இடுகைகள்

அங்கதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோபோ, ஸ்மாஷ்வேர்ட் வலைத்தளங்களில் வெளியாகியுள்ள மின்னூல்கள்!

          தூக்குமேடையில் சுருக்குக் கயிறு (Thookumedaiyil surukku kayiru) anbarasu shanmugam and அருளையா தீசன் https://books2read.com/u/bzxgQE ஹரி ஓம் தத் சத் (Hari om dat sat) anbarasu shanmugam and தாய் கண்ணன் https://books2read.com/u/bzxeDj விழித்தெழும் தேசம் (Vizhithelum Desam) anbarasu shanmugam and தென்னன் https://books2read.com/u/m2DoRr

ரோனி சிந்தனைகள் - பொற்கால ஆட்சியை விரும்பாமல் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடும் மக்கள்

படம்
  தொடக்கத்தில் கல்லடி பட்ட நாய் போல ஓரிடத்தில் நுழைபவர்கள்தான் பின்னாளில் போடா மயிரே என்று கூறும் அளவுக்கு தந்திரக்காரர்களாக, ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். முட்டாள்தனத்தை ஒருமுறை நீங்கள் அடையாளம் கொண்டுவிட்டால் போதும். முட்டாள்கள் அப்படியே இருப்பார்கள், முட்டாள்தனம் மட்டுமே வீரியமாக மாறிக்கொண்டே வரும். ஒரு நாட்டை அழிக்க எதிரிகள், உளவுப்படை, கூலிக்கொலைகாரர்கள் எதுவுமே தேவையில்லை. இவை செய்யும் அனைத்தையும் மதமும், மூடநம்பிக்கைகளுமே செய்துவிடும். ஒருவருக்கு சலுகை கொடுப்பது வேறு. அந்த சலுகையை பயன்படுத்துமாறு அவரின் வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது வேறு. வெட்டப்பட்ட கிராப் தலையை சீவ உயர்தர சீப்பு, விற்றுவிட்ட வாட்சிற்காக அழகிய உயரிய உலோக பட்டை என ஓ ஹென்றியின் கதை மனிதர்கள் போலவேதான் அர்த்தமே இல்லாத அவலங்கள் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நடந்து தொலைக்கின்றன. ஆட்டு எலும்பு கடினமோ இல்லையோ, கடித்தே தீருவேன் என்று தின்ற நாய்க்கு கடைவாய் பல் விழுந்துவிட்டது. ஆபீஸ்ல வேலை செய்யறவங்கெல்லாம் எப்படி என்று கேட்டதற்கு, பரவாயில்லைங்க, ஒரு பிகர் தேறும் என்று பதில் சொல்லுவதெல்லாம் விதியல்லாம...

ஸ்பெஷல் சாதா தோசை - புதிய மின்னூல் வெளியீடு

படம்
    ஸ்பெஷல் சாதா தோசை, அங்கத கருத்துக்களைக் கொண்ட மின்னூல். இதில், தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகள், நாளிதழ், இணையத்தில் படிக்கும் பார்க்கும் செய்திகள், அவற்றுக்கு மனதில் தோன்றும் எதிர்வினைகள் அங்கதமாக எழுதப்பட்டுள்ளது.  நூலை அமேசானில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி   https://kdp.amazon.com/amazon-dp-action/in/dualbookshelf.marketplacelink/B0DTDX4SC9

விரைவில்...

படம்
     

ரோனி சிந்தனைகள் - அழிவு தரும் மட்டற்ற மகிழ்ச்சி

படம்
  ரோனி சிந்தனைகள் ஊருக்கு இளைத்தவன் என்பவன் தனது பலவீனத்தை வெளிப்படையாக தெரிவிப்பவனே. அதை வைத்தே அவன் கூறிய நல்ல விஷயங்களைக் கூட சேறு வீசி இழிவுபடுத்தி இன்பம் பெறுகிறவர்கள் உலகில் நிறையப்பேர் உண்டு. ஒருவனை தோற்கடிப்பது என்பது வெளியுலகில் காண்பதைப் போன்ற கைத்தட்டல்களோ, கோஷங்களோ இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பதல்ல. மனதளவில் அவனை எழ முடியாமல் முற்றாக அழித்து கீழே தள்ளுவதுதான். செயல் என்பது வெளியே தெரிவது. அதற்கான சிந்தனை, எண்ணம், கனவு என்பது மனதில் உருவாகி வளர்வது. அக்கனவுகளை உடைத்துவிடவே பலரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த கோட்டைகள் தரைமட்டமாக்கப்படுவது தொடர்வது இதன் காரணமாகத்தான். உருவாக்குவது படிப்படியான ஒரு நிகழ்ச்சி. ஆனால், அழிவு அல்லது சிதைவு என்பது உடனே நடப்பது அதற்கு மக்களின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் கூட அதிகம். ஒருவருக்கு நாயகன் என்பவர் அனைவருக்கும் அதேபோல இருக்கவேண்டுமென்பவதில்லை. அவரவர் கதையில் அவர்கள்தான் நாயகன். வில்லன், துணைப்பாத்திரங்களை நிதானமாக பொருத்திக்கொள்ளலாம். நேர்மை, கைராசி, நம்பிக்கை என்பதெல்லாம் காலம்தோறும் மதிப்பு கூடி வருபவை. ஒரு நல்ல...

