இடுகைகள்

சாமியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸிசோபெரெனியா நோயாளியை சாமியார் என நினைத்து வணங்கி வந்த காஷ்மீர் கிராம மக்கள்!

படம்
          ஸிசோபெரெனியா சாமியார்! மனநிலை பாதித்து பித்து நிலையில் அழுக்கு உடையில் திரிபரவர்களைக் கூட மக்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் போகிறபோக்கில் கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் தின்றுவிட்டு வீசி எறியும் குவளைகளைக்கூட தெய்வ பிரசாதமாக ஏற்கிறார்கள். உண்மையில் இங்கு யாருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இந்த லட்சணத்தில் மதவாதிகள், தெலுங்கு ஆட்களை வைத்து நாத்திகர்கள், ஆத்திகர்களைக் கொல்கிறார்கள் என கருத்தூசி படங்களை வேறு எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டம்தான். இந்தியாவில் வாழ்வதும், மக்களைப் புரிந்துகொள்வதும் மிக கடினமான செயல்களில் ஒன்று. இப்போது ஒரு கதையைப் பார்ப்போம். இந்த பாபாவின் பெயர் லாசே பாப். இவர் காஷ்மீரில் உள்ள குப்வாரா சோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரபான காஷ்மீரிகளின் வீடுகளைப் போலவே பெரிய முற்றம், வராண்டா கொண்ட வீட்டில் வசிக்கிறார். பாப் என அழைக்கப்படும் சொல்லுக்கு துறவி என்று பொருள். மேலே சொன்னது, அவரது பட்டப்பெயர். நிஜப்பெயர் குலாம் ரசூல். இந்த சாமியார் அவரது அக்கா வீட்டில் அமர்ந்து மக்களின் பிரச...

தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

படம்
  கல்யாண சௌகாந்திகம் மலையாளம்  திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார் முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் ...