இடுகைகள்

நியூரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள்  மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது.  மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...

மூளைக்கு மாத்திரை போட்டு புத்திசாலியாகும் இளைஞனும், அமெரிக்க அரசியலும்! - லிமிட்லெஸ் - வெப் தொடர்

படம்
லிமிட்லெஸ் இருபத்தெட்டு ஆண்டுகள் எதையும் செய்யாமல் கிளப்புகளில் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளைஞனுக்கு நண்பன் மூலம் என்சிடி மாத்திரை கிடைக்கிறது . மூளையின் அனைத்து செல்களையும் உற்சாகப்படுத்தி வேலைவாங்கும் மாத்திரையால் அசாதாரண புத்திசாலியாக மாறும் இளைஞன் வாழ்க்கைதான் கதை . வெப் தொடர் சீரியசான பிரச்னையை பேசினாலும் இதிலுள்ள காமெடி அனைத்தையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது . தொடரின் தொடக்கத்திலேயே என்சிடி மாத்திரையை பிரையன் பின்சுக்கு கொடுத்த நண்பர் தனது வீட்டில் கொலையாகி கிடக்கிறார் . அவரிடம் இன்னொரு மாத்திரை வேண்டும் என கேட்கப்போன பிரையன் சம்பவ இடத்தில் இருக்க அவரைப் போலீஸ் துரத்துகிறது . அதிலிருந்து அவர் மீண்டு ரெபெக்கா ஹாரிஸ் என்ற காவல்துறை அதிகாரி மூலம் எஃப்பிஐயில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்க உதவுகிறான் . தொடரில் பிரையன்தான் நாயகன் . ஆனால் ஏராளமான பாத்திரங்களை உள்ளே சேர்ந்து போராடிக்காமல் பார்த்துக்கொண்டதோடு , காமெடிக்கான இடமும் தொடரில் அதிகமாக உள்ளது . ஜேக் மெக்டோர்மன் , ஜெனிஃபர் கார்பென்டர் , ஹில் கார்பர் , மேரி எலிசபெத் ஆகியோர்தான் இத...

நியூராலிங்க் சிப் மூலம் கணினியையும் மூளையையும் இணைக்க முடியுமா?

படம்
              நியூராலிங்க் ' சிப் ' ! நவீன தொழிலதிபர் எலன் மஸ்க்கின் நிறுவனம் , நியூராலிங்க் . இந்த நிறுவனம் , ஒருவரின் தலையில் சிப் பொருத்தி அவரின் மூளையிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்க்க முயலுகிறது . சிப் மூலம் மூளையில் நடக்கும் பல்வேறு தகவல் தொடர்புகளை கண்காணித்து அவற்றை முழுமையாக அறிவது , இந்த நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் ஆகும் . ஐடியா , ஆங்கில அறிவியல் திரைப்படம் போல இருந்தாலும் சாத்தியம் என அடித்துச் சொல்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் எலன் மஸ்க் . மூளையில் 3,072 மின்முனைகளை தலைமுடியை விட மெல்லிய வயர்களில் பிணைத்து மூளையில் நியூரான்களில் நடக்கும் தகவல்தொடர்புகளை நாம் பெறுவதுதான் இதில் முக்கியமான கட்டம் . இதனை லிங்க் என்று குறிப்பிடுகின்றனர் . மூளையில் நடைபெறும் தகவல்தொடர்பை அறி்வதன் மூலம் , மூளையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை துல்லியமாக அறியமுடியும் . தற்போது வயர்கள் இருந்தாலும் , எதிர்காலத்தில் வயர்லெஸ் முறையில் இந்த அமைப்பு செயல்படும் என நியூராலிங்க் நிறுவனம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது . ம...

