சர்வாதிகாரம் - அமைப்புகளை காப்பாற்றுதல்
சர்வாதிகாரம் அமைப்புகளை காப்பாற்றுதல் அரசு அமைப்புகள் நாகரிகத்தை ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுகின்றன. அவற்றுக்கு மக்களின் உதவியும் தேவைப்படுகிறது. அமைப்புகளுக்காக அதனால் பயன்பெறும் மக்கள் ஆதரவாக நின்று பேச வேண்டும் போராடவேண்டும். அமைப்புகளுக்கு சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கிடையாது. அவை பாதுகாக்கப்படாதபோது ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதைப் பார்ப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றம், நாளிதழ், சட்டங்கள், தொழிலாளர் சங்கங்களைக் கூறலாம். பெரும்பாலான சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வழங்கப்படுவதுதான். இத்தகைய நெருக்கடியான சூழலில் முன்னமே தங்களை அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொடுக்க கூடாது. 1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அரசை அமைத்துவிட்டார். அப்போது பிப்ரவரி மாதம் வெளியான யூதர்களின் நாளிதழில், ஹிட்லர் தனது பிரசாரத்தில் கூறிய யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என நம்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சர்வாதிகாரி சொன்னதை செய்து முடித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அனைத்து அரசு அமைப்புகளும் நாஜி கட்சியினரால், அதன் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டில் ...