மருத்துவத்துறையில் நோயை கண்டறியும் சோதனையில் பயன்படுத்துகிறார்கள். கதிரியக்க தனிமம். 1937ஆம் ஆண்டு, கார்லோ பெரியர், எமிலியோ செக்ரே ஆகிய இருவரும் தனிமத்தை தனியாக பிரித்து சாதித்தனர். அமெரிக்காவிலுள்ள நாணயங்கள் எந்த உலோகத்தினால் ஆனவை? செம்பு, துத்தநாகத்தினால் ஆனவை. காலனிய காலகட்டத்தில் அதாவது ...

வைரத்திற்கு அடுத்தபடியாக உள்ள கடினமான பொருள்!

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மோகா அளவுகோல் எதற்கு பயன்படுகிறது? கனிமங்களை அவற்றின் கடினத்தன்மை அடிப்படையில் வகைப்படுத்த மோகா அளவுகோல் உதவுகிறது. 1812ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் பிரடரிச் மோஹ்ஸ் மோகா அளவுகோலை கண்டுபிடித்தார். மென்மையான கனிமங்கள் தொடங்கி கடினமானவை வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கனிமங்களை நிறங்கள் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தியது யார்? இதைச்செய்ததும் கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆபிரகாம் காட்லோப் வெர்னர் என்பவர், நிறங்கள் அடிப்படையில் கனிமங்களை தரம் பிரித்து அவற்றை படங்களாக வரைந்து விளக்கியவர் இவரே. வைரத்திற்கு அடுத்து கடினமான பொருள் என எதைக் கூறலாம்? போரோன் நைட்ரைட் என்ற பொருளைக் கூறலாம். இது கடினமான செராமிக். வைரத்திற்கு அடுத்த நிலையில் இப்பொருள் இடம்பிடிக்கிறது. ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்றால் என்ன? ஒரு நாட்டின் பாதுகாப்பு தொழில்துறைக்கு அவசியம் தேவைப்படும் கனிமங்களை ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்று குறிப்பிடுவார்கள். தோராயமாக எண்பது கனிமங்களை ஒரு நாடு எப்போதுமே குறைவற வாங்கி சேமித்து வைத்திருக்கும். உதாரணமாக குரோமியம், பல்லாடிய...

முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா? ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே! சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா? ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது ந...

புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

படம்
            அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹரிகேன் என்ற சொல்லின் மூலம் என்ன? மாயன் இனக்குழுவின் கடவுளான ஹூராக்கன் என்பதிலிருந்து ஹரிக்கேன் என்ற சொல் உருவானது. இக்கடவுள் விடும் மூச்சுக்காற்றே அதிக ஆற்றல் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? 1950ஆம் ஆண்டு தொடங்கி, சர்வதேச வானிலை அமைப்பு மூலம் கலந்துரையாடல் சந்திப்புகள் நடத்தப்பட்ட புதிய பெயர்கள் சூட்டப்படுகின்றன. இப்பெயர்களுக்கு கலாசாரம், நிலப்பரப்பு சார்ந்த தன்மை உண்டு. இவை, அட்லாண்டிக், கரீபிய, ஹவாய் பகுதியைச் சேர்ந்தவை. பருவக்கால புயல் மணிக்கு அறுபத்து மூன்று கி,மீ. வேகத்தைத் தாண்டினாலே அதற்கு தேசிய புயல் மையம், பெயர் சூட்டுவதற்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள். க்யூ, யு, எக்ஸ், ஒய், இசட் ஆகிய எழுத்துகளில் பெயர்கள் குறைவு என்பதால் இந்த எழுத்துகள் விலக்கப்படுகின்றன. புயல்களின் பெயர்களை நீக்குவது உண்டா? புயல்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஆறு ஆண்டுகள் ஆயுள் உண்டு பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்படுத்திய புயல்களின் பெயர்களை நாடுகள் விண்ணப்பம் செய்தால் சர்வதேச வானிலை அமைப்பு, நீக்கிவி...

புயல்களை துரத்திச் செல்வதன் பயன்?

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹபூப் என்றால் என்ன? மணல், தூசி கலந்த புயல் என்று ஹபூப்பைக் குறிக்கலாம். இதன் வேர்ச்சொல் அரபி மொழியில் இருந்து வந்தது. ஆப்பிரிக்காவின் சகாரா, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பாலைவனங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா ஆகியவற்றில் தீவிரமான புயல் வீசுவதைக் காணலாம். விண்ட் ஷியர் என்றால் என்ன? ஷியர் என்றால் காற்று மாறுபாடு என்று கொள்ளலாம். குறுகிய தொலைவில் காற்று வேகமாக சட்டென திசையில் மாறுபட்டு வீசும்.இடியுன் கூடிய மழையில் காற்று திடீரென திசை மாறி வீசுவதைக் காணலாம். அதேநேரம், விமானம் இச்சூழ்நிலையில் பயணிக்க நேர்ந்தால் ஆபத்து நேருவதற்கு வாய்ப்பு அதிகம். இப்படியான சூழலை முன்னரே உணர்ந்து விமானிகளை எச்சரிக்க, விமானநிலையங்களில் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. மைக்ரோ கிளைமேட் என்றால் என்ன? பெரிய நிலப்பரப்பில் உள்ள சிறிய பகுதியில் மட்டும் தட்பவெப்பநிலை, வீசும் காற்று, கருமேகங்கள் சூழ்வது என சூழல் மாறுவதை மைக்ரோகிளைமேட் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.  கடற்கரைப்பகுதியில் இப்படியான சூழல் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்க...

வெப்ப அலை என்றால் என்ன?

