இடுகைகள்

இந்திராகாந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியவரலாறு - காந்திக்கு பிறகான காலகட்டம்

இந்த நூலை காங்.கின் வீழ்ச்சி பற்றிய வரலாறு அல்லது பார்ப்பன பாசிச கட்சியின் வரலாறு என்றும் கூறலாம். இனப்படுகொலை என தில்லி சீக்கியர்கள் படுகொலை -ராஜிவ் காந்தி மற்றும் முஸ்லீம் படுகொலை - நடப்பு பாசிச இயக்க இந்திய ஆட்சித்தலைவர் என துணிச்சலாக எழுதி உள்ளார். அடிப்படையில் இந்திராகாந்தி பற்றிய சம்பவங்களே அதிகம். வட இந்தியாவையே முழுக்க மையப்படுத்தி உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் சாரதி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
   நீரளவே ஆகுமாம் நீராம்பல் இந்திராகாந்தி உரைச்சுருக்கம் அன்பரசு சண்முகம் நூலை வாசிக்க https://www.amazon.in/dp/B0FTZ12X2H

இந்திராகாந்தி சொன்னவை....

படம்
 இந்திராகாந்தி சொன்னவை.... 1.சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. 2.இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. 3.மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள்.  4.நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். 5.வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும்.  6. கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். 7.அடிப்படை தொ...

நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை

படம்
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது. 1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்...

போபால் விஷக்கசிவு சம்பவத்தில் அரசியலை மட்டுமே அதிகம் கூறும் நூல்!

படம்
 போபால் அழிவின் அரசியல் மருதன் கிழக்குப் பதிப்பகம் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. இங்கு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த விஷவாயு கசிவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த விஷ வாயு பாதிப்பு நிலம், நீர், காற்று என்ற பரவி இன்றுவரை மக்களை வதைத்து வருகிறது.  நூலில் அக்காலகட்ட காங்கிரஸ் கட்சி அரசியல், அதிலுள்ள தலைவர்களின் நிலைப்பாடு, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரையில் கறைபடிந்தவர்கள் என நிறுவ முயல்கிறார் நூலாசிரியர்.   ராகுல் என்ற பாத்திரம், இந்திராகாந்தியின் மரணத்திற்கு பழிவாங்கவேண்டும் என்று கூறுகிறது. யார் இந்த ராகுல்  என புரியவில்லை. நூலை வாசிக்கும்போது நிறைய இடங்களில் இது புனைவா, கட்டுரையா என்று குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது.  நூலாசிரியர், கட்டுரைகளை எழுதுவதில் திறமையானவர். ஆனால், புனைவில் எப்படியோ தெரியவில்லை. இந்த நூலில் புனைவை முயன்றிருக்கிறார். அது எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை.  பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரத்ன நடார், அவரது பிள்ளை பத்மினி வழியாக கதை சொல்லப்படுகிறது. இரண்ட...

மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி

படம்
        மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகனின் விருப்பமான கார் மாருதி 800. பிஎம்டபிள்யூவைத் தாண்டி மாருதி காரையே முன்னாள் பிரதமர் நம்பினார். மக்களின் காரான மாருதி 800 ஐ உருவாக்கி சாலைகளில் ஓடவைத்த ஒசாமு டிசம்பர் 25 ஆம் தேதி மறைந்தார். 1930ஆம் ஆண்டு பிறந்தவருக்கு ஒசாமு மட்சுடா என்பதான் வைக்கப்பட்ட பெயர். பின்னாளில் சுசுகி மோட்டார் கார்ப் நிறுவன குடும்பத்தில் பெண் எடுத்த காரணமாக ஒசாமு மட்சுடா மாறி ஒசாமு சுசுகி என்றானது. இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்ததே ஒசாமுவின் துணிச்சலான குணத்திற்கு சான்று. அப்போது கார்களின் சந்தையே நாற்பதாயிரம் கார்கள் என்றுதான் நிலை இருந்தது. பதினான்காயிரம் பேர்களில் ஒருவர் காரை வாங்கிப் பயன்படுத்தி வந்தார். அன்றைய காங்கிரஸ் அரசு, மாருதி என்ற நிறுவனத்தை தொடங்கி சுசுகியுடன் கைகோர்த்து கார் ஒன்றை உருவாக்க முனைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் ஆர்சி பார்க்கவா, வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். அன்றைய சூழலில் ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு வாகனமாக சுசுகி தடுமாறிக்கொண்டிருந்தது.  ...

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

படம்
  குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார்.  இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது.  இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங...

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள்...

75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுத்துறை நிறுவனம்!

