இடுகைகள்

வார இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிடித்த விஷயம் பின்னாளில் தொழிலாக மாறியது!

படம்
  அன்பரசு சண்முகம் மொழிபெயர்ப்பாளர் பிழைப்புக்கான தொழில்! மொழிபெயர்ப்பை பாடமாக பயின்றீர்களா? அப்படி பயின்றிருந்தாலும் சிறப்புதான். எனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு, தமிழாக்கம் ஆகியவற்றை நான் சுயமாக கற்றவன். தாளில் எழுதி அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து மீண்டும் அத்தவறு நடக்காமல் பார்த்துக்கொண்டுதான் மின்னூல்களை எழுதி வருகிறேன். சுயமாக மொழிபெயர்ப்பை கற்கும் முயற்சியில் வெளியில் இருந்தும் சிலர் உதவி புரிந்தனர். என்னுடைய மொழிபெயர்ப்புகள் புனைவல்ல(சிறுகதை, கவிதை, நாவல்). கட்டுரைகள் சார்ந்தது. அபுனைவு. அதுவே பின்னாளில் பிழைப்புக்கான தொழிலானது. இது பலமா, பலவீனமா என்றால் இரண்டுமே உள்ளது.  இதற்கான தொடக்கம் எது? நெ.2 இதழான குமுதம் வார இதழ்தான். இளமை புதுமை முதன்மை என ஏகத்துக்கும் புதுமை செய்யும் இதழ் இன்றைக்கு வாராவாரம் பக்க எண்களை மட்டும் மாற்றிப்போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு வார இதழ் தனது கதைகள், சிறுகதைகள், பேட்டி என அனைத்திலும் அவர்களின் கேப்ஷனுக்கு ஏற்றாற்போலவே புதுமையாக இருந்தது.  குமுதம் இதழின் அட்டையைப் பார்த்த...

மீண்டும் பத்து ரூபாய்! - 1page story

  மீண்டும் பத்து ரூபாய் ! அண்ணாச்சி , மல்லித்தூள் ஐம்பது கிராம்ல ஒண்ணு போட்டுருங்க என்று சொன்ன சங்கர் , சாமான் பையை வாங்கிக் கொண்டு திரும்பினான் . பைக்கில் பையை மாட்டிவிட்டு பில்லியனில் அமர்ந்தான் . அப்போது முன்னே நடந்து சென்ற பிச்சைக்காரர் , கையில் இருந்த பத்து ரூபாயை கீழே தூக்கிப்போட்டுவிட்டுப் போவதைப் பார்த்தான் . வேறு யாராவது பணத்தைப் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணில் பார்த்தான் . உடனே , நடந்து சென்று , கசங்கலாக இருந்த பத்து ரூபாயை எடுத்து பர்சில் இருந்த ஐநூறு ரூபாயோடு வைத்தான் . பத்துரூபாய் லாபம் என சந்தோஷப்பட்டான் சங்கர் . வீடு வரும் வழியில் கறிக்கடையைப் பார்த்தான் . பிள்ளைகள் ஞாபகம் வர , உள்ளே நுழைந்தான் . ஒரு கிலோ எவ்வளவுங்க என்று கேட்டுவிட்டு , பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயன்றான் . ஐநூறு ரூபாயைக் காணவில்லை . கண்டெடுத்த பத்துரூபாய் மட்டுமே இருந்தது . சங்கருக்கு உள்ளூர பீதியானது . கடையில் இருந்து வெளியே வந்தவன் , பர்சை எடுத்து மேலும் கீழுமாக பார்த்தான் . பர்ஸில் எந்த கிழிசல் , ஓட்டையும் இல்லை . அப்புறம் வெச்ச ஐநூறு ரூபாய் எங்கே ? என சங்கர் யோசித்தவாறே பைக்கை கிளப்பினான் . ...

