இடுகைகள்

அம்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன?

படம்
    அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன? ஒரு குழந்தையை தாதி ஒருவர் வளர்க்கிறார் என்றால், அக்குழந்தைக்கு பெற்ற தாயை விட தாதி மீது மாறாத ஈர்ப்பு, பிணைப்பு உருவாகும். இதை உளவியல் பள்ளிகளில் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். தொடக்க காலத்தில் இக்கொள்கையை ஏற்கவில்லை. தொடர்பு கொள்கை, ஒருவரின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கொள்கையை உளவியலாளர் ஜான் பௌல்பை உருவாக்கினார். இதுதொடர்பாக அட்டாச்மென்ட் அண்ட் லாஸ் என்ற நூலை எழுதினார். இதை விரிவாக்கியவர் மேரி அன்ஸ்வொர்த். ஜான் பௌல்பையின் தொடர்பு கொள்கையை விளக்கி கூற முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயின் பாதுகாப்பு தொடக்க ஆண்டுகளில் தேவை. குழந்தை பயப்படும்போது, தாயிடமிருந்து பிரிக்கப்படும்போது பாதுகாப்பு உணர்வை இழக்கிறது. உடனே அழுது தாயின் அணைப்பை கதகதப்பை உணர துடிக்கிறது. இந்த சூழலில் தாய் இல்லை என்றால் குழந்தையின் மனநிலை சோகத்திற்குள்ளாகிறது. மன அழுத்தம் உருவாகிறது. மூன்று மாதம் தொடங்கி, ஓராண்டு வரை பாதுகாப்பு தொடர்பான உணர்வு தீவிரமாக இயங்குகிறது. எட்வர்ட் ஓ வில்சன் யார்? சோசியோபயாலஜி துறையை உருவாக்கிய தந்த...

அப்பாவின் மீது மகனுக்கு உருவாகும் கொலைவெறி!

படம்
    உளவியல் மிஸ்டர் ரோனி ஓடிபல் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அம்மா மீது ஏற்படும் ஈர்ப்பு எனலாம். சிக்மண்ட் பிராய்ட் இந்த கோட்பாட்டை உருவாக்கினார். இதற்கு சொந்த வாழ்க்கையிலேயே உதாரணம் இருந்தது. அவரின் பெற்றோர் இருபது ஆண்டுகள் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். அம்மாவிற்கு சிக்மண்ட் முதல் பிள்ளை. அந்த பாசம், ஈர்ப்பு அம்மா, மகன் இருவருக்கும் இடையே தீவிரமாக இருந்தது. அம்மா, 95 வயதில் காலமானார். மகன் சிக்மண்ட் அதற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இறந்தார். ஓடிபல் காலகட்டம் என்பதையும் அவர் வரையறுத்து கூறினார். நான்கு முதல் ஏழுவயது வரையிலான காலகட்டத்தில் மகனுக்கு தாய்மீது அதிக ஈர்ப்பு உருவாகிறது. இந்த எந்தளவுக்கு செல்கிறது என்றால், அப்பாவை எதிரியாக கருதி கொல்லவேண்டும் என்ற அளவுக்கு... அந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டால் அவர்களது இளமைக்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். மகனின் கோபத்தை அப்பாவின் பலம் கட்டுப்படுத்துகிறது. பிறகு மகன் அக்காலகட்டத்தை கடந்தால் வளர்ந்து அவனுக்கென்று மனைவியைத் தேடி குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் மனதில் இருந்த கோபம், அவனது மகனது மனதிற்கு குடியேறுகிறது. கார்ல் ...

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்...

அண்டர்கவர் ஏஜென்டாக இருந்து காணாமல் போன அம்மாவைக் கண்டுபிடிக்க செல்லும் மகனின் கதை!

