அதிகாரத்தை, பலவந்தத்தை அழிப்பதன் மூலம் உருவாக்கும் மாற்றங்கள்!
ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது. மக்களின் ஆதரவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த புரட்சி என்பது மக்களுக்கு பெரிய நியாயத்தை செய்துவிடாது. ரஷ்ய நிலத்தில் ஏராளாமான புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை எப்படி தோற்றுப்போயின என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிகள். அதற்கு பிறகு மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அதிகாரத்தை ருசிப்பதில் தங்களுக்குள் அடித்துக்கொண்டன. இதனால் அவர்கள் பெற்ற வெற்றியை எதிரிகளுக்கு தாரை வார்த்தனர். ஒரு நாட்டிற்கு அடிப்படையானது உணவு. மக்களின் ஆதரவோடு வென்றவர், திடீரென சர்வாதிகார பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கினால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியைப் பெற முடியாது. வெற்று சட்டங்கள் தொழில்துறையை இயங்க வைக்காது. உள்நாட்டு உற்பத்தி அதிகம் என்ற கூவல்கள், பசியோடு காயும் மக்களுக்கு வயிறார சோறு இட்டுவிடாது. அதற்கு சிந்தனை, செயல்திட்டம் என இரண்டும் தேவை. அரசின் வானொலி, நாளிதழ் விளம்பரங்கள், அறைகூவல்கள், கைக்கூலி ஊடகங்கள் சேர்ந்து உழைத்தாலும் கூட நாட்டை முன்னேற்ற ஆக்கப்பூர்வ செயல்திட்டம் தேவை, மக்களைப் பற்றி புரிந்துகொள்ள...