சைக்கிள் கற்பது எப்போதும் மறப்பதில்லை, என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ ? சைக்கிள் கற்பது எளிதில் மறப்பது இல்லை ஏன் ? சைக்கிளை குரங்கு பெடல் போட்டு பலரின் இடுப்பின் மீது விட்டு கற்றவர்களுக்கு அது எப்படி எளிதில் மறக்கும் ? பலருக்கும் சைக்கிளை பழகி பல்லாண்டுகள் ஆனபிறகும் சைக்கிளை எப்படி ஓட்டுவது என்பது மறப்பது இல்லை . சைக்கிள் ஓட்டுவது பெரிய விஷயமாக பலருக்கும் தெரியாது . ஆனால் இதில் முழு உடலும் அலர்ட்டாக இருப்பது முக்கியம் . அப்போதுதான் மூளை நினைத்த விஷயங்களை உடல் செயல்படுத்த முடியும் . உடலின் மோட்டார் அமைப்பின் செயல்பாடு , தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை நீங்கள் பெடல் போடும்போது சரியாக அமையவேண்டும் . இல்லையெனில் சைக்கிள் எங்காவது மோதி சரிந்துவிடும் . விளைவாக உங்கள் முட்டி பெயர்ந்து விடும் . மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் ஜூர்ஜென் கான்சாக் செரிபிரல் ஒருங்கிணைவு சைக்கிள் ஓட்டுதலை சாத்தியமாக்குகிறது என்று கூறுகிறார் . சைக்கிள் ஓட்டுவது மட்டுமல்லாது நடனம் , விளையாடுவது , நடப்பது ஆகியவை செய்யும்போதும் அவசியமாகிறது . இவை சரியாக இல்லாதபோது இந்த செயல...

தலையில் பந்தை முட்டினால் நினைவிழப்பு குறைபாடு ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கால்பந்தை தலையில் முட்டி விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அப்படி விளையாடுவதை ஆபத்து என்கிறார்களே? ஸ்காட்லாந்து நாட்டில் பன்னிரண்டுக்கு வயதுக்கு குறைவான சிறுவர்கள் கால்பந்தை தலையில் முட்டி விளையாடக்கூடாது என்று தடை விதிக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம், தலையில் முட்டி விளையாடும்போது, மூளை பாதிக்கப்பட்டு டிமென்ஷியா எனும் நினைவிழப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஆஸ்டில் ஃபிபா கோப்பையில் பங்கேற்றவர். இவர் விளையாட்டில் ஏற்பட்ட காயங்களால், 59 வயதில் தன் மகளின் வீட்டில் இறந்துபோனார். இவரின் தலையை ஆராய்ச்சி செய்தபோது, குத்துச்சண்டை வீர ர்களுக்கு தலையில் ஏற்படும் சிடிஇ எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். காரணம், கால்பந்து விளையாட்டில் வேகமாக வரும் வந்தை தலையில் முட்டி கோல் அடிப்பதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரண மக்களை விட கால்பந்து வீரர்கள் 3.5 மடங்கு டிமென்சியா குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் வில்லி ஸ்டீவர்ட் என்பவர் ...

யோசித்தால் மூளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா?

படம்
@ மிஸ்டர் ரோனி அதிகமாக யோசித்தால் மூளை பாதிக்கப்படுமா? இப்படி கேள்வி கேட்கவும் சிரமப்பட்டிருப்பீர்கள் அல்லவா? மூளைக்கு வேலை கொடுத்தால் அதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் காலியாகும். இதன் காரணமாக சர்க்கரை தாகம் ஏற்படும். நிறைய டீ குடிப்பீர்கள். காபி அல்லது பிஸ்கெட்,  சாக்லெட் என பெடிகிரி தவிர நிறைய உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால் அதனை உடற்பயிற்சி என எடுத்துக்கொள்ளுங்கள். மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல எதையாவது ஆர்வமாக கண்டுபிடிக்க முயற்சியுங்கள். மூளை யோசித்தாலும் இல்லாவிட்டாலும் 20 சதவீத சக்தியை எடுத்துக்கொள்ளும். எனவே அதனைப் பயன்படுத்துங்களேன். யோசிப்பதால் உடலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, பகல், இரவு பார்க்காமல் யோசிப்பது. இப்படி எனக்குத் தெரிந்து யோசிப்பது தஞ்சை பிரகாஷ் கதாபாத்திரங்கள்தான். நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ்

வாசனைத்திறனின் வரலாறு!