இரு மின்னூல்கள் வெளியீடு - காணாமல் போவதில்லை புலிகள் - திராவிட திருநாடு

 காணாமல் போவதில்லை புலிகள் (Kaanamal povathillai pulikal): குங்குமம் செய்திக்கட்டுரைகள் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPX27WB7 திராவிட திருநாடு (Dravida thirunadu): தமிழ்நாட்டின் மேம்பாடும் சீர்திருத்தங்களும் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPR47YW8

பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்

 பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர் சக்திவேல் அவர்களை நான் அடிமாட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு நாளிதழ் குழுமத்தில் பணியாற்றும்போது சந்தித்தேன். பொதுவாகவே அந்த நிறுவனத்தில் கலாசாரம் என்னவெனில், வெளி ஊடகம் என்றால் வரவேற்பு, விருந்து சாப்பாடு என மரியாதை அமோகமாக இருக்கும். புதிதாக வருபவர்கள் என்றால் ச்சீ, தூ போ அங்கே உட்கார் என்பார்கள். இப்படியான கலாசாரத்திற்கு அங்கு வேலை செய்தவர்களும் முக்கிய காரணம். பலரும் நிறுவன அடிமைகள். அதாவது நாளிதழ் குழுமம் ஆதரித்த கட்சிக்கு விசுவாசமாக இருந்து பயனை அனுபவிக்க துடித்த கூட்டம். பக்க வடிவமைப்பாளர்கள் பலரும் கல்வி அறிவற்றவர்கள். தேநீர், காபி கொடுக்கும் பணியாளர்களாக இருந்து வடிவமைப்பாளர்களாக மாறியவர்கள். தொழில் இப்படி மேம்பட்டாலும் அவர்களின் குணம் என்பது தெருவோரத்தில் நின்று சண்டைபோடும் ஆட்களைப் போலத்தான் இருக்கும். படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என யாரை அடையாளம் கண்டாலும் தாழ்வுணர்ச்சியில் வெந்துபோவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள்.  அவதூறு, வதந்தி பரப்புவார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்...

இளமையான குமுதம் வார இதழை வெற்றிபெறச் செய்த எடிட்டர் எஸ்ஏபி!

படம்
  எடிட்டர் எஸ்ஏபி ரா.கி.ரங்கராஜன் ஜ.ரா.சுந்தரேசன் புனிதன் குமுதம் இதழை தொடங்கி ஆசிரியராக நடத்தியவர், எஸ்.ஏ.பி. அண்ணாமலை. இவருக்கு உதவிய பதிப்பாளர் பார்த்தசாரதி. இருவரும் சேர்ந்துதான் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற கேப்ஷன் கொண்ட குமுதத்தை உருவாக்கினர்.  குமுதத்தின் அடிப்படையே புதுமைதான். இன்று குமுதம் இருபது ரூபாய் விலையில் விற்று வருகிறது. ப்ரியாகல்யாணராமன் அதனை பாகுபலியாக சுமந்து வருகிறார். அன்று நிலைமை அப்படியில்லை. எஸ்ஏபி இதற்கென மூவரை உதவி ஆசிரியர்களாக வைத்திருந்தார். அவர்கள்தான் எடிட்டர் எஸ்ஏபி நூலை எழுதியவர்கள்.  நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். அதை தொகுத்தே மூவரும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களாக தொகுத்துள்ளனர்.  எடிட்டர் எஸ்ஏபி, தான் வாழும் காலம் மட்டும் தன்னைப் பற்றி யாரும் புகழ்ந்து எழுத அனுமதிக்கவிலை. செட்டியார் அந்த மட்டுக்கு தெளிவாக வீண் புகழ்ச்சி, திறமையைக் கெடுக்கும் என உணர்ந்திருக்கிறார். ரா கி ரங்கராஜன் எழுத்தில் ஒருமுறை மட்டுமே ஒருவரது புகழ்ச்சியால் மயங்கியிருந்த நிகழ்வை படிக்கும்போது ஆச்...