இடுகைகள்

டைம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

ஏஐ முன்னோடிகள்!

படம்
  ஏஐ முன்னோடிகள்  டைம் இதழில் வெளியான ஏஐ சிறப்பிதழில் இடம்பெற்ற பிரபலமான ஏஐ ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இவை.  ஜேம்ஸ் மான்யிகா துணைத்தலைவர், ஆராய்ச்சி தொழில்நுட்ப சங்கம், கூகுள் james manyika google ஏஐ தொழில்நுட்பத்தை சந்தையில் பிறருடன் போட்டியிடுவதை விட அதை சரியான காரணத்திற்காக பயன்படுத்தவேண்டும் என ஜேம்ஸ் நினைக்கிறார். இதனால்தான், அவர் காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என பரந்துபட்ட துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவாக்க முயன்று வருகிறார். வெள்ள அபாயம் பற்றிய ஃப்ளுட் ஹப் என்ற தொழில்நுட்பம் எண்பது நாடுகளில் விரிவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் வெள்ள அபாயத்தை முன்னரே மக்கள் அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.  அதேசமயம் ஏஐ தவறானவர்கள் குறிப்பாக சர்வாதிகார அரசின் கைகளுக்கு சென்றால் ஏற்படும் அபாயம் பற்றியும் பிரசாரம் செய்கிறார். பேசுகிறார், எழுதி வருகிறார். ஆலோசனை அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார். தொழில்நுட்பம் வேகமாக சந்தைக்கு வந்தால் வணிகம் சிறக்கும், ஆனால் ஜேம்ஸ் வேகத்தை விட விவேகம் முக்கியம் என நினைக்கிறார்....

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரிய...

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும் - ராபர்ட் புல்லார்ட், ஃபேஷன் டிசைனர் கேப்ரியல்லா, ஜான் கெர்ரி

படம்
  ராபர்ட் புல்லார்ட்  robert d bullard நான் வியட்நாம் கால கடற்படையில் பணிபுரிந்தவன். ஒருவகையில் பூமர் என்று கூறிக்கொள்வதில் பெருமைதான். 1979ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழலுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். அன்று செய்த வேலைகள் இன்று தலைப்புச்செய்தியாக நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடப்புகாலத்தில் புதிய தலைமுறையினரான மில்லியனியல், ஜென் இசட், எக்ஸ், ஒய் ஆகியோர் நிறையபேர் வந்துவிட்டனர்.  எனவே, நாம் எதிர்கால தலைமுறையினருக்காக காலநிலை பாதிப்புக்கு தீர்வு தேடும் இனக்குழுவை உருவாக்கும் தேவையிருக்கிறது. மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வீடு, போக்குவரத்து, உணவு, நீர், ஆரோக்கியம், தூய ஆற்றல் வளங்கள் கிடைக்கவேண்டும்.அதற்கான அரசு கொள்கைகளை வகுக்க நாம் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்த வேண்டும். காற்று மாசுபாடில்லாத சூழ்நிலை அனைவரின் உரிமை. வேதி தொழிற்சாலைகள், குப்பைகள் கொட்டப்பட்ட நிலங்கள் இல்லாத இடத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்ற கனவு எனக்குள்ளது.  இன்றைய உலக நாடுகளில் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தெருக்களில் களம் கண்டு போராட...

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகள் தேவை!

படம்
  ஜேன் ஃபாண்டா jane fonda stephanie zacharek அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகை. இவரை விட இவரது பெற்றோருக்கு புகழ் அதிகம். ஹென்றி ஃபான்டா, பிரான்சிஸ் ஃபோர்ட் சீமோர் ஆகியோருக்கு பிறந்த பிள்ளை. பெற்றோர் தொழி்ல் நடிப்பு என்றாலும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டிவி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். கிரேஸ் அண்ட் ஃபிராங்கி என்ற தொடரை இந்த வகையில் குறிப்பிடலாம்.  ஜேன், 1970ஆம் ஆண்டிலேயே பூர்விக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். கூடவே, அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரையும் கூட தவறு என்று வாதிட்டார். தற்போது தன்னார்வ அமைப்பைத் தொடங்கி தன்னைபோல ஈடுபாடு கொண்டவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டம் நடத்தி சூழல் பிரச்னைகள் மீது கவனம் கொண்டு வந்தார். அதற்கு எதிர்வினையாக ஐந்துமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைபடுவதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர் போக்கி்ல் இயங்கி வருகிறார்.  காட்டுத்தீ காரணமாக பறவைகள் வலசை செல்ல ம...