படம்
  சேஸ் தி ட்ரூத்  24 எபிசோடுகள் சீன டிராமா நாயகன் போலீஸ் அதிகாரி. அவனது அம்மா, சிறுவயதிலேயே வடமேற்கு ஓநாய் குழுவைப் பிடிக்க அதில் இடம்பிடித்தவர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான தொடர்பு காவல்துறையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. அவர் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா, காவல்துறைக்கு துரோகம் செய்துவிட்டாரா என பல கணிப்புகள் நிலவுகின்றன. நாயகன், தனது அம்மாவைத் தேடி வடமேற்கு ஓநாய் குழுவைத் தேடி கிளம்புகிறான். இதில் அவன் சந்திக்கும் சவால்களே கதை.  இந்த தொடரின் பலம், சண்டைக்காட்சிகளும், உணர்ச்சிகரமான பாசம் தொடர்பான உரையாடல்களும்தான். அதுதான் தொடரை பார்க்க வைக்கிறது. சுவாரசியமானதாக மாற்றுகிறது.  தொடர் நெடுக ஓநாய்களின் ஓவியங்கள், அதன் பொம்மைகள், கிராபிக்சில் ஓடிவரும் ஓநாய்கள் என பார்க்க அழகாக இருக்கிறது. மனிதர்கள் நகருவது போலவே கேமராவும் ஹான்பெய், காலிசா, பாலைவனம், மலைதொடர்கள் என நகர்கிறது. கதையின் வழியாக அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. காவல்துறைக்கும், வடமேற்கு ஓநாய் குழுவுக்கும் நடைபெறும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் இறுதிப்பகுதியில் வடமேற்கு ஓநாய் க...

அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

படம்
  1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார்.  ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல...

சீரியல் கொலைகாரரான அப்பாவை போலீசில் பிடித்துக்கொடுத்த மகள்!

படம்
  அப்பா, தொடர் கொலைகாரர். தன்னை வெளி உலகில் நல்லவராக காட்டிக்கொண்டு கொலைகளை மறைவாக செய்துவருகிறார். இதை மகள் ஏப்ரல் மெதுவாகத்தான் சந்தேகம் வந்து விசாரணை செய்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட ஐந்துபேர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். ஆனாலும் நீதியுணர்வும், குற்றவுணர்ச்சியும் அவரை துன்புறுத்த தானாகவே சென்று காவல்துறையில் தந்தை எட்வர்ட்ஸ் பற்றி புகார் கொடுக்கிறார்.  காவல்துறையும் முப்பது ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை. ஏப்ரல் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் எட்வர்ட்ஸை பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சிறையில் இறந்துவிட்டார்.  இந்த கொலை வழக்கை சற்று விரிவாக பார்ப்போம்.  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வாட்டர்டவுன் நகரம். அப்போது ஏப்ரலுக்கு ஏழு வயது இருக்கும். அவருக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் உண்டு. ஒருநாள் இரவில், அவரது அப்பா, சீக்கிரமாக கிளம்பவேண்டும் என ஏப்ரலை எழுப்புகிறார். கனசரக்கு வண்டி ஓட்டுநரான எட...

அம்மாவால் வல்லுறவு கொலையாளியான மகனின் கதை!

