இடுகைகள்

கேஎன்எஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரு மின்னூல்கள் வெளியீடு - காணாமல் போவதில்லை புலிகள் - திராவிட திருநாடு

 காணாமல் போவதில்லை புலிகள் (Kaanamal povathillai pulikal): குங்குமம் செய்திக்கட்டுரைகள் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPX27WB7 திராவிட திருநாடு (Dravida thirunadu): தமிழ்நாட்டின் மேம்பாடும் சீர்திருத்தங்களும் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPR47YW8

பிரதிலிபி தமிழ் தளத்தில் உள்ள இலவச தமிழ் நூல்கள்!

படம்
         வெகு நாட்களுக்குப் பிறகு பிரதிலிபி தமிழ் தளத்திற்கு சென்றபோது கிடைத்த அட்டைப்படங்கள் இவை. என்றோ எழுதி பதிவிட்டு பிறகு மறந்துபோனவை. முத்தாரம் இதழில் வேலை செய்தபோது எழுதுவதற்கு அப்போதைய முதன்மை ஆசிரியர் பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு பிறகு வந்த முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் இதழை முழுமையாக மாற்றி அமைக்க துணை நின்றார். கூடுதலாக, கார்ட்டூன் கதிரின் சோர்வறியாத கடுமையான உழைப்பால், அழகான ஓவியங்களால் இதழ் புதிய பொலிவு பெற்றது. இருவருமாக பணியாற்றிய அந்த காலகட்டத்தை மறக்க முடியாது.  அப்போது தொடர் எழுதி இதழுக்கு உதவிய திரு. இளங்கோ கிருஷ்ணன் (தமிழ்வலம்), திரு.த.சக்திவேல் (ஒரு படம் ஒரு ஆளுமை), திரு. பேராச்சி கண்ணன்(சென்னை சீக்ரெட்ஸ்) ஆகிய நண்பர்களின் உதவியை மறக்க முடியாது. இந்த நூல்கள் பிரதிலிபி தளத்தில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றையும் வாசகர்கள் காப்புரிமை பிரச்னையின்றி வாசிக்கலாம். பகிரலாம்.  https://tamil.pratilipi.com/search?q=anbarasu   இந்த நூல்களை ஆப் தரவிறக்கி வாசிக்கும் சிக்கல் உள்ளதா, வலைத்தளத்திலேயே வாசிக்கலாமா என்று ...

உண்மையைச் சொன்னால் மனதுக்கு உறுத்துமே? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?   அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன். பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை. நிதானமாகத்தான் படித்து வருகிறேன். இரண்டு இந்தியா  பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள். வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள். உண்மையத்தான் பேசியிருந்தார். பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார். உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே? சங்கிகள் உடனே வரிந்துகட்டி  கிளம்பிவிட்டனர். இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது. வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள்.  கடந்த 16ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதைப் படித்தேன். இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரின்  கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்க்க மகிழ்ச...