ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!
hi venus (ஜஸ்ட் வித் யூ) சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள். யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள். நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் ப...