சேரியோ, அக்கிரஹாரமோ மனதில் ஈரம் இருப்பது முக்கியம்! ஆண்டான் அடிமை - இயக்கம் மணிவண்ணன்
ஆண்டான் அடிமை சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உண்ணி இயக்கம் மணிவண்ணன் அக்ரஹாரத்தில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரில் வளர்க்கப்படும் ஒருவர் தனது பெற்றோரைத் தேட முயல்கிறார். இதன் விளைவாக அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை. இயக்குநர் மணிவண்ணன் இடதுசாரி கருத்தியல் கொண்டவர். ஆண்டான் அடிமை வணிகப்படம் என்றாலும் படத்தில் பேசி இருக்கிற அரசியல் நிறையப்பேருக்கு பிடித்தமானது அல்ல. அவரின் ஆஸ்தான நடிகர் சத்யராஜ், படத்தின் கருத்தை சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் குத்துப்பாட்டு, ஆபாசம் எல்லாம் கிடையாது. எடுத்துக்கொண்ட மையப்பொருளை தீவிரமாக பேசியிருக்கிறார்கள். புத்தியிருப்பவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் நிறைய யோசிக்க வைக்கும். சத்யராஜ் படத்தில் இரு வேடங்கள் செய்கிறார். ஒன்று சேரியில் அடிமாடுகளை லாரியில் கொண்டு வந்து சேர்க்கும் லாரி டிரைவர் சிவராமன். இன்னொன்று, சுப்பிரமணிய ஐயரின் மகன், சங்கரன். இரு பாத்திரங்களுமே பல்வேறு உளவியல் சிக்கல்களை, சங்கடங்களை அந்தந்த சாதி அளவில் சந்திக்கிறது. சேரியில் வாழும்போது சத்யராஜ்...