இடுகைகள்

மினிமலிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வில் பொருட்களின் நுகர்வைக் குறைத்து முழுமையாக வாழ்வதை கற்றுத்தரும் நூல்!

படம்
  Goodbye, Things Fumio Sasaki குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் ஃபிமியோ சசாகி கட்டுரை நூல் பெங்குவின்  சசாகி, நலிந்து வரும் பதிப்புத்துறையில் வேலை செய்கிறார். அதற்காக கற்றது தமிழ் நாயகன் போல இரண்டாயிரம், நான்காயிரம் என சம்பளம் வாங்கவில்லை. வீட்டில் பெரிய டிவி, இசைக்கருவிகள், நூற்றுக்கணக்கான நூல்கள், இசை கேட்கும் கருவிகள் வைத்து இருக்கிறார். ஏராளமான பொருட்களையும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.  பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் அதில் சந்தோஷம் குறைவதை மெல்ல உணர்கிறார். அதன்பொருட்டு, பொருள் சார்ந்து வாழ்க்கை இருப்பதை அறிந்துகொள்கிறார். மெல்ல வீட்டிலுள்ள பொருட்களை குறைக்கத் தொடங்குகிறார். குறைந்த பொருட்களில் நிறைவு என்பதே நூலின் அடிப்படை மையப்பொருள்.  வாழ்க்கையை பயணங்கள், நண்பர்கள், புதிய அனுபவங்களை தேடுவது என அமைத்துக்கொள்கிறார். மினிமலிசம் என்பதை பலரும் புரிந்துகொள்ள கஷ்டப்படக்கூடும். ஆப்பிள் போன் பார்த்திருக்கிறீர்கள். வட்டவடிவில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கும். அந்த போன் வந்த காலத்தில் பலரும் ஏகப்பட்ட பட்டன்களை போனில் வைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அத...

சிறந்த வடிவமைப்பாளர் 2022 - அல்ஃபோன்சோ அல்பைசா - நிஸான்

படம்
  அல்ஃபோன்சோ அல்பைசா, வடிவமைப்பாளர், நிஸான் கார்களின் வடிவமைப்பு துறை என்பது முக்கியமானது. அதில் வடிவமைப்பாளராக சாதனை படைத்து வருபவர், அல்ஃபோன்சோ அல்பைசா. இவர், நிஸான் நிறுவனத்தின் குளோபல் டிசைன் குழுவின் துணை தலைவராக பதவி வகிக்கிறார்.  ஜப்பானின் மா எனும் மினிமலிச வடிவத்தை பின்பற்றி கார்களை வடிவமைத்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடந்த இருபது மாதங்களில் மின்வாகனங்கள் முதல் பிற வாகன மாடல்கள் வரை அனைத்து வாகனங்களின் வடிவமைப்பும் அல்ஃபோன்சாவின் கைவண்ணத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆரியா முதல்  இசட் எனும் கார் வரை இப்படி கூறலாம். தி ரோக், பாத் ஃபைண்டர், ஃபிரண்டியர் ஆகிய கார்களின் வடிவமைப்பும் மேம்பட்டு வருகிறது. இதற்காகத்தான் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்பாளர் அங்கீகாரம் பெற்றுள்ளார்.  இசையில் கைத்தட்டுகளுக்கு இடையில் வரும் மௌனத்தைத்தான் மா என்று குறிப்பிடுவார்கள். இது வெறுமை அல்ல, ஒருவகையான அழுத்தம் எனலாம். இதனை குறிப்பிட்ட இசை அலைகள் என்றும் கூறலாம். நாங்கள் நிசான் கார்களின் வடிவமைப்பை இந்த தன்மையுடன் தான் வடிவமைக்கிறோம். சில குறிப்பிட்ட விஷயங்களை வைத்தே வ...