படம்
        அறி்வியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெப்ப அலை என்றால் என்ன? 1935-1975 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதலில், பதினைந்தாயிரம் அமெரிக்கர்கள் இறந்துபோனார்கள். எண்பதுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரத்து ஐந்நூறு பேர் இறந்துபோனார்கள். சூரிய வெப்பம் நாற்பது அல்லது நாற்பது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்வதே வெப்ப அலை ஏற்படுவதற்கு காரணம். காற்றோட்டமான இடத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் அதிக மரணங்கள் ஏற்படாது. அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் முதியோரே வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெப்பஅலை பாதிப்பை அரசு அறிவித்துவிட்டால், மக்கள் வெளியில் செல்லும்போது தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்பநிலை தொகுப்புபட்டியல் என்றால் என்ன? சூரிய வெப்பம் அதிகரிக்கும்போது, காற்றின் வெப்பநிலை மாறும். வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸ் என அதிகரிக்கும்போது, மனிதர்களுக்கு நீர்ச்சுருக்கம், வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவது ஆகிய சிக்கல்கள் ஏற்படும். இதைக் கணிக்க பயன்படுவதே வெப்பநிலை தொகுப்புபட்டியல். 1816 என்ற ஆண்டை கோடைக்...

எல் நினோ, லா நினோ என்ன வேறுபாடு?

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் அமெரிக்க புவியியலைப் பற்றி முதலில் எழுதியவர் யார்? அவர் பெயர், வில்லியம் மெக்லரி. ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். 1809ஆம் ஆண்டு இவர், அமெரிக்காவை அதன் பாறை வகைகளை அடிப்படையாக  கொண்டு பிரித்தார். 1817ஆம் ஆண்டு இப்படி வகை பிரித்து தயாரித்த வரைபடத்தை விரிவாக்கினார். அமெரிக்க புவியியலைப் பற்றி முதலில் கட்டுரைகள், நூல்களை எழுதியவரும் இவரே.. டோபோகிராபிக் வரைபடங்களின் முக்கியத்துவம் என்ன? இயற்கையை பாதுகாக்க நினைக்கும் ஆர்வலர்கள், அதில் கட்டுமானம் செய்ய நினைக்கும் பொறியாளர்கள், சூழலியலாளர்கள், பெட்ரோலை அகழ்ந்து எடுக்க முயலும் பெருநிறுவனங்கள் என அனைவருக்குமே டோபோகிராபிக் வரைபடங்கள் அவசியம் தேவை. இந்த வரைபடத்தில் நிலப்பரப்பிலுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள், சாலைகள், ஆறுகள், ஏரிகள், எல்லை, கட்டுமானங்கள் என அனைத்துமே பதிவாகிவிடும். மலையேற்ற வீரர்கள், சைக்கிள் பயணம் செய்பவர்கள், மீன்பிடிப்பவர்கள் என பலரும் பயன்படுத்துகிறார்கள். எல்நினோ என்றால் என்ன? பசிபிக் கடலிலுள்ள மேற்புற வெப்பநிலை உயர்வதை எல்நினோ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மூன்று முதல...

பூமியின் உள்ளே... அறிவியல் கட்டுரை நூல் வெளியீடு - அமேசான் தளம்

படம்
           பூமியின் உள்ளே... என்ற அறிவியல் கட்டுரை நூல், அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் அத்தளத்தில் வாசிக்கலாம்.    

முகில் மரம் கானல் நீர் - அறிவியல் கட்டுரை நூல் - மின்னூல் வெளியீடு

படம்
      நூலை வாசிக்க....   https://books2read.com/u/b609Yp    

அறிவியல் கேள்வி பதில்கள் - புவியியல்

படம்
  அன்டார்டிகாவில் உள்ள ஐஸ்கட்டியின் தடிமன் என்ன? தோராயமாக அதை கூறவேண்டுமெனில் , 6,600 அடி நீளத்திற்கு ஐஸ்கட்டி இருக்கலாம் என அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஐஸ் மூன்று கி.மீ. அளவுக்கு தடிமனமாக உள்ளது. மேலும் உலகில் உள்ள தொண்ணூறு சதவீத ஐஸ்கட்டி, அன்டார்டிகாவில்தான் உள்ளது. அன்டார்டிகாவில் கால்பதித்த முதல் மனிதர் யார்? உலகின் பத்து சதவீத நிலப்பகுதி அன்டார்டிகா கண்டம் கூறலாம். ஐந்தாவது பெரிய கண்டம். யார் முதலில் கால்பதித்த மனிதர் என்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. 1773-1775 காலகட்டத்தில் கால்பதித்தவர் என பிரிட்டிஷை  சேர்ந்த கேப்டன் குக்கை கைகாட்டுகிறார்கள். இவருக்கு அடுத்து நாதேனியல் பால்மர், பால்மர் பெனிசுலா என்ற இடத்தைக் கண்டறிந்தார். அவருக்கு அப்போது அது ஒரு தனி கண்டம் என்பது தெரியாது. அந்த ஆண்டு 1820. அவருக்குப் பிறகு , அதே ஆண்டில், ஃபேபியன் காட்டிலெப் வோன் பெலிங்ஹாசன் என்பவர் அங்கு சென்றார். இவருக்கு அடுத்து 1823ஆம் ஆண்டு, ஜான் டேவிஸ் என்பவர், அன்டார்டிகாவிற்கு சென்று வெடல் சீ என்ற பகுதியை கண்டறிந்தார். 1840ஆம் ஆண்டு, அன்டார்டிகா சென்ற சார்லஸ் வில்கெஸ், அதை ஒ...