இடுகைகள்

குளிர்பதனப்பெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹெயர் வெற்றிக்கதை!

படம்
  ஹெயர் வெற்றிக்கதை 1949ஆம் ஆண்டு பிறந்தவர் ஸான் ருய்மின். இவர் பிறந்த ஆண்டில்தான் சீனாவில் மக்கள் சீன குடியரசு உருவானது. இவர் வளர்ந்து வந்த காலத்தில்தான் சீனாவில் கலாசார புரட்சி, மிகப்பெரிய முன்னேற்ற பாய்ச்சல் நடவடிக்கைகள் நடைபெற்றன. இவை அவரின் கல்வி, சமூகத்தைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை பாதித்திருக்கலாம்.  ருய்மினுக்கு நிறுவனத்தை நடத்தும் மேலாண்மை திறன் எப்படி வந்தது என ஒருவர் சந்தேகம் கொள்ளலாம். அவருக்கு இந்த வகையில் ஆதர்சம், ஜப்பானிய நூல்கள். ஜப்பானிய மேலாண்மை நூல்களை படித்தே தனது நிர்வாக அறிவை பெருமளவு வளர்த்துக்கொண்டார். அவையெல்லாம் குயிங்டாவோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலைக்கு அரசு அனுப்பி பணியாற்றச் சொன்னபோது பயன்பட்டது. தொடக்கத்தில் அங்கு ருய்மின் சென்றபோது, குளிர்பதனப்பெட்டிகளை தயாரித்தாலும் அதில் நிறைய தவறுகள் இருந்தன. மோசமான வடிவமைப்பு காரணமாக அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்றனர். மக்களுக்கு அதை வாங்கினாலும், குளிர்பதனப்பெட்டி அடிக்கடி பழுதானதால், விரக்தி அடைந்தனர்.  ருய்மின், தொழிலாளர்களிடம் குளிர்பதனப்பெட்டி பற்றி கேட்டார். செய்யும் போது பிழை ஏற்பட்டாலும...