டைம் வார இதழின் சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  டைம் புதிய கண்டுபிடிப்புகள் 2023 லெனோவா  யோகா புக் 9ஐ இந்த யோகா புக்கைப் பயன்படுத்தி வீட்டில் வேலை செய்வது எளிது. 13.3 அங்குலத்தில் இரண்டு திரைகள் கொண்ட கணினி. மேசைக்கணினி, மடிக்கணினி, டேப்லட் என எப்படி வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓஎல்இடியில் இரண்டு திரை என்பது இந்த கணினியில் புதுசு. வாங்கி பயன்படுத்துங்கள். வடிவமைப்பில் அசத்துகிற கணினி இது.  அல்காரே பாட் கடல்பாசிகள் குளம், ஏரியில் அதிகரிப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நன்மை என்றால் காற்றிலுள்ள கார்பனை அதிகம் உள்ளிழுக்கும். தீமை என்றால் அழுகிப்போன வாடையோடு நீரிலுள்ள பிற உயிரினங்களின் வாழ்வை பாதிக்கும். இதை சரி செய்ய அல்காரே ரோபோட் உதவுகிறது. பாசிகளை நீரின் அடிமட்டத்தில் கொண்டு சென்று அழுத்து கார்பனை அங்கேயே தங்கியிருக்கச் செய்கிறது. வளைகுடா நாடுகள், புளோரிடா ஆகிய பகுதிகளில் இந்தரோபோட் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து வருகிறது.  ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர்  டீ, காபி தரும் மெஷின்களை பார்த்திருப்போம். அதைப்போலவே உணவுக்குப் பயன்படுத்தும் சாஸ்களை ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர் வழங்குகிறது....

புதுமையான சிந்தனையால் சாதனை படைத்த தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் - டைம் வார இதழ்

படம்
  விர்டா ஹெல்த் கேரோஸ் ஜெனரேஷன் ஜீனியஸ் பப்பாயா குளோபல் ரன்வே புதுமையான சாதனை படைத்த தொழிலதிபர்கள் தி நார்த் ஃபேஸ் சர்குலர் குளோத்திங் ஆடைக்கழிவுகளைத் தவிர்க்கும் புதுமையான முறை உலகம் முழுக்க வேகமான முறையில் உடைகளை விற்கிறார்கள். அதை வாங்கும் மக்கள் உடைகளை பலமுறை அணிவது குறைவு. அதை விரைவிலேயே நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதை தி நார்த் ஃபேஸ் என்ற நிறுவனம் மாற்றுகிறது. பயன்படுத்திய துணிகளை மக்களிடம் இருந்து வாங்கி அதை சற்று மேம்படுத்தி மீண்டும் விற்கிறது. இதன்மூலம் உடைகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது. குப்பையாக நிலத்தில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. தி நார்த் ஃபேஸின் தலைவர் நிக்கோல் ஓட்டோ. தெராபாடி வலியைக் குறைக்கும் கருவி வலியில் இருந்து நிவாரணம் தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் கருவி. தொடக்கத்தில் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் என்றே தொழில்ரீதியாக பயன்பட்டது. இப்போது இக்கருவியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை மட்டுமே பதினைந்து பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தங...