ரோனி சிந்தனைகள் - மீண்டும் மீண்டும் திருட்டு

படம்
      ரோனி சிந்தனைகள் விருது கொடுக்க என்னையும் அழைத்திருக்கலாம் என மூத்த வீரர் ஆதங்கப்பட்டிருக்கிறார். விருதின் பெயருக்கு பரவாயில்லை. ஆனால் விருது கொடுக்க எங்கள் நாட்டின் மூத்த வீரரே போதும் என நிர்வாகம் கூறிவிட்டது. கேட்டுப்பெறுவது உரிமையாக இருந்த காலம் இருந்தது. இப்போது அப்படியல்ல. இரத்தலாக மாறிவிட்டது. அரசு விற்கும் மூன்றாந்தர தேயிலைக்கு ஒரே பலம், அதன் பாலிதீன் பாக்கெட்தான். ஆம், அதை வைத்துத்தான் அதை தேயிலைத்தூள் என காலை, மாலை என இருவேளைகளில் மனதில் உருவேற்றிக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து அருந்த வேண்டும். அதிலும் தேயிலை என குறிப்பிடாதபோது, நீங்கள் அதை அருந்துவதையே மறந்துவிடுவீர்கள். மறுக்கவும் வாய்ப்புள்ளது. சகோதரரிடம் அவரது நெருங்கிய நணபர் எனது கண்முன்னே உரையாடினார். பிறகு, இயல்பான தொனியில் குரலை மாற்றிக்கொண்டு அப்புறம் அண்ணனோட கடை எப்படி போகுது என்றார். அதை போனிலேயே கேட்டிருக்கலாமே என கேட்டதற்கு சினம் கொண்டுவிட்டார். இயல்பான கேள்விகளுக்கு நீங்கள் காரண ரீதியாக பதில் அளிக்க கூடாது. அது எப்போதும் தர்ம சங்கடத்திலேயே பகையிலேயே முடியும். காயம்பட்ட வீரனுக்கு கர்ப்...

அவசரகாலத்தையும், அதில் நடைமுறையான குடும்பக்கட்டுப்பாட்டு விவகாரத்தை அங்கதமாக்க முயலும் நாவல்! - 1975 - இரா முருகன்

படம்
  1975 இரா முருகன் கிழக்குப் பதிப்பகம்  pages 449 விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களை நினைவுபடுத்துகிற படைப்பு. அதாவது, நல்ல அவல நகைச்சுவையை படிக்கலாமே என தூண்டுகிற இயல்பு கொண்டது. காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரம், கண்காணிப்பு ஆகியவற்றை அவல நகைச்சுவையாக்கி ஆசிரியர் எழுதியுள்ள நாவல்தான் 1975. இரா முருகன், வங்கிப் பின்னணியைக் கொண்டு எமர்ஜென்சி காலகட்டத்தை பகடி செய்திருக்கிறார். இந்நாவலை கிழக்கு பதிப்பகம் எதற்கு வெளியிட்டிருக்கிறது என்ற காரணத்தை நாம் ஆராய அவசியமே இல்லை. வலதுசாரி பதிப்பகம். அதற்கு உகந்தபடி நாவலின் மையப்பொருளை தேர்ந்தெடுக்கிறது.  இருபத்தொரு மாதங்கள் நீடித்த எமர்ஜென்சியை நினைவூட்டும் விதமாக அதே எண்ணிக்கையில் அத்தியாயங்கள் உள்ளன. சென்னை, திருநெல்வேலி, தில்லி என மூன்று நகரங்களுக்கு கதை நகர்கிறது. அதேபோல பாத்திரங்களும் மாறுகிறார்கள். அனைத்திலும் மாறாத ஒன்று, இருபதம்ச திட்டம். ஐந்து அம்ச கொள்கை, பேச்சைக் குறை. வேலையைச் செய் என்ற வாசகம் ஆகியவைதான்.  நாயகன் சிவசங்கரன் போத்தி வங்கி ஊழியன். அவனுக்கு அரசியலோ, தத்துவமோ, அப்பா வழியில் கூடக்குறைய கற்ற ஆயூர்வேதம் கூட முக்க...