படம்
  75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுநிறுவனம்! 1920ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு இயங்கியது.  1981ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பிரிட்டிஷ்  இந்தியா கார்ப்பரேஷனை தேசியமயமாக்கி உத்தரவிட்டார்.  1991ஆம் ஆண்டு, பிஐசிஎல் நிறுவனம் நலிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.  2001ஆம் ஆண்டு மத்திய அரசு, பிஐசிஎல் நிறுவனத்தை பல்வேறு சீர்திருத்தங்களால் மீட்க முடியவில்லை என்று அறிவித்தது.  2017ஆம் ஆண்டு, நிதி ஆயோக் அமைப்பு, நிறுவனத்தை மூடிவிடலாம் என ஆலோசனை தெரிவித்தது.  உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிவப்பு நிற கட்டிடத்தில் அமைந்திருந்த பிஐசிஎல் நிறுவனம், லால் இம்லி என்ற பிராண்டில் செல்லமாக அழைக்கப்பட்டது. கம்பளி தொடர்பான பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தது.  இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால், மான்செஸ்டர் ஆப் ஈஸ்ட் என வழங்கப்பட்டது.  சிறப்பெல்லாம் பழைய கதை. இப்போது நிறுவனத்தை மூடப்போகிறார்கள்.  தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் (NTC) என்ற நிறுவனத்தையும் பி...

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிக...

சீக்கியர்களை கொன்ற சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்தேன்! - எழுத்தாளர் எம் முகுந்தன்

படம்
        எழுத்தாளர் எம் . முகுந்தன்   நேர்காணல் எம் . முகுந்தன் டைம்ஸ் ஆப் இந்தியா கே பி சாய் கிரண்   பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்ற டெல்லி வந்தவர் , அந்த நகரைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார் . டெல்லி எ சாலோக்யூ என்ற நூலை எழுதி நடப்பு ஆண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதை வென்றுள்ளார் . நீங்கள் டெல்லி பற்றி டெல்லி , டெல்லி 1981, டெல்லி என சாலிக்யூ என்ற நூல்களை எழுதியுள்ளீர்கள் . நீங்கள் வெளியிலிருந்து வந்து டெல்லியில் குடியேறி வெகு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறீர்கள் . உங்கள் பார்வையில் டெல்லியைப் பற்றிய கருத்து என்ன ? அறுபதுகளில் நான் டெல்லிக்கு வந்துவிட்டேன் . அடுத்த நாற்பது ஆண்டுகளில் நகரம் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது . இதனை நான் வெளிப்புற தன்மையில் மட்டும் கூறவில்லை . கலாசாரம் சார்ந்தும் பேசுகிறேன் . அன்றைய காலத்தில் நகரமாக இருப்பதை விட பல்வேறு கிராமங்களின் இணைப்பு புள்ளியாகவே நகரம் இருந்தது . முபாரக்பூரில் கோதுமையும் காலிப்ளவரும் ஏராளமாக விளைந்து வந்த்து . எருமைகளும் இங்கே சாலைகளில் ஏராளமாக உலவி வரும் . இப்போது டெல்லியி...

சாதனைப் பெண்கள்- ஆட்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களித்த பெண்கள்

படம்
        மரியா க்யுட்டெரா டி ஜீசஸ் பிரேசில் நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த துணிச்சல் நாயகி மரியா , அவருடைய அப்பாவின் பண்ணையில்தான் வளர்க்கப்பட்டார் . இதனால் அவருக்கு குதிரை சவாரி , விலங்குகளை வேட்டையாடுவது எளிதாக கைவரப்பெற்றது . மேலும் ஆயுதப்பயிற்சியும் எடுத்தார் . பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் . இப்போராட்டம் 1822 – 1824 ஆம் ஆண்டு நடைபெற்றது . அன்றைய காலத்தில் ராணுவத்தில் இணைந்து போரிட்ட முதல் பெண் இவர்தான் . போர்ச்சூகீசியர்களுக்கு எதிராக போரிட்டவர் , அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடித்து துணிச்சலாக தாக்கினார் . இவரை பிரேசிலின் ஜோன் ஆப் ஆர்க் என்று அழைத்தனர் . ஆண்களைப்போலவே ஆடை அணிவது இவரது பாணி . இவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் ராணுவத்தில் மரியா பெயரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது . ராணுவ சேவைக்காக இம்பீரியல் ஆர்டர் எனும் விருது வழங்கப்பட்டது . 1825 ஆம் ஆண்டு பிரிட்டன் , போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளும் இணைந்து பிரேசிலுக்கு சுதந்திரத்தை வழங்கின . 2   டோலரெஸ் இபாருரி சமூக ...