படம்
  லூகாஸ், ஹென்றி லீ அம்மாக்களைப் பற்றிய கதைகள், சினிமாக்கள் நிறைய பார்த்திருப்பவர்களுக்கு லூகாஸின் கதை பிடித்தமானதாக இருக்காது. அப்படியொரு அம்மாவாக பூமியில் வாழ்ந்தவர். குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் கடைசியாக பிறந்து அம்மாவின் அனைத்து வெறுப்பையும் பெற்றவர் லூகாஸ். அதற்கு பதிலடியாக மொத்த சமூகத்தையும் பழிதீர்த்தார். அப்பா, ஆண்டர்சன்   மதுபானத்தை தயாரிப்பதே வேலை. வேலை முடிந்ததும்   தயாரித்த மதுவை குடித்துவிட்டு தெருவில் படுத்து உருள்வார். அம்மா, வயோலா மதுவை விற்று காசு சேர்ப்பதும், சீசனுக்கு விபச்சாரம் செய்வதும் வேலை. அவர் தன் கணவனையும், மகனையும் பழிவாங்குவதற்கு இருவரையும் தான் செக்ஸ் வைத்துக்கொள்ளும் அறையில் இருக்க வைப்பார். அதுதானே சிறந்த பழிவாங்கல். லூகாஸ் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான். அவருக்கு, பெண்கள் உடையை அணிவித்துஅனுப்பினாள் வயோலா. காலில் ஷூக்கள் இல்லை. அதை ஆசிரியர் வாங்கிக் கொடுத்தார்.’’ எதற்கு அன்பளிப்புகளை வாங்கினாய்?’’ என அம்மா அடிக்காத அடி கிடையாது. லூகாஸ் ஆசையாக பூனை வளர்த்தால், அதை கொன்று தெருவில் வீசுவது அம்மா வயோலாவுக்கு பிடித்தமானது. ம...

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப...

பெண்களைக் கொன்று தோலை உரித்து அறைக்கலன்களை உருவாக்கிய வினோதன் - எட்வர்ட்

படம்
  1957ஆம் ஆண்டு அமெரிக்க காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான வழக்கை சந்தித்தனர். அவர்கள் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக வசதியான மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றனர். சென்ற இடம் ஒரு பண்ணை வீடு. 195 ஏக்கர் பரப்பு. அங்கு விசாரிக்க சென்றபோது செல்வந்தர் எட்வர்ட் கெயின் அங்கு இல்லை. ஆள் இல்லையே சுற்றுப்புறத்ததை பார்ப்போம் என காவல்துறை அதிகாரிகள் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தனர். சமையல் அறையில் ஏதோ ஒரு பெண் தலைகீழாக இருப்பது போல தெரிந்தது. என்னடா இது இப்படியெல்லாம் சீன பொம்மைகள் வந்துவிட்டனவா என்று பாரத்த காவலர்கள் மிரண்டனர். உண்மையில் ஒரு பெண்ணை தலையை மட்டும் வெட்டி முண்டத்தை தலைகீழாக எட்வர்ட் தொங்கவிட்டிருந்தார். இதுதான் டீசர். அப்படி இறந்த பெண்மணி பெர்னிஸ் வார்டன் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மேரி ஹோகன் என இருவரில் ஒருவர் என காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர். பிறகு வீட்டுக்குள் உள் அறைகளை எட்டிப் பார்த்தனர். வினோதமான நெடி மூக்கை வருடியது. நாற்காலிகளுக்கான குஷன் மனித தோலால் செய்யப்பட்டது. ஒரு சிறு பெட்டியில் பெண்குறி அறுத்து பதப்படுத்தப்பட்டிருந்தது.   குடல்களை குளிர்பதனப் ப...

கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

படம்
  ஒகே ஒக்க ஜீவிதம் தெலுங்கு சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி இயக்கம் - ஶ்ரீகார்த்திக்   நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை. படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா? 2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம். ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆத...

உடலைத் தாண்டி மூளைக்குள்ளும் செல்லும் வெப்பம்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  14.4.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? திருமண வேலைகளை நிறைவு செய்திருப்பீர்கள். நான் இன்று எனது அறைத்தோழர் மெய்யருள் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னேன். தினகரனில் வேலை செய்தபோது கே.கே.நகரில் அறையில் தங்க வைத்து உதவினார். ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்தநாள் வேறு. இப்போது நாடெங்கும் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.  தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை. அறையில் உட்கார்ந்து 2 அறிவியல் நேர்காணல்களை எழுதினேன். வெயில் உடல்சோர்வை எளிதாக உருவாக்கிவிடுகிறது. மதியம் கடும் வெக்கை. படுத்து தூங்கிவிட்டேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. பக்கத்து அறைவாசி, பட்டைசாதம் ஒரு பாக்கெட் கொடுத்தார். அதுவே மதியச்சோறு. பால் பொருட்கள் சேர்க்க கூடாது என சித்த மருத்துவர் ரெஜூநாத் முன்னரே எச்சரித்தார். அதிகரிக்கும் வெப்பம் காரணமாக நான் தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளேன். வேறுவழி தெரியவில்லை.  அம்மா இன்று குலதெய்வ கோவிலுக்குச் சென்று வந்ததாக சொன்னாள். அவளது நம்பிக்கை அவளுக்கு உள்ளது. பயணம் மனதுக்கு ஆறுதல் தரும். சென்றவாரம் விகடனில் வந்த நீரதிகாரம் முன்கதை சுருக...

மனதைக் காப்பாற்றும் வாசிப்பும் எழுத்தும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.3.2022 மயிலாப்பூர் அன்புக்குரிய கதிரவனுக்கு, வணக்கம்.  எப்படி இருக்கிறீர்கள்? தேர்தல் கால பணி செய்திகள் முடிவுக்கு வந்திருக்கும். சென்னையில் வெயில் தாக்கம் மெல்ல கூடி வருகிறது. எனது அறையில் அனல் வீசுகிறது. இரவு உறங்குவது கடினமாகி வருகிறது. காய்ச்சல் வந்தவரின உடல் போல வேர்த்துக் கொட்டுகிறது.ஏறிய வெப்பம் ஏறியதுதான்.  கடும் வெயில் நடுக்கும் குளிர் என இனி வாழ்க்கை நடக்கும். ஐஐடிஎம் பற்றிய செய்தி ஒன்று எழுதினேன். தாய் நாளிதழில் தாறுமாறு ஆபரேஷன் செய்ததில் செய்தி ஏதும் விளங்கவில்லை.  நான் எழுதிய அமைச்சர் பற்றிய ஒற்றைக் குறிப்பு, எடிட்டர் என்மீது கோபப்பட அத்தனை வாய்ப்புகளையும் தந்தது.  சந்தேகம் வந்தால் இனி எழுதாதே என்று சொல்லிவிட்டார்.  இந்த மாதம் நாளிதழ் வேலைகள் முடிந்தவுடன் ஊருக்குப் போக வேண்டும். பார்ப்போம் திட்டம் எந்தளவு சாத்தியமாகிறது என்று...தற்போதைக்கு எழுதுவதும், வாசிப்பதும், தேநீர் குடிப்பதும் பெரிய விடுதலையாக இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை சந்திக்காத புதிய மனிதர்களைச் சந்திப்பேன் என நினைக்கிறேன்.  பன்பட்டர்ஜாம் என்ற கட்டுரை நூலை எழுதிவருகிறேன்...

தனியே தன்னந்தனியே.... கடிதங்கள் - கதிரவன்

படம்
  28.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  எப்படி இருக்கிறீர்கள்? நான் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களை இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் சுப்ரதோ பக்ஷியை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி வெளியேறிவிட்டார். அதாவது, வேறு உயர்ந்த சம்பளம் கொண்ட வேலைக்குப் போகிறார். நான் அவருடன் சில மாதங்களாக பேசுவதில்லை. இறுதியாக இன்று வாழ்த்துச் செய்தி மட்டுமே அனுப்பினேன். நான் ஆபீசில் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியவர் அவர். அவர் கவனித்த பக்கங்களை பார்த்துக்கொள்ள புதிய உதவி ஆசிரியர் வருவார். அல்லது இப்போதுள்ள உதவி ஆசிரியர்களே பகிர்ந்துகொள்ளவேண்டும்.  நேற்று குரூப் மலையாளப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். படத்தை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இன்னும் முழுதாக பார்க்கவில்லை.  வீட்டில் அம்மாவுக்கு தைராய்டு பிரச்னை தொடங்கிவிட்டது. அதற்கான மருந்தை அவள் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு வருகிறாள். ஊரில் இருந்து ஈரோடு டவுனில் தனியாக வீடு எடுத்து தங்குவாள் என நினைக்கிறேன். இனி அப்பா கிராமத்தில...