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசி...

நான் கரடியா, மனிதனா? - கரடிக்கே குழப்பம் - பிராங்க் தாஷ்லின் நூல்

படம்
நீ கரடி என்று யார் சொன்னது? - The bear That Wasnot ஃபிராங்க் தாஷ்லின் மொழிபெயர்ப்பு - ஆதி வள்ளியப்பன் தொழில்யுகத்தில் மனிதர்களை எப்படியெல்லாம் கூலி உயர்வு, உழைப்பு உயர்வானது என்று சொல்லி கசக்கிப் பிழிகிறார்கள் என்பதை அங்கதமாக சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர் ஃபிராங்க் தாஷ்லின் எழுதி வரைந்த நூல் இது. கரடி இரை கிடைக்காத பனிக்காலத்தில் தூங்குவதையும், அப்போது காட்டுக்குள் புகும் மனிதர்களை காடுகளை அழித்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களாக்குகிறார்கள். இதன் விளைவாக கரடி இரைக்கு உணவு இன்றி தவித்துப்போகிறது. பின் வேறு வழியின்றி தொழிற்சாலையில் நுழைய, அவர்கள் கரடியையும் வேலையாள் என நம்ப வைத்து வேலை செய்ய வைக்கிறார்கள். உண்மையில் கரடிக்கே ஒரு நிமிடம் நான் ரோம போர்வை போர்த்திய மனிதன்தானோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது. பிரமாதமான கதையை தமிழில் அமெரிக்க நூலின் வடிவமைப்பிலேயே செய்திருக்கிறார்கள். வள்ளியப்பனின் மொழி கதையின் போக்குக்கு பேருதவி செய்கிறது. வடிவமைப்பு குணசேகரன். படிக்க வசதியாக இருக்கிறது. நன்றி -பாலகிருஷ்ணன்

மேட் பத்திரிகை பற்றிய சுவாரசிய தகவல்கள்!

படம்
61 ஆண்டுகளாக உலகில் நடக்கும் சீரியசான விஷயங்களை அங்கதம் செய்த மேட் இதழ் மூடப்படுகிறது. காரணம், டிஜிட்டல் முறையில் மேட் டிவி மில்லினிய மக்களிடையே புகழ்பெற்று வருவதும்,சமூக வலைத்தளங்கள் பத்திரிக்கைகளை விட அதிக பகடியாக விஷயங்களை பகிர்ந்துகொள்வதுமே காரணம். இனி மேட் பத்திரிகையை டிசி காமிக்ஸ் நிறுவனம் கிளாசிக் இதழாக நடத்த உள்ளது. அதாவது, முன்னர் வெளியான இதழ்களின் தொகுப்பாக இருக்கும். ஆல்ஃபிரட் எஃப் நியூமனின் மேட் பத்திரிகை லோகோ, பல் மருத்துவமனை விளம்பரங்களிலிருந்து உருவானது . பின்னாளில் மேட் பத்திரிகையை இந்த லோகோ போட்டாலே, தெரிந்துவிடும்  அளவுக்கு பிரபலமாக்கியது அந்த சிறுவனின் குறுநகை புகைப்படம். ஜான் எஃப் கென்னடி தேர்தலில் போட்டியிட்ட 1960 ஆம் ஆண்டு மேட் இதழ், இரண்டு கவர்களை வெளியிட்டது. ஒன்றில் மேட் சிறுவன், நாம் ஜெயித்துவிட்டோம் என்று கூறுவது போலிருந்தது. உள்பக்கமாக இருந்த கவரில் ரிச்சர்டு நிக்சனுக்கு ஆபீசில் வரவேற்பு கொடுப்பது போல அச்சிட்டிருந்தார்கள். மேட் சிறுவனான ஆல்ஃபிரட்டிற்கு  மோக்சி என்ற பெண் தோழியையும் உருவாக்கினர். சில அட்டைகளை அலங்கரித்த இப்பெண்தோழி வ...