இடுகைகள்

அரசியல்-உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போருக்கு தயாராகுங்கள் என்று ராணுவத்திற்கு அழைப்பு விடுப்பது இயல்பானதுதான்! - டெய்லர் ஃபிராவல்

படம்
போருக்கு தயாராகுங்கள் என்று சீனா சொன்னது இயல்பானதுதான் எம்.டெய்லர் ஃபிராவல் எம்ஐடி பாதுகாப்பு ஆராய்ச்சி, அரசியல் அறிவியல் பேராசிரியர் சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவத்திடம் போருக்கு தயாராகுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே? அவர் கூறிய வார்த்தை ஒன்றும் புதிதல்ல கடந்த ஆண்டும் இதேபோலத்தான் கூறினார். மக்கள் விடுதலை நாளிதழில் இத்தகையை குறிப்புகள் 2018 இல் 1,300 முறையும், 2019 இல் 1,100 முறையும் கூறப்பட்டுள்ளன. ராணுவம் தனது இலக்குகளை நோக்கி முன்னேறச் செய்ய அதன் தலைவர் இப்படி ஊக்கமூட்டுவது வழக்கம்தான். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இதுபோல பேசப்பட்டுள்ளது. சீனா டோக்லம் பகுதி முன்னேற்றத்தின்போது அமைதியாகவே இருந்தது. இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? Add caption 2017  ஆம் ஆண்டு முதலே டோக்லம் பகுதியில் எல்லைப்ப்பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இதில் இந்தியா, சீனாவின் எல்லை மீறலுக்கு பதிலடியாக சீனா, பூடான் எல்லைப்பகுதியில் தன் படைகளை உள்ளே அனுப்பியது. இதனை சீனா தனது இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதியது. அதேசமயம் இந்தியா பூடான் ...

ஆசியாவின் ஒரே தலைவராக தன்னை சீனா நினைத்துக்கொள்கிறது! - ஷ்யாம் சரண்

படம்
ஜிபி ஷ்யாம் சரண், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசின் பாதுகாப்பு போர்டு குழு தலைவராக இருந்தவர் ஷ்யாம் சரண். இவர் மத்திய அரசின் கொள்கை வகுப்பு குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். இந்திய – சீன எல்லையில் திடீரென ஏற்பட்டுள்ள பதற்றம் எதற்காக என்று பேசினார். இந்தியா – சீனா நாடுகளின் எல்லையில் திடீரென சீனா ஆக்ரோஷமாக நடந்துகொள்ள என்ன காரணம்? லடாக்கிலுள்ள பாங்காங் லேக், சிக்கிம் – திபெத் எல்லைக்கோடு அருகிலுள்ள நகு லா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் என்பது புதிதான ஒன்றல்ல. இரு நாடுகளின் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நாம் முறைப்படி விதிகளின்படி தீர்த்துக்கொள்ள முடியும். லடாக்கின் கால்வான் ஆற்றுப்பகுதியில் இதுவரை நாம் சீனாவின் ஆட்சேபங்கள் இன்றி சென்று வந்திருக்கிறோம். தற்போது அப்பகுதியை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள சீனா முயல்கிறது. இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவாக நடந்துகொள்ளும் உலக அரசியலுக்கு சீனாவின் பதிலடியாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்று அமெரிக்கா கூறியதை இந்தியா ஏற்கிறது. மேலும் தைவான் நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனத்தில் அங்கீகாரம் வழங்குவது,...

இஸ்‌ரேல்-இரான் போர்!

படம்
இஸ் ‌ ரேல் - இரான் போர் ! கடந்த பிப்ரவரியில் இஸ் ‌ ரேல் , இரான் நாட்டின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியதிலிருந்து இருநாடுகளுக்குமான பிரச்னை தொடங்கியது . சிரியாவுக்கு ஆதரவாக இரானும் , அரசு படைகளுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ் ‌ ரேலும் ஓரணியில் நின்று போரிட்டு வருகின்றன . இஸ் ‌ ரேல் 20 விமானங்களிலிருந்து 70 ஏவுகணைகளை சிரியா மீது வீசியுள்ளதை ரஷ்யா அரசு உறுதி செய்துள்ளது . தற்காப்புக்காக இஸ் ‌ ரேல் இதனை செய்துள்ளது என அமெரிக்க அரசு கூறியுள்ளது . இஸ் ‌ ரேலின் தாக்குதலில் சிரியா அரசுப்படையைச் சேர்ந்த 23 வீரர்கள் பலியானார்கள் என்கிறது சிரியா மனித உரிமைகள் அமைப்பு .   1973 ஆம் ஆண்டு யோம் கிப்புர் போருக்கு பிறகு இஸ் ‌ ரேல் சிரியா மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ள இரண்டாம் நிகழ்வு இது . இரானும் அமெரிக்காவும் 2015 ஆம் ஆண்டு செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப் . இதன்விளைவாக இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகளை கொண்டு வர அதிக வா...