டைம் இதழில் இடம்பிடித்த கலைத்துறை பிரபலங்கள்! பீட்டே டேவிட்சன், குவிண்டா பிரன்சன், மிலா குனிஸ்

படம்
        குவின்டா ப்ரன்சன் கல்வியும் நகைச்சுவையும் quinta brunson குவின்டா ப்ரன்சனை வெறும் எழுத்தாளர் என்று கூறிவிடமுடியாது. அவர் தயாரிப்பாளர், நகைச்சுவைக் கலைஞர் என பொறுப்புகளை ஏற்று செய்தார். தான் செய்யும் வேலையை மாணவராக கற்றுக்கொள்ளவும், அதில் தேர்ந்த குருவாகவும் இருக்க முடிவது ஆச்சரியம்தான். டிவி தொடர்களில் நிறைய மாற்றங்களை தனது நடிப்பு, தயாரிப்பு மூலம் செய்து வருகிறார். அப்போட் எலிமெண்டரி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பொதுக்கல்வியில் உள்ள பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வரும் நகைச்சுவையில் பிரச்னைகளை பேசுவதுதான் குவின்டாவின் தனித்துவம். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் தனது நிகழ்ச்சி மூலம் சிறப்பாக இணைத்து அறிய வேண்டுவனவற்றை அறிய வைப்பதுதான் குவிண்டாவின் புத்திசாலித்தனம். தடைகளை உடைத்து நகைச்சுவை மூலம் நிறைய கதவுகளை குவின்டா திறந்து வைத்துள்ளார். லெப்ரோன் ஜேம்ஸ் கூடைப்பந்தாட்ட வீரர் மிலா குனிஸ் ஆங்கிலப்பட நடிகை மிலா குனிஸ், அமெரிக்காவிற்கு தனது அம்மா, சகோதரருடன் வந்தவர். நடிகர் ஆஸ்டின் கட்சரை மணந்துகொண்டவர் மிலா குனிஸ். இருவருமே உக்ர...

எலன் மஸ்க் - இந்த ஆண்டின் சிறந்த மனிதர் (2021)

படம்
  எலன் மஸ்க் எலன் மஸ்க், எல்லோருக்கும் பிடிக்கிற தொழிலதிபர் கிடையாது. சிலர் கோமாளி என்பார்கள், சிலர் ஜீனியஸ் என்பார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உயரத்துக்கு கொண்டு செல்பவர்களில் எலன் மஸ்கை தவிர்க்கவே முடியாது.  எலன் மஸ்க், ட்விட்டரில் போடும் பல்வேறு பதிவுகளை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைவார்கள். கேலியாக, கிண்டலாக, மூர்க்கமாக என பலவிதங்களில் எழுதுவது உண்டு. கிரிப்டோகரன்சியை டெஸ்லா ஏற்கும் என்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் சும்மா என்று சொல்லி தனது தொழிற்சாலைகளை இயக்கப்போகிறோம் என்று அறிவித்தது, என பல்வேறு விஷயங்களில் எலன் வேற லெவல்தான். இந்தளவு நம்மூரில் யார் இருக்கிறார் என்று யோசித்தால் கொஞ்சம் அருகில் வருபவர் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மட்டுமே. இந்த கட்டுரை எலனின் நிறுவனங்களைப் பற்றி பேசும் பொறுப்பைக் கொண்டது. தொடங்கலாமா? பேபால்  ஆன்லைனில் பணம் கட்டும் சேவை 1.5 பில்லியன் டாலர்களுக்கு நிறுவனத்தை விற்றார் எலன். எலன் தொடங்கிய இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனம் எக்ஸ்.காம். இது ஒரு ஆன்லைன் வங்கி. 1999ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தொடங்...

