இடுகைகள்

சீனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுதிய வரலாற்றுக் கதையில் குரூர இளவரசனுக்கு மனைவியாக மாறும் எழுத்தாளர்!

படம்
            different princes சீன டிராமா 33 எபிசோடுகள் வரலாற்றுக்கதை எழுதும் இளம்பெண், தொடர்கதையாக இணையத்தில் எழுதி வெளியிட்டுவருகிறார். ஒருநாள் தனது கதையின் இறுதியில், பழிவாங்கும் எண்ணம் கொண்ட இளவரசன், நல்ல இளவரசனையும், அவனது மனைவியையும் அம்பு எய்து கொன்று ஆட்சியைப் பிடிப்பதாக எழுதி கதையை நிறைவு செய்கிறாள். ஆனால், அதை கதையை வாசித்த வாசகர்கள் ஏற்கவில்லை. நல்லவன் இறக்க கூடாது. வில்லன் வெல்வது போல உள்ளது என அறம் சார்ந்த கேள்வியை எழுப்புகிறார்கள். ஆனால், எழுத்தாளரான நாயகி முடியாது. நான் எழுதியபடி வில்லன்தான் வெல்கிறான் என உறுதியாக கூறுகிறாள். கணினி அவளை தொன்மைக் காலத்திற்கு கூட்டிச் செல்கிறது. அங்கு, அவளை தீயசக்தி இளவரசன் மணந்துகொண்டு முதலிரவு அன்றே கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அதிலிருந்து எழுத்தாளர் நாயகி மீண்டு எப்படி தன்னைக் காத்துக்கொண்டு தீயசக்தி இளவரசனை திருத்துகிறாள் என்பதே கதை. இக்கதையை சுருக்கமாக சொன்னால், கதை எழுதும் எழுத்தாளரே அவரது கதையில் ஒரு முக்கிய பாத்திரமாக மாறினால்.. என வைத்துக்கொள்ளலாம். எழுத்தாளருக்கு நல்லவன் கெட்டவன் என பேதம் இல்லை. இரண்டு...

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்ம...