இடுகைகள்

ஏகபோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெரிய வணிகம் செய்வதிலுள்ள லாபம் - பாயும் பொருளாதாரம்!

படம்
  5 பாயும் பொருளாதாரம் பெரிய தொழில் பெத்த லாபம் இந்தியாவில் சாதி இருக்கிறதோ இல்லையோ, சிறுகுறு தொழில்கள் நிறைய அழிந்துவிட்டன. வரி தீவிரவாதம் ஒருபுறம், பெருவணிகர்களின் எல்லைமீறிய வணிகம், அரசின் ஆதரவின்மை எல்லாமே முக்கிய காரணம். பெரிய வணிகம் எப்படியோ கடன் பெற்று அதை அரசே ஏற்றுக்கொள்ள பிழைத்துவிடுகிறது. பொதுவாக நிறைய பொருட்களை வாங்குபவர்களுக்கு அதன் விலை இயல்பாகவே குறைவாக வருகிறது. அவர் அதை விற்று வரி தீவிரவாதத்தை சமாளித்து தேர்தல் பத்திரத்தை வாங்கிவிட்டால் போதும். வணிகத்தை காப்பாற்றிவிடலாம். தொழில் தடுமாறுகிறதா, பாரத்தை தள்ளும்போது ஐலேசா சொல்வது போல பாரத் மாதா என அலறி அழுதால் போதும். தொழில் நன்னிலைக்கு மீண்டும் விடும். பெரிய தொழிலோ, சிறு தொழிலோ திறமையான தொழிலாளர்கள் முக்கியம். பொருட்களை நவீனமான செயல்முறையில் உற்பத்தி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. பெரிய தொழில் பார்க்க பிரமாண்டமாக தெரிந்தாலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம். நிறைய பிரிவுகள் இருப்பதால், பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமாட்டார்கள். செக்குமாடு போல மாதசம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். உழைத்தாலும் பாராட்...

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் ...