படம்
வாசனை நுகர்வுத்திறன் நுகர்வுத்திறன் என்பது ஐம்புலன்களின் வரம். உணவுப்பொருள் உப்பிருக்கிறதா, வெந்திருக்கிறதா என்பது வரை வாசனை மூலமே கண்டுபிடிக்க முடியும். மோப்பம் பிடிப்பது என்ற வார்த்தை இல்லாமல் துப்பறியும் நாவல்களும், கௌபாய் காமிக்ஸ்களும் கிடையாது. காரணம், கற்காலத்தில் வேட்டைக்குச் செல்லும்போது உடலின் அத்தனை உறுப்புகளும் விழித்திருந்தால்தான் உயிர் பிழைக்க முடியும். அதில் முக்கியமானது, காதும், மூக்கும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் காட்டில் வேட்டையாட வந்த விலங்குக்கே நீங்கள் இரையாகவேண்டியதுதான். அதுபற்றி தகவல்களைப் பார்ப்போம். நமது உடலிலுள்ள 2 சதவீத மரபணுக்கள் வாசனைகளைக் கண்டறிய உதவுகின்றன.  1756 ஆம் ஆண்டு  ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் கார்ல் லினாஸ் வாசனை நுகர்வை ஏழு வகைப் பிரிவாக பிரித்துள்ளார்.  அமெரிக்க மக்களில் 17 சதவீதம் பேர்களுக்கு வாசனைகளை நுகர்ந்து கண்டறிவதில் பிரச்னை உள்ளது.  மனிதனின் மூளையில் உள்ள நியூரான்கள் மூலம் 1 ட்ரில்லியன் வாசனைகளை கண்டறிய முடியும்.  வாசனைகளைக் கண்டறிவதில் மனிதர்களுக்கு ஒரு சதவீதமும், நாய்களுக்கு 12.5 ச...

தேஜா வூ ஏற்படுவது ஏன்?

படம்
Youtube ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி தேஜா வூ ஏற்படுவது ஏன்? தேஜா வூ என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்னமே பார்த்த என்று பொருள். நம்பில் பலருக்கும் தேஜா வூ பழகியிருக்கலாம். ஒரு சூழ்நிலையைச் சந்திக்கும்போது, அதனை முன்னமே சந்தித்தது போன்று இருக்கும். அதுதான் தேஜா வூ. 2004 ஆம் ஆண்டு செய்த தேஜாவூ ஆராய்ச்சியில் 50 பேர் பங்கேற்றனர் இதில் மூன்றில் இருபங்கினருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல; கண்பார்வையற்றவர்களுக்கும் கூட தேஜாவூவை உணர முடிந்திருக்கிறது. கனவுகளைப் போல தேஜா வூவை ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. தேஜா வூ நிகழ்வுகளை உங்களைக் குறித்த நினைவில்லாத நிலையில் பார்க்கிறீர்கள். அதுவும் பின்னர் மறந்துவிடுகிறது. ஆனால் குறிப்பிட்ட முன்னரே பார்த்த நிகழ்வுகள் திரும்ப நடக்கும்போது அவை நினைவுக்கு வருகிறது. இதில் முக்கியமான ஒற்றுமை, நீங்கள் பார்க்கும் அறைகளில் ஏதோவொரு விஷயம் நீங்கள் பார்த்த அறைகளோடு பொருந்திப்போகும். இதனால்தான் தேஜாவூவில் நீங்கள் பார்த்த  நண்பரின் அறை அவ்வளவு துல்லியமாக உள்ளது. அதேசமயம் நீங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி முறை...

மூளையில் மின்னல் வெட்டுதா?

படம்
Pexels.com பொதுவாக மூளை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் உண்மைத்தன்மையும் மிகச்சிக்கலான தன்மை கொண்டவை. விளக்கப்புகுந்தால் அதை கூறுபவருக்கு மட்டுமல்ல; புரிந்துகொள்ள நினைப்பவருக்கும் பூமி வலமிருந்து இடமாக சுற்றி பொறி கலங்கும். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நியூரான்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன. மின் துடிப்புகளாக செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளை அறிய முற்படுவதற்கு முக்கியக் காரணம், பார்கின்சன் மற்றும் அல்சீமர் தொடர்பான நோய்களுக்கு இவை உதவுமே என்பதுதான். மனித மூளையின் எடை 1.4 கி.கி மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை - 100 பில்லியன் உடலின் இருபது சதவீத ஆற்றல் மூளையின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இதுவே மின்தூண்டுதலுக்கு ஆதாரம். ஒரு நியூரானிலிருந்து 70 மில்லிவோல்ட் மின்சாரம் உருவாகிறது. இசிடி சிகிச்சையில் 450 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கடல் உயிரினமான ஈல், இரண்டு மில்லி செகண்டுகளில் 860 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது. நன்றி: க்வார்ட்ஸ்