இரட்டையர்களாக வந்து காதலியின் பெற்றோருக்கு பாடம் புகட்டும் நாயகன்! - மகாரதி - பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்

படம்
  மகாரதி   பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்  இயக்குநர் - பி. வாசு வாய்ப்பாட்டு கற்றுத்தரும் பள்ளி, நடனப்பள்ளி என இரண்டு பள்ளிகள் அருகருகே உள்ளன. இதை நடத்தும் நிறுவனர்கள் ஆண், பெண் என இருவருமே ஒருவரையொருவர் மிஞ்சவேண்டும் என துடிப்பாக உள்ளனர். இதில், வாய்ப்பாட்டு சொல்லித்தரும் பள்ளியில் பாலா என்ற ஆசிரியர் உள்ளார்.  இன்னொரு பள்ளியான நடனப்பள்ளியின் நிறுவனரான பெண்மணி வாய்ப்பாட்டு பள்ளியை மிஞ்ச நினைக்கிறார். ஆனால் அவருக்கேற்ற நடனம் சொல்லித்தரும் மாஸ்டர் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு கிருஷ்ணா என்ற நபர் அறிமுகம் ஆகிறார். வாய்ப்பாட்டு பள்ளி, நடனப்பள்ளி என இரண்டிலும் வேலை செய்யும் பாலா, கிருஷ்ணா ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கிறார்கள், விக் மட்டும் வேறுவேறு. யார் இவர்கள் என்பதுதான் கதை.  பாலைய்யா நடித்த மோசமான படங்களின் பட்டியலில் இந்தப்படமும் ஒன்று என்ற வகையில் சேருகிறது. இதில் பாலைய்யா என்ற பெயரில் வரும் ஃபிளாஷ்பேக் மட்டும் கோவை சரளா புண்ணியத்தில் சற்று ஆறுதலாக உள்ளது.  மற்றபடி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்றது என வரும் வசனமும் படம் நெடுக பாலைய்யா ஆடும் ...

விரட்டும் இறந்தகாலத்தால் தவிக்கும் இளம்பெண்! - கெஹ்ரயான் - சாகுன் பத்ரா

படம்
  கெஹ்ரயான் இந்தி இயக்கம் சாகுன் பத்ரா தீபிகா படுகோன், சித்தானந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே அலிஷா, டியா ஆகியோர் சிறுவயதில் ஒன்றாக வளர்கிறார்கள். ஆனால் அப்போது அவர்கள் குடும்பத்தில் நடக்கும் விரும்பத்தகாத விஷயம் காரணமாக, அலிஷாவின் குடும்பம் நாசிக்கிற்கு இடம்பெயர்கிறது. ஆனால் அங்கு அலிஷாவின் அம்மா தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கான காரணம் என்ன என அலிஷா தனது வாழ்க்கையில் நடக்கும் மோசமான சம்பவம் ஒன்றின் பின்னர் அறிவதே கதை.  அலிஷாவிற்கும் டியாவிற்குமான உறவு என்னவானது என்பதையும் சின்ன திருப்பமாக காட்டி படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.  கடந்தகாலம் ஒருவரை துரத்தி வேட்டையாடினால் அவர் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கும், சற்றும் யோசிக்காமல் அப்போதைய பொழுதைப் பற்றி மட்டுமே யோசித்து சந்தோஷத்தை தேடினால் வாழ்க்கை என்னவாகும் என்பதை சாகுன் பத்ரா கதையாக எழுதி அதை நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து செம்மையாக்கி திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள்.  படத்தில் சிறப்பாக நடித்திருப்பவர் என தீபிகாவையும் சித்தானந்த் சதுர்வேதியையும் கூறலாம். பிற்பகுதியில் நஸ்ரூதின் ஷா நம் கவனத்தை கவர்ந்து ...