மாருதி 800 கார் உருவாக்கம் சஞ்சய் காந்தியின் கனவா? இந்தியா 75

படம்
  இந்திய அரசு, 1950களில் மக்களுக்கான சிறிய காரை உருவாக்க வேண்டும் என நினைத்தது. ஆனால் அப்போது நிறைய விதிமுறைகள் இருந்ததால் ஐடியாக்கள் காகிதங்களோடு அப்படியே மூடி வைக்கப்பட்டன. கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவேண்டும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒன்றாக இணையவேண்டும் என்ற சூழல் இருந்தது.  அரசு, தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து கார் தயாரிப்புக்கான உரிமங்களை தருகிறோம் என்று கூறியது. இதற்கு பதினெட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெல்கோ என்ற நிறுவனம் முக்கியமானது. இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் அது.  ஆனால் சஞ்சய் காந்திக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தவரை கார்களின் தயாரிப்பு அவரது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென நினைத்தார். வெளிநாட்டில் இருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் படித்தார் என்று கூறப்பட்டது. பின்னாளில் அந்நிறுவனம், இயந்திர பொறியியலில் சஞ்சய்க்கு குறைந்த திறமையே இருந்தது. அவருக்கு அதைக் குறிப்பிட்டுத்தான் சான்றிதழ் வழங்கினோம் என்று கூறியது.  பழைய டெல்லி அருகே வாடகைக்கு காரேஜ் ஒன்றை சஞ...

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமான நடுத்தர வர்க்க கனவு! - இந்தியா 75

படம்
  இந்தியாவில் தொண்ணூறுகளில்தான் தாராளமயமாக்கல் தொடங்கியது என்று கூறுகிறார்கள். உண்மையில் இதற்கான முன்னேற்பாடுகள் 1980களிலேயே தொடங்கிவிட்டன. இதனை தொடங்கியவர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும்படியான காரை தயாரிக்க விரும்பினார். இப்படித்தான் மாருதி உத்யோக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மாருதி சுசுகியாக மாறிவிட்டது.  சஞ்சய் காந்தியின் கனவு இன்று நிஜமானாலும் கூட அதைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இல்லை. 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்துவிட்டார். இந்திய அரசு ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மாருதி காரைத் தயாரித்தது.  ஹர்பால்சிங் தனது காருடன்.. கார் எளிமையாக இருக்கவேண்டும். விலையும் பாக்கெட்டை ஓட்டையாக்காமல் இருந்தால் நல்லது என்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினார்கள். டெல்லியில் அதன் விலை 52, 500ஆக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய முன்பதிவு விறுவிறுவென பிரமாதமாக இருந்தது. 1.35 லட்சம் பேர் மாருதியை வாங்க ஆர்வமாக இருந்தனர். தயாரிக்கப்பட்ட கார்கள் அதே ...

வன்முறையும் பயமும் எனது வாழ்க்கை முழுக்க இருந்தது! - எழுத்தாளர் அர்ஜூன் ராஜ் கெய்ன்

படம்
  அர்ஜூன் ராஜ் கெய்ன்ட் எழுத்தாளர்  இந்தியாவின் முக்கியமான காமிக்ஸ் எழுத்தாளராக உங்களை அமெரிக்க பிரசுரமான பாய்சன்டு பிரஸ் கூறியுள்ளது. நீங்கள் அனாட்டமி ஆப் ஸ்கேர்ஸ் நூலை எழுதுவதற்கு என்ன காரணம்? இந்த நூலை நான் எனது 26 வயதில் எழுதினேன். அப்போது எனக்கு இந்தியர்கள் வெளிநாட்டில் இருப்பதால், தங்களது தாய்நாடு பற்றி தோன்றும் எண்ணம் இப்படித்தான் நூலாக வரும் என்று  தோன்றியது. இதனை தொடக்கமும் , முடிவும் என்று நினைத்து எழுதினேன். இதனை பிரசுரிக்க பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அந்த எண்ணம் எளிதாக நடக்கவில்லை. பெங்குவின் இந்தியா எனது நூலை பிரசுரிக்க ஏற்றது. காமிக்ஸ்களை எழுதுவதும், மகாராஜா சிக்கந்தர் பற்றிய கதையும் மெல்ல வலிமை வாய்ந்ததாக மாறியது.  இந்திராகாந்தி இறந்தபோது நிலைமை எப்படியிருந்தது? அப்போது நானும் அப்பாவும் டெல்லியில் ஜிம்கானா கிளப்பில் இருந்தோம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் ஓடி வந்து எல்லோரும் கிளப்புங்கள் உடனே உடனே என அவசரப்படுத்தினார்.  அப்பாவுக்கு அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட அவரை சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது....