இடுகைகள்

விவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி,சாதி, மத, இன பாகுபாடில்லாத ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

படம்
         இனிப்பு மிட்டாயும் பள்ளி புத்தகங்களும்!  வசந்தகாலத்தில் சில பூக்கள் மலர்வதைப்போலவே, இந்தியாவின் அரசியல் தேர்தல் காலங்களில் மட்டுமே உண்மையான நிறத்துடன் உயிர்ப்பு பெறுகிறது. இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அபத்தமான, சர்ச்சைக்குரிய (அ) கொள்கைகளற்ற ஆழ்ந்த அகன்ற அறிவோடு சராசரி வாக்காளனின் மனதை எப்படி வசீகரம் செய்வது என்பது போன்ற விஷயங்களை 2012 உ.பி அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவு, நவீன சிந்தனைமுறைகளைக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட புராதன, பின்னோக்கிய அளவீடுகளைப் பின்பற்றி வாக்காளர் சமூகத்தை தவறான செயல்பாட்டிற்கு பழக்குகிறார்கள்.  அவர்கள் இதனை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறார்கள் - தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே. நாடு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை நினைவு கொள்ள (அ) மறக்க கால நோக்கில் ஏற்படுத்தும் அளவு, பதவிக்கு அவர்கள் தகுதி பெற வெற்றி உண்மையில் மிக அவசியம்தான். இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பெரும் கட்சிகளைச் சார்ந்தவ...

கருத்து சொல்றோம் ப்ரோ! - ஆங்கில இந்தியர்கள் அட்டூழியம்- சேட்டன் பகத்!

படம்
பெட்ரோல், டீசல் விலை, மாணவி வல்லுறவு, கள்ள உறவு, அந்நிய செலாவணி கையிருப்பு, புதிய மசோதா, பட்ஜெட் ஆகிய விவகாரங்கள் சூடுபிடிப்பது எங்கு தெரியுமா? மாநில மொழி ஊடகங்களில் அல்ல; முழுக்க ஆங்கில மீடியத்தில் படித்து ஆங்கிலேய நாவல்களை படித்து அதிலேயே கனவுகண்டு இந்தியாவில் வாழும் ஆட்களின் உலகம்தான் மேற்சொன்ன விவகாரங்களைப் பேசுகிறது. மக்களிடையே கொண்டு செல்கிறது. திரும்பத்திரும்ப அதனைப்பேசி, மக்களின் மனங்களில் பயத்தை புயலை உருவாக்கி வருகிறது. பிற மக்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதையே இவர்கள் மறக்க வைத்துவிடுகிறார்கள். ஆங்கிலமொழியில் இயல்பான வசதி என்னவென்றால், எளிதாக உலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்பதுதான். இதன் விளைவாக, ஆங்கில ஊடகங்கள் எந்த டாபிக்கை எடுத்துப் பேசுகிறார்களோ அதைத்தான் உலகம் கவனிக்கிறது. இந்தியாவில் இப்படி நடக்கிறது என சிஎன்என், பிபிசி முதற்கொண்டு புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லுவது கந்தசாமி, பழனிச்சாமி கிடையாது . குறிப்பாக தந்தி போன்ற மாநில சார்பு கொண்ட அரசு சார்பு கொண்ட பத்திரிகைகளில் இதனைப் பார்க்க முடியாது. ஆனால் ...

பாலினப் பாகுபாடு நம் மனதில் உள்ளது

படம்
Daily Star பாலினப் பாகுபாடு என்பது மனநோய்! பாலின பாகுபாடற்ற பள்ளிகள் என்ற கட்டுரையை அண்மையில் எழுதினேன். அதைப் பாராட்டிய நண்பர் எனக்கு அதிலுள்ள உடை கான்செஃப்ட் புரியவில்லை. என்ன சொல்லவருகிறாய்? ஆண் குழந்தைகளுக்கு கவுன் வாங்கித் தருவாயா? என்றார். உண்மைதான்.அதிலுள்ள உண்மை எனக்கு புரிந்தது. ஆனால் அவர் புரிந்துகொள்ளாத சமாச்சாரம், ஆண் பெண் என்ற உடைக்கான கோடுகள், எல்லைகள் மங்கி வருவது மட்டுமே நான் கூறவந்தது. இதுதொடர்பாக குங்குமத்திலும் நான் முன்னமே கட்டுரைகளை எழுதியுள்ளேன். ரன்வீர்சிங் பேஷன் ஷோவில் ஜென்டர் நியூட்ரல் உடைகளை அணிந்துவந்து அவரது காதலிக்கே ஷாக் கொடுத்தார். பாஜிராவ் மஸ்தானி விழாவில் அவர் அணிந்த பேன்ட் கூட அந்த ரகம்தான். எனது உறவினர் வீடுகளில் பெண்ணுக்கு டீ மட்டும், ஆணுக்கு ஹார்லிக்ஸ் தரப்படும் வித்தியாசத்தை கண்ணாரப் பார்த்துள்ளேன். பெண்கள் எங்களது ஊரில் பாரமாக பார்ப்பதும், அவர்களுக்கு செய்யும் சிறிய உடைகள் அல்லது கல்விச்செலவும் கூட அரசுக்கு வரி கட்டுவது போலவே நினைக்கிறார்கள். இவையும் பாலினப் பாகுபாடு குறித்த கவனத்தை ஏற்படுத்தும் கட்டுரை எழுதக்காரணம். குழந்தைகள்...