இடுகைகள்

ஈஸ்ட்ரோஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி  ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா? பொதுவாக திருமண உறவில் பாலுறவு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெண்களின் இன்பம் என்பதற்கும் குழந்தை பெறுவதற்கும் எந்த தொடர்புமில்லை. பிள்ளை பெற்றவர்களுக்கு கூட உடலுறவில் முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கலாம். உடல்ரீதியான தொடர்பு என்பதை உறுதியாக கொள்பவர்களே, இன்பத்தில் கரைத்துக்கொள்பவர்களே இசைவான தம்பதிகள். ஆண், பெண் என இருபாலருக்கும் வயது, பக்குவம் என்பது பாலுறவில் மாறுபடலாம். ஆனால், பாலுறவு முக்கியமானது என்பதை உளவியலாளர்கள் ஏற்கிறார்கள். சுய இன்பம் என்பது ஒருவர் தான் மட்டுமே இன்பத்தை அனுபவிப்பது. பாலுறவு என்பதில் ஆண், பெண் இருவருமே இன்பத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். திருக்குறளின் காமத்துப்பால், காமசூத்திரம் ஆகிய நூல்களை தெளிவாக பொருளுணர்ந்து படித்து காமத்தில்  ஈடுபடுவது நல்லது.  ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு வேறுபாடுகள் என்ன? ஆண்கள், ஆபாசபடங்களைப் பார்த்து ஊக்கம் பெறுகிறார்கள். அந்தவகையில் அவர்கள் புகைப்படங்கள், காணொளி பார்த்து எழுச்சி பெறுகிறார்கள். உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால்...

பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியத்தேவை ஏன்?

படம்
 திருமணமான பெண்கள், ஆண்கள் என இரு பாலினத்தவருமே உடற்பயிற்சி செய்வது குறைந்துபோய்விட்டது. அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக நாற்பது வயதிலேயே அறுபது,எழுபது வயது ஆனவர்கள் போல தளர்ந்து தசைகள் தொங்கிப்போய் கண்களுக்கு கீழே கறைபடிந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், எலும்பு பலவீனமாகிறது. இதை சரிசெய்ய எடைப் பயிற்சிகளை செய்யவேண்டும். அதாவது, ஜிம்மில் எடைகளை தூக்கிப் பயிற்சி செய்யவேண்டும்.  எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் பெரிதாக மாறிவிடும். அழகு குறைந்துவிடும் என நினைப்பது மூடநம்பிக்கை. உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியவர், தினசரி செய்யும் வேலையை ஊக்கமாக செய்யமுடியும். காயம்படாது. எலும்பு முறிவு, சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கமுடியும்.  ஏரோபிக், டாய்ச்சி, எடைப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் உண்டு. ஒருவரின் உடலைப் பொறுத்து எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து செய்யலாம். அனைத்து உடற்பயிற்சியிலும் பயன்கள் உண்டு. சிலருக்கு ஜிம்மில் சென்று பயிற்சிகளை செய்வதற்கு கூச்சம் இருந்தால், வீட்டில் செய்வதற்கான முயற்சிகளை செய்யலாம். கருவிகளை...

கர்ப்பிணிகளுக்கு சுவையுணர்வு மாறுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கர்ப்பிணிகளுக்கு நாக்கின் சுவை ஏன் மாறுகிறது? புளி, சாம்பல் தேடி ஓடுகிறார்கள் என்று நேரடியாக கேட்காமல் மறைத்து கேட்கிறீர்கள். காரணம் ஒன்றுதான். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் வேகமாக அதிகரிக்கும் காலகட்டம் அது. இதனால் உடலில் நடக்கும் மாறுதல்களால் நாக்கின் சுவை அறியும் தன்மை மாறுபடுகிறது. ஜிங்க் குறைபாட்டால் சுவை அறியும் தன்மை மாறுகிறது என்று முதலில் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், 2009ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளின் சுவையுணர்வு மாறுபடுவதில்லை. ஜிங்க் அளவிலும் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், உடலில் சிறுநீர் பாதையில் பல்வேறு பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திப்பதாக கண்டறிந்து கூறினர். இதுதான் நாக்கின் சுவையுணர்வை பாதிக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாக்கின் சுவை உணர்வுக்கும் நம் மூளைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நன்றி - பிபிசி