இடுகைகள்

தேசியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்!

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்! இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள்    முழுமையடைய    தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம். 2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை    தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம். 3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 4. கட...

சிறப்பு காவல்துறை அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை வல்லுநருக்குமான மோதல் காதல் கதை!

      யூ ஆர் மை ஹீரோ சீனதொடர் யூட்யூப் நாற்பது எபிசோடுகள் சிறப்பு போலீஸ் அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை மருத்துவருக்கும் ஏற்படும் மோதல், காதல், இன்ன பிற பிரச்னைகள். குறிப்பாக, வேலை காரணமாக காதலிக்க நேரமில்லையே என காட்சிகளிலேயே கூறிவிட்டார்கள். பொதுவாக, இப்படியான தொடர்களில் இறுதிப்பகுதி தேசியவாதம் பேசுவதாக முடியும். கல்யாணத்தை ஒத்தி வைப்பது, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்வது என்றெல்லாம் ஊதுபத்தி கொளுத்துவார்கள். இந்தக்கதை அப்படியெல்லாம் செல்லவில்லை என்பது பெரிய ஆறுதல். நகைக்கடை ஒன்றில் கொள்ளை நடக்கிறது. அதில் மூளை அறுவை சிகிச்சை மருத்துவர் சிக்கிக்கொள்கிறார். அவரை சிறப்பு போலீஸ் அதிகாரி காப்பாற்றுகிறார். முகத்தை மாஸ்க் போட்டு மறைத்திருக்கிறார். இதனால் நாயகி, மீகாவுக்கு அவரது முகம் தெரியவில்லை. உயிரைக்காப்பாற்றிய வீரருக்கு நன்றிக்கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார். அத்தோடு சரி. நாயகியை காப்பாற்றியவர்தான் ஷிங் கெலாய் எனும் நாயகன். நாயகனுக்கு பிடிவாதம், அதீத தன்னம்பிக்கை, வேகமான செயல்பாடுகள் உண்டு. விதிகள் அதிக பிடிப்பு கொண்ட இரக்கமற்ற அதிகாரி. அவரோடு ஒப்பிடும்போத...

திராவிட தேசியம் - அண்ணாவின் மூன்று உரைகள்

படம்
    திராவிட தேசியம் - மாநில சுயாட்சி சிஎன் அண்ணாதுரை திராவிடர் கழக வெளியீடு விலை ரூ.ஆறு இந்த நூல் மொத்தம் மூன்று உரைகளை உள்ளடக்கியது. 1961, 1967, 1969 என மூன்று ஆண்டுகளி்ல் அண்ணா, பொது மேடையில் பேசிய உரைகளை நூலாக தொகுத்திருக்கிறார்கள். தொடக்க காலகட்ட உரையில் திமுக மாநில சுயாட்சியோடு, திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுகவை பிரிவினைவாத கட்சி என கூறி விமர்சித்தது. திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா எழுப்பினார் என்பதற்கான எளிமையான விடைகளை அவரது உரையில் படித்துப் புரிந்துகொள்ளமுடியும், மையத்தில் அதிகார குவிப்பு, வரிவருவாய் பாகுபாடு, மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்த அதிகாரம், அனைத்திற்கும் ஒன்றிய அரசின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் அவலம், இந்திமொழி திணிப்பு ஆகியவற்றை அண்ணா உரையில் சுட்டிக்காட்டுகிறார். ஆட்சிக்கு வந்தபிறகு பிரவினைவாத சட்டத்தில் திமுகவின் ஆட்சியை கலைத்துவிடவாய்ப்புள்ளது என்பதால், திராவிட நாடு கோரிக்கை மட்டும் கைவிடப்பட்டது. ஆனால் அதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என அண்ணா தைரியமாக கூறியிருக்க...

இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

படம்
  அகெய்ன் லைஃப் தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ்  லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங் இயக்குநர் ஹன் சுல் ஹூ வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால் ராகுட்டன் விக்கி ஆப் சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை   விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து   போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.   இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகி...

பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!

படம்
பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்!  இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது.  2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்க...

தேசியவாதத்தின் தந்தைகள் உருவானது இப்படித்தான்!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் பேராசிரியர். சுனில் பி இளையிடோம் கேரளத்தின் முக்கியமான கலாசார விமர்சகர் சுனில், எழுதுவதை விட இவரின் பொதுமேடைப் பேச்சு அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிறது. இவரின் முக்கியமான படைப்பு  political unconsciousness of Modernism .  மார்க்சியத்தை புகழ்ந்து மட்டும் பேசாமல் அதன் பிரச்னைகளை பட்டென போட்டு உடைப்பதோடு அண்மையில் பாஜக முன்னெடுத்து வரும் தேசியவாத வரலாறு, நாராயணகுரு என பொதுமேடையில் அசத்தலாக பேசிவருகிறார். இசை, இலக்கியம், நடனம் என்பதைத் தாண்டி தேசியவாதம், அதன் வரலாறு வரை பேசுகிறீர்கள். உங்களது எழுத்திலும் பேச்சிலும் கூட தத்துவத்தின் சாயல் உள்ளது. எப்படி இப்படி ஒரு பாணியை பிடித்தீர்கள்.  கலாசார வரலாற்றில் நவீனத்தன்மையை ஆராய்வதே என்னுடைய பாணி. நான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளை இம்முறையில் செய்துள்ளேன். ஒரே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை  நோக்கியே எழுதவேண்டும் பேசவேண்டும் என்பதில்லை. மார்க்சும் இம்முறையில் எதையும் வலியுறுத்தியவரில்லை. நான் கைக்கொள்ளும் முறையில் தத்துவத்தில்  சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால், நான் இம்முறையை அ...

ஒரு நாடு, பல மொழிகள்! - மொழியை நொறுக்கும் அரசியல்!

படம்
pinterest தெரிஞ்சுக்கோ! மொழித்தீ! உள்துறை அமைச்சர் இந்தி மொழியை மாநிலங்கள் இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று இந்தி திவஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கிறார். மத்திய அரசு அமைச்சர்கள் ஆண்டுதோறும் இந்தி மொழி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்தான். ஆனால் இம்முறை அமித் ஷா உள்துறை அமைச்சராகி பங்கேற்று சர்ச்சைக்கு திரி கொளுத்தியிருக்கிறார். இந்தி என்றாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை அது தற்காலிகம்தான். சமஸ்கிருதத்தை இந்தியின் இடத்தில் பொருத்துவது அவர்களின் லட்சியம். அதற்கான அடிக்கல்லை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்பே நடத்தொடங்கிவிட்டனர். கல்வி விஷயத்தில் பாஜக அரசு ஏற்கனவே தன் கருத்துகளை நடவு செய்யத் தொடங்கிவிட்டது. வரலாற்றை திருத்தி தனக்கேற்றபடி மாற்றி எழுத தொடங்கிவிட்டனர். அதிகாரம் கையில் இருக்க கவலை என்ன? எனது சொல்லே  கட்டளை, அதுவே  சாசனம் என தினமொரு கட்டளை டெல்லியிலிருந்து வருகிறது.  நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை யாரும் விமர்சிக்காமலிருக்க ஏதேனும் ஒரு அறிவிப்பை வீசிக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு. ஓகே. மொழி பற்றிய டேட்டா இதோ! 22 மொழிகளை இந...

அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85

படம்
குறுக சொல் நிமிர் கீர்த்தி! ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான். மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது.  தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களி...