விலங்கியலின் தந்தை யார்?

 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் என்ன?

மண்ணில் செடிகள் நடப்படுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செடிகள், மண் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம். நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை திரவ வடிவில் செடிக்கு வழங்குகிறார்கள். நவீன ஹைட்ரோபோனிக் முறையை உருவாக்கியவர், ஜூலியஸ் வான் சாக்ச்ஸ். இவர் தாவரங்களின் ஊட்டச்சத்து பற்றி ஆய்வுகள் செய்து வந்தவர்.

விதைகளை எத்தனை ஆண்டுகள் கெடாமல் காக்க முடியும்?

காற்று படாத பெட்டியில் விதைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் அவற்றைக் காக்கலாம். பெரும்பாலும் காய்கறி விதைகளை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பத்திரப்படுத்தலாம்.

இகிபெனா என்றால் என்ன?

பாறைகளில் கற்களில் பூக்களை செதுக்கும் கலை, இதை தொடக்கத்தில் வீரர்கள், புகழ்பெற்ற குடும்பத்தினர் பழகினர். ஆனால், இன்று காலப்போக்கில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த கலையை பெண்களும் செய்து வருகிறார்கள். பூக்களை அலங்காரம் செய்வது என்பதுதான் இகிபெனாவின் மூலம். ஒத்திசைவு, அழகு, சமநிலை என்பதை அடிப்படை சூத்திரமாக கொண்டது. 1400 ஆண்டுகளாக இக்கலை ஜப்பானில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. பூக்கள் அலங்காரத்தை கற்றுத்தரும் பள்ளிகளும் ஜப்பானில் உண்டு.

வெற்றித்தோட்டம் என்பது எதைக் குறிக்கிறது?
இந்த கருத்தை உருவாக்கி செயல்படுத்தியவர் கிளாட் ஆர் விக்கார்ட். இவர் விவசாய ஆராய்ச்சியாளர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், அமெரிக்காவில் படைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய்கறிகளை பயிரிட்டால், சந்தையில் விலையும் குறையும், படைகளுக்கும் காய்கறிகளை அனுப்பலாம் என கிளாட் திட்டமிட்டார். 1945ஆம் ஆண்டு, நாட்டில் இருபது மில்லியன் வெற்றி தோட்டங்களை உருவாக்கியிருந்தனர். ராணுவத்தி்ற்கு மக்களின் பங்களிப்பு என்றும் கூட கூறலாம். வெற்றித்தொட்டம் என்ற வார்த்தை, 1603ஆம் ஆண்டு ரிச்சர்ட் கார்ட்னர் எழுதிய ஆங்கில நூலில் இருந்து பெறப்பட்டது.

விலங்கியலின் தந்தை யார்?

அரிஸ்டாட்டில், உயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். விலங்குகளின் இனம், வகை, அமைப்பு என பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து எழுதினார்.

அமெரிக்காவில் முதல் வனவிலங்கு கண்காட்சியகம் எப்போது தொடங்கப்பட்டது?

1859ஆம் ஆண்டு, பிலடெல்பியா விலங்கியல் தோட்டம் முதலில் தொடங்கிய வனவிலங்கு காட்சியகம் ஆகும்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!