இடுகைகள்

இந்துத்துவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

படம்
  சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள். தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு. அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்...

இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி

படம்
  நிலைத்த புகழ் இந்தியா அமிஷ் திரிபாதி கட்டுரை நூல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் தமிழில் மிஸ்டிக் ரைட் இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே? அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவ...

நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....!

படம்
            நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....! நோபல் பரிசை இந்தியா ஐந்துமுறை பெற்றுள்ளது. மீதிமுறை எல்லாம் இந்திய வம்சாவளி என தலைப்பு எழுதி இந்திய கைக்கூலி ஊடகங்கள் பெருமைப்பட்டுக்கொண்டன. மற்றபடி கல்வி ஆராய்ச்சிகளுக்கே பெரிய அளவு வரிவிதிப்பு விதிக்கப்பட்டு வருகிற நிலையில் நோபல் பரிசு என்ன, ஆராய்ச்சி செய்பவனுக்கு மரியாதையே சமூகத்தில் இருக்காது. அறிவியலாளர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய இடத்தில் மத தலைவர்கள், சாதி தலைவர்கள், பார்ப்பன பூசாரி, பண்டாரங்கள் அமர வைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படியான மத அடிப்படைவாத சிக்கல்கள் இருந்தாலும் டாப் 10 நோபல் பரிசு பட்டியலில் இந்தியா வந்துவிடும் என சிலர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். இப்போதைக்கு நோபல் பரிசு பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ரஷ்யா, ஜப்பான், கனடா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆதிவாசி, பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு நிதியை பசுமாட்டு மடங்கள் கட்ட மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன. இந்த நிலையில், மனிதர்கள் அழிந்து மாடுகள் மட்டுமே வா...

பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் - ஏ ஜி நூரானி - அஞ்சலிக் குறிப்பு

படம்
      அஞ்சலி ஏஜி நூரானி 1930-2024 காபூர் பாய் என அழைக்கப்படும் நூரானி, அரசியலமைப்பு சட்டத்தை அறிந்த கூர்மையான மனிதர்களில் ஒருவர். கல்வியாளர், வழக்குரைஞர், சுயசரிதையாளர், வரலாற்று அறிஞர், அரசியல் விமர்சகர், சிந்தனையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர், அப்துல் காபூர் மஜீத் நூரானி. தனது தொண்ணூற்று மூன்று வயதில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றிய நூரானி, சட்டம், அரசியல், வெளிநாட்டு உறவுகள் என பன்முகத்தன்மை கொண்ட தளங்களில் இயங்கி வந்தார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்தார். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, தைனிக் பாஸ்கர், தி இந்து, பிரன்ட்லைன் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் காஷ்மீர் பற்றி நுட்பமான பல்வேறு தகவல்களோடு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக அரசியல் சூழல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதகுல வரலாற்றில் பத்து முக்கிய சம்பவங்களில் ஒன்று என இந்திய பாகிஸ்தான் பிரிவினையைக் குறிப்பிட்டார். குடிமகன்களின் உரிமை, பேச்சுரி...

கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் இனி ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கவேண்டும்! - வரித் தீவிரவாதத்தின் அடுத்த கட்டம்

படம்
                ஆராய்ச்சிகளை நிலைகுலைய வைக்கும் வரி தீவிரவாதம் மாத சம்பளம் வாங்குபவர்களை வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி இப்போது ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களையும் வலதுசாரி மதவாதிகள் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நாட்டிலுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி அதுவரை பெற்ற மானியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை நிதி அமைச்சகம் கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிலுவையில் உள்ள வரியைக் கட்டியே ஆகவேண்டுமாம். ஏற்கெனவே பணவீக்க நிலையில், ஆராய்ச்சிக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பெரியளவில் உயரவில்லை. அந்த நிலையிலும் கிடைக்கும் பணத்தை வைத்து ஆராய்ச்சிகளை மாணவர்கள் செய்து வந்தனர். மதவாத அரசு, நிதிநிலை அறிக்கையை அறிவிக்கும் போதெல்லாம் கல்விக்கான நிதியை குறைத்துக்கொண்டே வந்தனர். பொது நுழைவுத்தேர்வு என்று வைத்து, பயிற்சி மைய நிறுவனங்களுடன் சேர்ந்து மாணவர்களை கொள்ளையடித்து சம்பாதித்து வருகின்றனர். இத்தனைக்கும் பயிற்சி மையங்களின் வணிகம் ஆண்டுக்கு ஐம்பத்தெட்டாயிரம் கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டு...

வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை

படம்
              வாக்கு வங்கி எனும் சூழ்ச்சி  வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை  சில சமயங்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படும்  சிறுபான்மை இனக்குழுவில்  இருப்பது  குறித்து எண்ணி ஆச்சர்யமுறுவேன். நான் முஸ்லீமோ (அ) தலித்தோ அல்ல. பெண்ணும் அல்ல. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவனும் இல்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களைவிடவும் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்கள் பெரிதும் தோற்றத்தில் வேறுபடுகிறவர்கள் ஆவர். வங்கியில் வெளிநாட்டில் வேலை செய்தபோது, இந்தியர்களை வித்தியாசம் பாராட்டும் தன்மை என்னை சிறுபான்மையினராக உணரச்செய்தது. இன்றும் அந்த பாகுபாடான மனநிலை அற்பத்தனமானது என்றே நினைக்கிறேன்.  சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களது உணர்ச்சிகளை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை கூற அதிக துணிச்சல் தேவைப்படுகிறது. அவர்களின் சூழலை உணர்ந்து பேச நம்மில் பெரும்பான்மை இனக்குழு சார்ந்தவர்களுக்கு கூட முழுமையான தகு...

வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்

படம்
      வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம் அரச நீதி என்பது தனது அதிகாரத்தை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ள முயல்வது. நீதி,நிர்வாகம் தாண்டி சுயதோல்விகளைப் பற்றி விமர்சிக்கும் எவரையும் சர்வாதிகாரி விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் அரசும் தனது காலத்தில் போராட்டக்காரர்களை தேசதுரோக சட்டத்தின்படி தண்டித்தது. தலைவர்கள் பலரை சிறையிலிட்டது. நேதாஜி வழியில் சென்றவர்களை தூக்கிலிட்டது. இப்படி நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அதற்கென உருவாக்கி வைத்த சட்டங்களின்படிதான் நடந்தன. அதே சம்பவங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஜனநாயகத்தின்படி கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்க கூலிப்படை தொடங்கி அரசின் புலனாய்வு அமைப்புகள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அரச பயங்கரவாதத்தைப் முறைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று ஊபா. எழுத்தாளர் அருந்ததி ராய், அவரது நாவல் எழுத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர். அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்துமே பல லட்சம் பேரால் வாசிக்கப்படுபவை. கேட்கப்படுபவை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர...

ஆறாத ரணம் - ராமர் கோவில்

படம்
  டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள்.  அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது....

ஆணக்கொலைகளால் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்த நாட்டார் தெய்வங்கள்- ஆ.கொ.சா. பெ.கொ.அ

படம்
  ஆணவக்கொலைச் சாமிகளும், பெருமித கொலை அம்மன்களும் ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல்   திருநெல்வேலி, தூத்துக்கடி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள நாட்டார் தெய்வங்களின் பூர்விக வரலாறு பற்றி இந்த ஆய்வு நூல் பேசுகிறது. நூலின் தொடக்கத்திலேயே நாட்டார் தெய்வங்கள் எப்படி பெருந்தெய்வ வழிபாட்டின் ஓரங்கமாக மாற்றப்படுகிறது என்பதை விளக்கி இந்துத்துவ சக்திகள் செயல்படுவதை ஆசிரியர் விளக்கி விடுகிறார். ஆகவே, நாட்டார் தெய்வங்கள் என்பது வேறு. அதன் வழிபாட்டு முறைகளே வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதில் உயிர்ப்பலி, கறிச்சோற்று படையல், கொடை, முளைப்பாரி ஆகியவை உண்டு. பெருந்தெய்வ வழிபாட்டில் இவையெல்லாம் இருக்காது. நாட்டார் தெய்வங்கள் முன்னெப்போதோ நம் கூடவே வாழ்ந்து வந்தவர்கள்தான். அவர்கள் சக மனிதர்களால் சாதி பெருமிதம், பொறாமை, காதல், சொத்து, பாலியல் வன்முறை, குடும்ப கௌரவம் ஆகியவற்றுக்காக பலியானவர்கள்தான். இவர்கள் மீது பின்னாளில் ஏற்படும் குற்றவுணர்ச்சி காரணத்தால் இறந்து போனவர்களை கொன்ற குடும்பத்தினர், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சுதை சிற்பமாக வடித்து வழிபடத் தொடங்கு...

பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி

படம்
  கார்த்திகேயா 2 இயக்கம் சந்து மாண்டெட்டி இசை கால பைரவா ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர்  நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.  கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான்....

இரண்டு இந்தியாக்களைப் பற்றி பேசும் தனிக்குரல் கலைஞன்!

படம்
  உண்மை ஏற்படுத்தும் உறுத்தல் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன் . ஃபிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது . இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை . நிதானமாகத்தான் படித்து வருகிறேன் . இரண்டு இந்தியா பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள் . வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது . தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள் . சமகால உண்மையைத்தான் பேசியிருந்தார் . வீர்தாஸ் பெண்கள் , சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார் . உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே ? சங்கிகள் உடனே வரிந்துகட்டி கிளம்பிவிட்டனர் . இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது . வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள் . கடந்த 16 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியிருந்தது . அதைப் படித்தேன் . இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரவனின் பிரமாதமான கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தத...

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளி...

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்....