இடுகைகள்

எடிட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலைப் பேசியதால், துரோகிகள் என வசைபாடுகிறார்கள்! பீனாபால், படத்தொகுப்பாளர்

படம்
         bina paul திரைப்பட படத்தொகுப்பாளர், பெண்கலைஞர்கள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் ஹேமா கமிட்டியின் முக்கிய சாதனை என்னவென்று கூறுவீர்கள்? மக்களிடம் திரைக்கலைஞர்களின் பாலினத்தை நாங்கள் கவனிக்க வைத்தோம். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த சந்திப்பில், பாலினம் என்பது திரைப்படத்துறையில் உள்ளது என கூறியபோது, பலரும் ஆச்சரியப்பட்டனர். பாலினம் என்றால் என்ன என கேள்வி எழுப்பினர். பெண் கலைஞர்கள் அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பெண்கள் பங்களிப்பு, பணியிட பாலியல் சீண்டல்கள், பெண்கள் கதைகள், மையப்பொருள் என பல அம்சங்கள் பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. இப்போது ஹேமா கமிட்டி பெண்களின் பிரச்னைகளை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதை பெண் திரைக்கலைஞர்களும் ஏற்றுள்ளனர். இந்த எதிர்வினைதான் முக்கியமான சாதனை என்று நினைக்கிறேன். பெண்களில் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் உள்ளனர். இதில் வேறுபாடு உள்ளதா? இது கொஞ்சம் சிக்கலான கேள்வி. கலைத்துறை சார்ந்த உதவியாளரோடு ஒப்பிடும்போது கேமராவின் முன்னே நிற்கும் கலைஞர...

நூல்களைத் திருத்தி செம்மையாக்க ஆசிரியர் தேவையில்லை - எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

படம்
          நூல்களை செம்மையாக்க எடிடிரிக்ஸ் ஏஐ போதும்! ஓராண்டு செயற்கை நுண்ணறிவு புரோகிராமுக்கு உழைத்து கடந்த மே மாதம் 2024 அன்று தனது கண்டுபிடிப்பை எழுத்தாளர், ஆசிரியர் மேரு கோகலே வெளியிட்டிருக்கிறார். இவர், பெங்குவின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் நூல்களை செம்மையாக்கம் செய்யும் பதிப்பக ஆசிரியராக பணிபுரிந்தவர். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள், நூல்கள் என அனைத்துமே நாளிதழ் அல்லது பதிப்பு நிறுவன ஆசிரியரால் பல்வேறு முறை திருத்தி எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியாகின்றன. இதில், திருத்தங்களை செய்யும் நூல் மேம்பட உழைக்கும் ஆசிரியர்கள் பெயர் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பெயர்களை வெளியிடுகிறார்கள். தமிழில், அதுபோன்ற நடைமுறை குறைவு. உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர வழங்கமாட்டார்கள்.  எடிடிரிக்ஸ் என்ற ஏஐ மூலம் எழுத்தாளர் ஒருவர், நூல்களை எளிதாக திருத்தி, பிழைகளை நீக்கிக்கொள்ள முடியும். உலகம் முழுவதுமே தொண்ணூறு சதவீத எழுத்தாளர்களுக்கு, அவர்களின் நூல்களை செம்மைப்படுத்தி திருத்தி தரும் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அந்தக்கு...

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்க...

உண்மையைச் சொன்னால் மனதுக்கு உறுத்துமே? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?   அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன். பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை. நிதானமாகத்தான் படித்து வருகிறேன். இரண்டு இந்தியா  பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள். வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள். உண்மையத்தான் பேசியிருந்தார். பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார். உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே? சங்கிகள் உடனே வரிந்துகட்டி  கிளம்பிவிட்டனர். இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது. வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள்.  கடந்த 16ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதைப் படித்தேன். இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரின்  கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்க்க மகிழ்ச...

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி பட...