ஒழுக்கம் நாணயம் உண்மை ஆகியவற்றை ஆராய்ச்சிப் படிப்பிலும் காதல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தும் இளைஞனின் போராட்டம்!
மிஸ்டர் கிங் சரண்குமார் (சிவா), யாஷ்விகாநிஷ்கலா (உமா தேவி), ஊர்வி சிங்(வெண்ணிலா),முரளி சர்மா இசை மணி சர்மா இயக்கம் சசிதர் சாவாலி வாழ்க்கையில் நேர்மை முக்கியம். பொய்யான விஷயங்களே பேச மாட்டேன். செய்யவும் மாட்டேன் என அடம்பிடித்து வாழும் பிஹெச்டி மாணவர் சந்திக்கும் காதல், தொழில் பிரச்னைகளைப் பற்றிய படம். படத்தின் நாயகன் சரண், தனது கதையை சுனிலிடம் சொல்வதுபோல கதை தொடங்குகிறது. சிங்கிள் சிவா என்பதுதான் நாயகனின் பெயர். அவர் பகுதி நேரமாக ரேடியோ சிட்டியில் தொகுப்பாளராக வேலை செய்கிறார். மீதி நேரத்தில் முனைவர் படிப்புக்கான புராஜெக்டில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவர் பெற்றோர் வீட்டை மாற்றுகிறார்கள். அப்போது சிவா, அருகிலுள்ள வீட்டுக்குச் செல்லும்போதுதான் அங்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வந்திருப்பது தெரிகிறது. அங்குதான் நாயகியை(யாஷ்விகா) சந்திக்கிறான். அந்த சந்திப்பு இருவருக்குமே தீப்பொறி போல அமைகிறது. யாஷ்விகா, அப்பாவின் பேச்சுக்கு அடங்கிய பெண். அப்பா முரளி சர்மாவோ, தான் எடுத்த முடிவுதான் இறுதி என மேலாதிக்கம் கொண்டவராக வலம்வருகிறார். அவருக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து ...