கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - சௌமித்ரா பதாரே
உளவியலாளர் சௌமித்ர பதாரே சௌமித்ர பதாரே மனநல சட்டம் மற்றும் கொள்கை மைய இயக்குநர் உலகளவில் நடைபெறும் தற்கொலைகளில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பதாரே, இதுபற்றி லைஃப் இன்டரப்டட் அண்டர்ஸ்டாண்டிங் இண்டியாஸ் சூசைட் கிரிசிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அம்ரிதா திரிபாதி, அமிஜித் நட்கர்னி ஆகிய எழுத்தாளர்களும் பங்களித்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள், எழுபது வயதானவர்கள் ஆகிய பிரிவுகளில் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன என கூறியுள்ளீர்கள். இந்தியாவில் தற்கொலைகள் இப்படி அதிகரிக்க என்ன காரணம்? வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தனியாக இருப்பதுதான் காரணம். மேலும் அவர்கள் தங்கள் துணையை இழந்திருப்பார்கள். சமூகத்தில் புறக்கணிப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள். இதைப் பற்றிய தகவல் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இளைஞர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. குடும்ப பிரச்னைகள், உறவு சார்ந்த சிடுக்குகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. பிற நாடுகளில் நேரும் தற்கொலைகளுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கியமான காரணமாக உள்ளது. இளம் வயதில் கர்ப்பிணியாவது, பொருளாதார ...