ஏமனில் நடைபெறு்ம் போர்களை ஆவணப்படுத்தும் பெண்மணி! ராத்யா அல்முடாவாக்கல்

படம்
        ராத்யா அல்முடவாக்கல்       ராத்யா அல்முடவாக்கல் கடந்த ஆண்டு நான் ஏமனில் மனித உரிமைக்காக பாடுபடும் ராத்யாவைச் சந்தித்தேன் . அப்போது அமெரிக்கா அந்நாட்டிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப பெறும் முடிவில் இருந்தது . ஏமன் நாட்டு மக்கள் பசியோடு இல்லை பசியோடு இருக்கவைக்கடடுகிறார்கள் என்று ராத்யா கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இயற்கை பேரிடர் இல்லாமல் மனிதர்களால் உருவான போரால் ஏமனில் மக்களின் வாழ்க்கை பாதாளத்திற்கு போய்விட்டது . நான்கு ஆண்டுகளாக சௌதி அரேபியா , அமெரிக்க அரசின் உதவியுடன் ஏமன் மீது போர் செய்து வருகிறது . இங்குள்ள ஹூதி புரட்சியாளர்களை அழிப்பதாக சொல்லி போரிடுகிறது . இதனால் அழிந்தவர்களும் , காயமுற்றவர்களும் மக்கள்தான் . சௌதியின் வருமானத்தில் பாதிக்கும் மேல் அமெரிக்காவுக்கு செல்கிறது . அமெரிக்க ஆயுத சப்பளை மூலமே முன்னுக்கு வந்துவிடும் போல . ராத்யா தனது வடானா அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துவருகிறார் . கூடவே போரால் பாதிக்கப்படும் மக்களின் இழப்பை ஆவணப்படுத்தி வருகிறார் . அவரும் அவரது ச...

மனிதநேயமிக்க பெண்மணி! - மிச்செல் ஒபாமா

படம்
          மிச்செல் ஓபாமா         மிச்செல் ஓபாமா முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி . இவரை நீங்கள் விரும்புவது கொடுக்கப்பட்டு நான்கு வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கவே முடியாது . பல்லாயிரம் ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறார் . இவரை நான் முதன்முதலில் ஒபாமாவின் பதவியேற்பு விழாவின்போதுதான் பார்த்தேன் . அடக்கமான தன்மையில் பார்ப்பவர்களை ஈர்க்கும் தன்மையுடன் எளிமையாக காணப்பட்டார் . மிச்செலிடம் உரையாடுவது என்பது தலைமை ஆசிரியரிடம் உரையாடுவது போன்ற கண்டிப்புடன் இருக்காது . நமது அம்மா , அக்கா , தங்கைகளுடன் எப்படி உரையாடுவோமோ அந்த தன்மையில் உரையாடுவார் . அதிகாரத்தின் தொனி சிறிது கூட இல்லாமல் அவர் பேசுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான் . முதல் ஆப்ரோ அமெரிக்க பெண்மணி வெள்ளை மாளிகையில் இருக்கிறார் என்பது நிச்சயம் வரலாற்றில் முக்கியமானதுதான் . ரீச் ஹையர் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி பள்ளி செல்லுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் அபாரமானது . பியான்ஸ்...

ஃபேஷன் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஆடை வடிவமைப்பாளர்! - பையர்பாலோ பிகியோலி

படம்
    பையர்பாலோ பிகியோலி             டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் பையர்பாலோ பிகியோலி 1967 ஆம்ஆண்டு இத்தாலி நாட்டின் ரோமில் பிறந்தவர் . இவர் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனராக உள்ளார் . தற்போது வேலன்டினோ என்ற பிராண்டின் கிரியேட்டிவ் இயக்குநராக உள்ளார் . இவரும் மரியா கிரேசியா சியுரி என்பவரும் பல்லாண்டுகளாக இணைந்து ஃபேஷன் துறையில் பயணித்தனர் . இவர்கள் இருவரும் சேர்ந்த பணியாற்றியபோது பிராண்டின் வருமானத்தை நூறு கோடிக்கும் அதிகமாக உயர்த்தினர் . நிறுவனத்தின் கிளாசிக்கான பல்வேறு படைப்புகளுக்கு உயிர்கொடுத்தவர்கள் இவர்கள்தான் . இந்த இணையின் வடிவமைப்பு பணி வேலன்டினோவில் பல்லாண்டு என்பதை இருபது ஆண்டுகள் என புரிந்துகொண்டு படியுங்கள் . சரியாக இருக்கும் . பிறகு மரியா டையர் என்ற பிராண்டின் வடிவமைப்பாளராக மாறினார் . பிகியோலி வேலன்டினோவின் ஒரே கிரியேட்டிவ் இயக்குநராக மாறினார் . தனது வடிவமைப்பிற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பிகியோலி . வேலன்டினோ நிறுவனத்தின் அடித்தளத்தை பலமாக்கியவர்களில் முக்கியமானவர் இவர் . வடிவமைப்பாளர்களுக்கான அங்கீகாரத்...