இடுகைகள்

இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் வாசிப்பது என்பது முக்கியமான அரசியல் செயல்பாடு! - ஆகிருதி மந்த்வாணி

படம்
                நேர்காணல் எழுத்தாளர், ஆய்வாளர் ஆகிருதி மந்த்வாணி இலக்கியம் அல்லது க்ரைம் சார்ந்த நூல்கள் அல்லாமல் நடுநிலை இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பியது ஏன்? இந்தி கிரைம் எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதக் நூல்களைப் பற்றித்தான் முதலில் ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படித்தான்ஆராய்ச்சியும் தொடங்கியது. அவரது நூல்கள் வாசிக்க நன்றாக இருக்கும். விலையும் கூட அதிகம். ஆனால், அவரது நூல்களை வாசிக்கிறேன் என்று யாரும் தைரியமாக கூற மாட்டார்கள். மறைத்து வைத்து படிப்பார்கள். இப்போது அதை வெளியில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தி மொழி இதழ்களை பற்றி பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேசியமொழி இந்தி என்ற அடிப்படையில் உருவானது. தேசியவாத கண்ணோட்டம் கடந்த நடுநிலை இதழ்களை, பொதுஅறிவு தகவல்களை வழங்கும் வார, மாத இதழ்களை மக்கள் வாசித்துள்ளனர். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வாசிப்பார்கள். எனவே, நான் இடைநிலை இதழ்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது சரியென தோன்றியது. இடைநிலை இதழ்களின் வெளியீடு, அவற்றை வாசித்த பெண் வாசகர்களைப் ...

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. ...